பூ மூக்கிற்க்கு இன்பம் கொடுக்கும். இசை காதுக்கு இன்பம். ஸ்பரிசம் தோலுக்கு இன்பம், அழகான ஒன்றை பார்த்தால் கண்ணுக்கு இன்பம், சுவை நாக்கிற்க்கு இன்பம். உணவில் வரும் வாசனை மூக்கிற்க்கும் இன்பம் கொடுக்கும். சிலது மூன்று உணர்வுக்கும் இன்பம் அளிக்கும். ஐந்து புலணுக்கும் இன்பம் அளிக்க கூடிய ஒன்று என்றால் அது ஆணும் பெண்ணும் இணையும் காமம். அப்படிப்பட்ட காமத்தை ரொம்ப நேரம் அனுபவிக்க முடியாது. மனம் சோர்வு அடையவில்லை என்றாலும் உடல் சோர்ந்து விடும். இப்படிப்பட்ட […]
Author: sasikumar
உருவமா அருவமா
இறைவனுக்கு உருவம் தேவையா அல்லது தேவையில்லையா! இறைவனை உணர்ந்தவர்கள் நமக்கு புரியவைப்பதற்க்காக பல முறைகளை கையாண்டுள்ளனர். எல்லோரும் இறைவனை உணரமுடிவதில்லை. அத்தி பூத்தாற் போல் அங்கொன்று இங்கொன்றுமாக நடக்கிறது. அதனால் புராணம், இதிகாசம், கோயில், சடங்கு, சாதி, மதம், தொழில் போன்ற எண்ணெற்ற துறைகளிலும் இறைவனை பற்றி பதிவு செய்துள்ளனர். குழந்தைகளால் நிச்சயமாக அருவ நிலையை வணங்க முடியாது. அவர்களுக்காக ஏற்படுத்திய முறை தான் கோயில். கோயிலில் பல தத்துவங்களை மறைத்துவைத்துள்ளனர். பலரால் உருவத்தை மட்டும் தான் […]
பித்ருதோசம்
அண்டம் என்றால் இந்த உலகத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள். பிண்டம் கரைகிற மாதிரி நாமும் கரைந்துவிடும் என்ற உண்மை பலருக்கு தெரியாது. இறைவனை தேடும் முயற்ச்சியில் அக்னியில் நிற்கும் நிலை உருவாகும். அக்னியில் நிற்கும் பொழுது மனம் தூய்மை அடைகிறது. அக்னி என்பது குண்டத்தில் விறகு, நெய் போட்டு எரிப்பதல்ல. அக்னி வேறு நெருப்பு வேறு. தம்முடைய அசுத்தத்தை நீக்கவே சீதை அக்னியில் இறங்கினாள். கங்கையில் நீராடினால் நாம் புனிதமாவோம் என்பது முன்னோர் வாக்கு. […]
திருஇடம் – திராவிடம்
திரு + இடம் மாறி திராவிடம் ஆனது என்று தொல்காப்பிய சிந்தனையாளர் பதிவிலுள்ள புலவர் இரா.இளங்குமரனார் உரையில் கேட்டேன். Source : https://www.youtube.com/watch?v=6nYDsaUJswg திரு என்றால் உயர்ந்த, மேன்மையுள்ள என்று பொருள். திருப்பதி, திருத்தணி, திருச்செந்தூர், திருச்செங்கோடு, திருவண்ணாமலை போன்று பல பிரபலமான ஊர்கள் இருக்கிறது. திரு இடம் என்றால் குருவின் பார்வையில் கல்வி கற்கும் இடம் தான். அந்தனர்கள் உள்ள இடம். அந்தம் என்றால் முடிவு. முடிவை அறிந்தவர், இறைவனை உணர்ந்தவர்கள் என்று பொருள். அந்தனர்களை […]
உயிர் வேறு இறை வேறு
இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்பது முன்னோர் வாக்கு. உயிர் தான் இறைவன் என்றால் ஏன் மற்ற கிரகங்களில் உயிர் இல்லை. ஏன் விசமாக்கும் இடத்தில் உயிர் வாழ முடியவில்லை. அப்பொழுது உயிரும் இறைவனும் வெவ்வேறு போல. எல்லா இடத்திலும் இருக்கும் இறைவன் உயிரிலும் கலந்து இருக்கிறான் என்று சொல்லலாம். உயிர் தான் இறைவன் என்று சொல்லத்தகுமோ! சிந்தனை செய்வோம். மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். –சசிகுமார் சின்னராஜு
