பால் குடித்தால் உடலுக்கு நல்லதுன்னு சொல்லி பெரும்பாலோர் பால் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிறந்த குழந்தை தாய் பால் குடித்தால் உடலுக்கு நல்லது. அதுவே இரண்டு வயதுக்கு மேல் குடித்தால் சீரனம் ஆகாது. அப்பொழுது மாட்டுபாலும் சீரனம் செய்ய இயலாது. அப்படிபட்ட மாட்டு பாலை சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ஏதோ ஒர் விதத்தில் சாப்பிடுகிறார்கள். இது தேவைக்கு மீறிய உணவு வகையை சார்ந்தது. அதிகமான உடல் உழைப்பு உள்ளவர்கள் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. அதுவே உடல் உழைப்பே இல்லாதவர் சாப்பிட்டால் சீரனம் ஆகாமல் சளி பிடிக்கும். பின்பு அது பல நோய்களுக்கு வித்திடும். அப்படியே பால் குடிக்க வேண்டுமென்றால் நாட்டு மாட்டுப்பாலில் கால் பங்கு தண்ணீர் கலந்தும், எறுமை மாட்டுப்பாலில் அரைப்பங்கு தண்ணீர் கலந்தும் குடிக்க வேண்டும். அதுவுமில்லாமல் பாலில் காலை இஞ்சி, மதியம் சுக்கு கலந்து குடிக்க வேண்டும். கண்ணுபோட்ட மாட்டு பாலை ஒரு வாரத்திற்க்கு குடிக்க கூடாது. குடித்தால் நிச்சயம் சீரனம் செய்ய இயலாது. அதையும் மீறி சாப்பிட்டால் மந்தத்தன்மை, சோம்பல் வரும். பாலோ அல்லது தேநீர் பழக்கமிருந்தால் அதை நன்றாக சுவைத்து பத்திலிருந்து பதினைந்து நொடி வரை வாயில் வைத்து சாப்பிட்டால் சக்தியும் சேரும், தொட்டில் பழக்கமும் உதிர்ந்து விடும்.
நாட்டு மாடு, எறுமை மாட்டுப்பால் குடித்தால் கூட ஒன்றும் ஆகாது ஆனால் இன்று பெரும்பாலும் குடிக்கும் பால் ஜெர்சி வகையை சார்ந்த பன்னி மாட்டுப்பால். அதென்ன பன்னிமாடுன்னு கேக்கிறீங்களா? மாடும் பன்னியும் இனைந்த ஒரு கலவையை உருவாக்கியதால் இதற்க்கு பன்னி மாடு என்று அரசல் புரசலாக பேசிக்கொள்கிறார்கள். இதை ஜெர்சி தீவீலிருந்து வந்துள்ளதால் ஜெர்சி மாடுன்னு சொல்லப்படுகிறது. பால் கறப்பதற்க்காகவே வளர்க்கபடுகிறது. இந்த ஜெர்சி மாடு சாப்பிட்டுகொண்டே இருக்கும். சாப்பிட்டுகொண்டே இருக்கிற மனிதனை ஆராய்ந்தால் சீரனம் கெட்டு நோய் தொற்றி மூளை வளர்ச்சில்லாமல் பல விதமான நோய்களுடன் இருப்பான். அதுபோல ஜெர்சி மாடும். இப்படிபட்ட மாட்டிலிருந்து வரும் பாலை குடித்தால் மனித உடலுக்கு பல விதமான நோய் தொற்றி கொள்ளும். நாட்டு மாடு போல் அல்லாமல் ஜெர்சி மாட்டுக்கு அசை போடும் பழக்கம் மிக மிக குறைவு. அதனால் இரத்தம் நிச்சயமாக கெட்டிருக்கும். மற்ற மாடுகளை போல் வேர்வை சுரப்பதில்லை என்றும், கிருமிகள் பால் கறக்கும் பொழுது பால் தொட்டில் மூலமாக வேர்வை பாலுடனே வருகிறது என்றும் கேள்வியுற்றேன். கறக்கிற பாலிலே பல விதமான நோய் கிருமிகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தான் நமக்கு பல விதமான நோய்கள் தாக்குகிறது என்றும் சந்தேகம் வந்துள்ளது.