பானையும் குளங்களும்
அக்காலத்தில் பானையில் தான் பெரும்பாலும் சமைப்பார்கள். பானையில் செய்த சாப்பாடு சுவை கூடுதலாக இருக்கும். தண்ணீர் தேங்கும் நீர்நிலைகளாகிய ஏரி, குளம் போன்ற இடத்திலிருந்த களிமண்ணை கொண்டு தான் பானை செய்வார்கள். அப்படி எடுக்கும் பொழுது தானாகவே தண்ணீர் தேங்குவதற்க்கு வசதியாக அமைந்தது. இப்பொழுது எல்லோரும் அலுமினியம், வெள்ளி பாத்திரத்திற்க்கு மாறி விட்டோம். அதனால் குளங்களும் ஏரிகளும் அழிந்துகொண்டு வருகின்றன. மீண்டும் பானையில் உணவுகளை சமைத்தால் குளங்களும் ஏரிகளும் தானாகவே தூர்வாரப்படும். நீர்நிலைகளை பாதுகாக்க முடியும். சிந்தனை […]
உணவு இறக்குமதியும் பொருளாதாரமும்
தங்கள் உணவுகளில் கோதுமை, மைதா, இரவை, பரோட்டா, சப்பாத்தி, பிரட் இருக்கிறதா! அப்படியென்றால் தமிழகத்தில் வறட்சி மற்றும் பொருளாதார சீர்கேடுக்கு தாங்களும் உடந்தை என்று சொன்னால் நம்புவீர்களா! மிக மிக முக்கியமான காரணம் அலோபதி மருத்துவர்கள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா! அவர்கள் தான் சப்பாத்தி, பிரட்டை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள். மருத்துவர்கள் என்ன செய்ய முடியும், அவர்கள் படித்தது அப்படி தானே! சப்பாத்தி, கோதுமையை பாடப்புத்தகத்தில் வைத்தவன் தான் பொருளாதார சீர்கேடுக்கு முக்கிய காரணம். பெரும்பாலும் […]
சாதியின் அர்த்தங்கள்
நாம் சாதியின் அடிப்படையில் வாழ்வதால் எமக்கு தெரிந்த சாதியின் அர்த்தங்களை மட்டும் பதிவு செய்கிறேன். முதலில் தொழில் ரீதியாக சாதியை பிரிக்கப்பட்டிருக்கிறது. வேளாளர் என்பது விவசாயம் செய்பவர். மீனவர் என்பவர் மீன் பிடித்து விற்பவர். வன்னார் என்பது சலவை தொழில் செய்பவர். நாவிதர் என்பது முடி எடுப்பவர் மற்றும் அழகு சேர்ப்பவர். குயவர் என்பது மண் பாண்டம் செய்பவர். தச்சர், கற்தச்சர், கொல்லர், பொற்கொல்லர், கன்னார் என ஐந்து தொழிலை குறிப்பது கம்மாளர் சாதி. நுணுக்கங்கள் நிறைந்த […]
குலதெய்வம்?
இறைவனை உணர்ந்தவர்கள் தான் தெய்வம். அப்படி உணர்ந்தவர்கள் தன் பிள்ளை, சுற்றோர் என்று பாரப்பட்சம் பார்க்கமாட்டார்கள். அப்படி இருக்க குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் அல்லது குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டும் குலதெய்வம் உதவுமுன்னு சொல்வது சரியா! தவறா! இறைவனை உணர்ந்தவர்கள் அங்கு பூசாரிகளாக இருந்தால், வரும் அன்பர்களை வழிநடத்துவார்கள், ஆனால் அப்படி இருப்பதாக தெரியவில்லை. குலதெய்வத்தின் சரியான பார்வை என்ன? -சசிகுமார் சின்னராஜு
மதுவை / குடிபோதையை நிறுத்த முடியுமா?
மது குடிப்பவர்களிடம் கேட்ட போது எனக்கு சந்தோசம் குறைவாக உள்ளது அதனால் குடிக்கிறேன். காலை முதல் மாலை வரை வேலை செய்ததால் உடல் வலி ஏற்படுகிறது, தூக்கம் வரவில்லை அதனால் குடிக்கிறேன். மனம் பாரமாக இருக்கிறது அதனால் குடிக்கிறேன். குடியினால் ஏற்படும் போதை எனக்கு பிடித்திருக்கிறது. ஒவ்வொருவரும் பதிலை சொல்கிறார்கள். நமக்கு தேவையான சந்தோசம் கிடைக்கவில்லை என்றால் மயக்கம் தரும் போதை தான் தீர்வு என்று முடிவெடுக்கிறோம். உண்மை என்ன வென்றால் மனம் நிம்மதியை நாடுகிறது. அதற்க்கு […]
வாழ்வியல் முறை
நமது உடலையும் மனதையும் பக்குவபடுத்தினால் மட்டுமே நாம் நிம்மதியாக வாழமுடியும். அதற்க்காக சில வழிமுறைகளை முயற்ச்சி செய்தால் நலமுடன் வாழலாம். பேதி, எனிமா, வாழை இலை குளியல், மண் குளியல், விரதம் போன்ற முறைகள் இயற்கை மருத்துவத்தில் உள்ளது. அதை தெரிந்து செயல்படுத்தினால் நமது உடலில் இருக்கும் அழுக்குகள் வெளியேற்றப்படும். அழுக்குகள் வெளியேறினால் மட்டுமே எதிர்ப்பு சக்தி அதிகமாகி வியாதியில் இருந்து நம்மை காப்பாற்ற முடியும். பேதி: குடலை விளக்கெண்ணெய் அல்லது மாத்திரை மூலம் சுத்தம் செய்யும் […]
கார்த்திகை தீபம்
கார்த்திகை மாதம் பௌவர்னமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் சேரும் பொழுது மக்கள் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி கொண்டாடுகின்றனர். பிரமனும் விஷ்னுவும் யார் பெரியவர் என்று போர் செய்யும் பொழுது சிவன் ருத்ரனாக மாறி சோதிப்பிழம்பாக தோண்றினார். அதை பார்த்து இருவருக்கும் அகங்காரம் குறைந்து சோதியை வணங்கினர். இச்சோதியின் மகிமையை தெரிந்து கார்த்திகை தீபத்தை கொண்டாடுகிறோம். பஞ்ச பூதங்களில் அக்னி அல்லது நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை. சிவனின் அக்னி வடிவத்தை திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. […]
ஜெல்லி கட்டு/ கூளி விளையாட்டு
மாடுகளை குளிப்பாட்டி பூஜை செய்து கொம்புகளுக்கு பல வர்ணம் பூசப்பட்டு சலங்கைகளும் பூ மாலைகளும் அணியப்படுகிறது. ஒரு பொதுவான இடத்தில் ஒரு சில மாடுகளை மட்டும் தேர்வு செய்யப்படுகிறது. நான் சிறிய வயதாக இருக்கும் பொழுது அந்த மாடுகளுக்கு சாரயம் போன்ற போதையை மூங்கில் புணலை வைத்து வாயிலில் ஊற்றினார்கள். எதற்க்கு என்று பல நாள் கேள்வியை என்னுள் கேட்டுக்கொண்டேன். போதையை கொடுத்த பிறகு மாடு முரட்டுத்தனம், திசை தெரியாத தள்ளாடும் தன்மை அதிகமாகும். முன்பே அம்மாட்டிற்க்கு […]
பொங்கல் திருவிழா
பொங்கல் என்பது நாம் வருடந்தோரும் சூரியனை வணங்கி அரிசியில் இனிப்பு சேர்த்து பொங்கல் வைத்து கொண்டாடுவது என்றும், விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவதற்க்காக என்று நினைத்து கொண்டாடுகிறோம். தேவையில்லாத குப்பைகளை எரிப்பது அல்லது அப்புறப்படுத்துவதற்க்கான நாளை போகி பண்டிகையாக கொண்டாடுகிறோம். இதுபோல உண்மை இருக்கும். இந்த பொங்கல் பண்டிகைக்கும் யோகா அல்லது கடவுள் வழிபாட்டுக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது. நம் உடலில் உயிர் இருக்கிறது அல்லவா. உயிர் இல்லாத உடலை பிணம் என்று சொல்வோம். இந்த உயிரைத்தான் ஜீவன், […]
விநாயகர்
விநாயகன் என்பது விசேசமான ஒருவன் என்றும், வினைகளை கடந்தவன் என்றும் அறிப்படுகிறான். விநாயகனுக்கு சித்தி மற்றும் புத்தி என இரண்டு மனைவிகள். மனங்களை சித்தி, புத்தியாகவும் பிரிக்கப்படுகிறது. சித்தி என்பது உணர்ச்சிகள் மூலம் அறிவது. பசி, தாகம், அன்பு போன்ற உணர்வுகளை சித்தி என்று சொல்லப்படுகிறது. புத்தி என்பது ஞாபகத்தில் இருப்பதை பகுத்து பார்ப்பது. ஒரு தந்தம் உடைந்திருப்பது அகங்காரத்தை வென்றவர் என செய்தி. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற அளவற்ற ஐந்து பெரிய […]