ஒரு நாட்டுமாடு சாப்பிடுகிற தீனியை விட பல மடங்கு தீனி இந்த ஜெர்சி மாடு சாப்பிடுகிறது. புல்லும் பூண்டும் சீக்கிரம் காலியாகுவதாலும், ஜெர்சி மாடு சாப்பிடும் வேகத்திற்க்கு புல்லும் பூண்டும் முளைக்காததாலும் வறட்சி ஏற்படுகிறது. பல மிருக குணம் என்னவென்றால் பசி எடுத்தால் நன்றாக சாப்பிட்டு விடும். அடுத்த வேளை பசி எடுக்கிற வரைக்கும் எந்த உணவும் சாப்பிடாது, அது இரண்டு நாட்கள் ஆனாலும் சரி. இந்த ஜெர்சி மாடு சாப்பிட்டுகிட்டே இருக்கும், போடற சானியிலும் சக்தி குறைவு. புல் சீக்கிறம் காலி செய்வதாலும், ஜெர்சி மாடு சாப்பிடும் வேகத்திற்க்கு புல் முளைக்காததாலும், பல்வேறு சுழற்ச்சி முறை பாதிக்கப்படுகிறது. புல் சீக்கிறம் காலியாகுவதால், நிலத்தில் உணவு உற்பத்தி பயிர் செய்வதற்க்கு பதில் மாட்டின் புல் உற்பத்தி பயிர் செய்யபடுகிறது. இந்த ஜெர்சி மாடு வளர்த்துபவர்களுக்கு தினம் விற்க்கும் பாலுக்கு வாரம் வாரம் பணம் கிடைக்கிறது. மற்ற பயிர்வகைகளை நம்பி விவசாயம் செய்தால் லாபம் பெற மூன்று மாதம் முதல் ஒரு வருட வரைக்கும் ஆகும். ஆனால் இந்த ஜெர்சி மாட்டினால் வார வார பணப்புழக்கம் உருவாகிறது. இதனால் பல விவசாய குடும்பங்கள் உணவு பயிர் செய்வதை குறைத்து மாடு வளர்க்கப்படுகிறது.
கறக்கும் பால் ஒரெடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்க்கு கொண்டு செல்வதால் திரவப்பொருளான தண்ணீர் மறைமுகமாக விற்க்கப்படுகிறது. ஒரு ஊருக்கு 100 ல் பதினைந்து பங்கு பேர் ஜெர்சி மாட்டை வளர்த்தால் பிரச்சனை வராது. ஆனால் இன்று பெரும்பாலும் மக்கள் இந்த ஜெர்சி மாட்டை வளர்த்துகிறார்கள். இதனால் தண்ணீர் ஓரெடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு கொண்டு செல்வதால் தண்ணீர் வறட்சி ஏற்பட்டு கூடிய விரைவில் பல வருடங்களுக்கு விவசாய செய்ய முடியாமல் நிலம் பாழாகும். நிலத்தில் உணவு உற்பத்தி குறைவதால் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மனிதனுக்கு தேவை என்று மனம் பாழானதால் பால் குடிக்கும் பழக்கம் அதிகமாகிறது. பால் தேவை அதிகமானால் மாடும் அதிகமாகும். தனிமனிதன் ஒவ்வொருவரும் பால் குடிப்பதை நிறுத்தினால், மாட்டுப்பால் விற்பனை ஆகாது. பாலுக்காக மட்டும் வளர்க்கப்படும் இந்த ஜெர்சி மாடும் குறைந்துவிடும். ஜெல்லிக்கட்டு தடை செய்யக்கூடாதுன்னு போராடற மக்கள் பால் குடிக்க கூடாதுன்னு போராடுங்க. அப்ப ஜெர்சி மாடு வளர்க்க விரும்ப மாட்டார்கள். பின்பு உரத்திற்க்கும் ஏர் ஓட்டுவதற்க்கும் நாட்டு மாடு வளர்க்கப்பட்டு இயற்கையும் பாதுகாக்கபடும். பால் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டாம். அப்படியே பால் குடிக்கும் எண்ணமிருந்தால் தேங்காய் பால் குடியுங்கள். ஒரு தேங்காய் பத்து ரூபாய் என்றால், மாட்டுப்பால் என்று வினியோகம் செய்யும் பாக்கெட் பால் இருபது ரூபாய்க்கு மேல் போகிறது. பாக்கெட் பாலை பாதுகாக்க என்னென்ன கலக்குகிறார்களோ தெரியவில்லை, நிச்சயம் தேங்காய் சுத்தமானது. விலையும் குறைவு, தேங்காயை துருவி தண்ணீர் சேர்த்து பாலாக மாற்றி பனை அல்லது நாட்டு வெல்லம் கலந்து சாப்பிட்டால் என்ன சுவை தெரியுமா. சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே அதன் சுவையின் இரகசியம் தெரிந்து விடும். இந்த தேங்காய் பாலை சாப்பிட்டால் ஒரு வேளை உணவாகவே மாற்றி விடலாம். மாட்டுப்பாலை எரிவாய்வு பயண்படுத்து சூடு செய்து தான் சாப்பிடவேண்டும் ஆனால் தேங்காய் பால் அப்படியே சாப்பிடலாம். இந்த தேங்காயை போல் நிலக்கடலையிலும், பச்சை பயாரிலும் பால் தயாரிக்கபடுகிறது. நிலக்கடலையும், பச்சப்பயாரையும் ஆறு மணி நேரம் ஊரவையுங்கள், பின்பு உரலில் ஆட்டுங்கள், தண்ணீர் சேர்த்து சுவைக்கு தகுந்தார் போல் சுவையை கூட்டி பருகுங்கள். உங்களுக்கு உடலில் சக்தியும் சேரும் செலவும் குறைக்கபடும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கவில்லை என்றால் பச்சைபயாறுப்பாலில் பாதி தண்ணீர் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம் என்று செவி வழிச்செய்தி. இது போன்ற சில வழிமுறைகளை பின்பற்றினால் ஜெர்சி மாடு வளர்ப்பது குறைந்து இயற்கை பாதுகாக்கப்படும்.
பெரியோர்கள் பால் குடித்தால் உடலுக்கு நல்லதுன்னு சொல்லும் கருத்து வேறு ஏதனும் பொருள் கூட பொதிந்து இருக்கும்.
“மலைமேல் இருப்பொருக்கு மாங்காய்ப்பால் இருக்க
தேங்காய் பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய் பால் ஏதுக்கடி”
என்ற பாடல் வரி வேரெதேனும் பொருள் உள்ளதா என்று ஆய்வு செய்வோம். யோகா பயிற்ச்சியில் மனதின் மீதும் மூச்சின் மீதும் கவனம் செலுத்தும் பொழுது மனதின் வேகம் குறைய குறைய மூச்சின் நீளமும் குறையும். தலைக்கும் வயிற்றுக்கும் ஓடிகொண்டிருக்கும் மூச்சு மூக்கின் துவாரத்திற்க்கும் மூக்கின் நுனிப்பகுதிக்கும் வரும், பின்பு நெற்றி பொட்டில் ஒடுங்கி மனம்ற்ற நிலையில் தவம் தொடங்கும். நெற்றிப்பொட்டிலே கவணம் செலுத்தும் பொழுது தலைப்பகுதியில் ஏதொருஇடத்திலிருந்து திரவம் தொண்டை பகுதிக்கு வரும். முதலில் விசமாகவும் பின்பு அமிர்தமாகவும் வரும் என்று பெரியோரின் கூற்று. மரத்திலிருந்து மாங்காய் ஒடித்தவுடன் எப்படி மாங்காயில் பால் சுரக்கிறதோ அது போன்ற தொண்டை பகுதியில் சுரக்கும். இப்படி சுரந்தால் பல நாட்களுக்கு பசி எடுக்காதுன்னு பெரியோர்களின் கூற்று. இந்த பாலை குடித்தால் தேகம் இரும்பு போன்றும் தங்கம் போன்று மிளிரும் என்ற கருத்தும் உள்ளது. பெரியோர்கள் சொல்லும் பால் இதுவாக கூட இருக்கலாம்.
நாட்டு மாடுகளை தடை செய்து ஜெர்சி மாடு வளர்க்க ஏன் அரசாங்கம் மக்களுக்கு உதவுகிறது என்று கொஞ்சம் சிந்திப்போம் இப்பொழுது. நாட்டு மாட்டிலிருந்து கறக்கும் பால் மிகவும் குறைவு, பல நேரங்களில் அரை லிட்டர் கூட கறக்காது. நாட்டுமாடு உற்பத்தி செய்ய காளை மாடு இருக்கும். இதனால் விவசாயிகள் யாரையும் நம்பும் அவலமில்லை. அப்படியே இருந்தாலும் கறவை மாட்டை கூடுவதற்க்கே காளை வளர்க்கும் அன்பர்களிடம் அழைத்துக்கொண்டு இனைத்து விடுவார்கள். பின்பு கரு உற்பத்தி ஆகிவிடும். பண சுழற்ச்சி முறை இரண்டு மூன்று அன்பர்களுக்குள்ளே நின்று விடுகிறது. அரசாங்கத்திற்க்கு இதனால் ஒரு லாபமும் இல்லை. விவசாய மக்களையும் கட்டுப்பாட்டில் வைக்க இயலாது. ஆனால் இந்த ஜெர்சி மாடிருக்கே, கரு உற்பத்தி செய்ய சினை ஊசி தேவைபடுகிறது. சினை ஊசி கையாளுவதற்க்கு விலங்கியல் மருத்துவர்கள் தேவைபடுகிறார்கள். சினை ஊசியும் அதனை சார்ந்த மருந்து தயாரிப்பதற்க்கு தொழிற்ச்சாலை தேவைப்படுகிறது. தொழிற்ச்சாலையிலுல்ல இயந்திரம் தயாரிப்புக்கு பொறியியல் தொழிற்ச்சாலை தேவைப்படுகிறது. பல அன்பர்களுக்கும் வேலையும் கொடுக்கபடுகிறது. பல வகையில் பண சுழற்ச்சி முறை நடைபெறுகிறது. இதனால் பல மடங்கு வரி மக்களிடமிருந்து பல வகையில் அரசாங்கத்திற்க்கும் அதனை ஒட்டிய நிறுவனங்களுக்கும் சேரும். பல மக்களையும் கட்டுப்பாட்டில் வைத்துகொள்ளலாம். இது தான் ஜெர்சி மாட்டின் இரகசியம். இதனையெல்லாம் தடுப்பது காளை மாடு. சில வருடங்களுக்கு முன்பு காளை மாட்டிற்க்கு காயடிக்கப்பட்டு அதன் சுழற்ச்சி முறையை தடுத்தார்கள். பணபுழக்கம் இந்த காளை மாட்டை ஒழிப்பதால் வருகிறது.
தண்ணீர் இரைப்பதற்க்கும், எண்ணை ஆட்டுவதற்க்கும், உமியிலிருந்து தானியங்களை பிரிப்பதற்க்கும், தானியங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு மாற்றுவதற்க்கும், ஏர் ஓட்டுவதற்க்கும் அதவாது நிலத்தை உழுதுவதற்க்கும் காளை மாடு பயன்பட்டது. ஆனால் இன்று மின்சாரம் வந்துள்ளதால் காளை மாட்டின் ப்யன் குறைந்துள்ளதால் அதை வளர்க்க விருப்பமும் மிகவும் குறைவு. மின்சாரம் நிறுத்தினால் மீண்டும் காளை மாட்டின் பங்கு அதிகமாகும். அதுவரைக்கும் ஜெர்சி மாடு வளர்ப்பது என்பது உறுதி.
ஜெர்சி மாட்டினால் அரசாங்கத்திற்க்கும் அதனை சார்ந்த நிறுவனங்களுக்கும் பல வகையில் இலாபம் இருப்பதால் ஜெர்சி மாட்டை ஊக்குவிப்பார்களே தவிர தடை செய்ய மாட்டார்கள். ஜெர்சி மாட்டினால் வறட்சியும் அழிவும் நிச்சயம் என்பது உறுதி. இதை சரி செய்ய ஏதாவது முறை இருக்கா என்று யோசித்தால் அரசாங்கம் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். இது அவ்வளவு எளிதில் முடியாது. அதனால் மறைமுகமாக நிலத்தை வறட்சி செய்து அபகரிக்க திட்டமிருப்பதாக எண்ணம். பல காலமாக சில சமுகம் நிலமே இல்லாமல் வாழ்கிறார்கள். அவர்கள் நிலத்தை ஆளும் சமுகத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதால் நிலத்தை அழிப்பதற்க்கு மறைமுகமாக போர் நிகழ்த்தினாலும் பிரச்சனை வரும். வறட்சி வந்து விட்டால் பல விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பது உன்மை. அதற்க்கு முன்பே விவசாயம் செய்யாமல் கூலித்தொழில் செய்யும் ஏழை எளிய மக்கள் நிச்சயமாக பல விதத்தில் பாதிப்படைவார்கள் என்பதும் உறுதி. வறட்சி வந்து விட்டால் பல வகையான உள்நாட்டு வியாபாரமும் கெடும். பணம் அல்லது தங்கமே வைத்திருந்தாலும் அதன் மதிப்பு இழந்துவிடும். வறட்சி வந்துவிட்டால் தற்பொழுது வாழும் இடத்தை விட்டு வேறொரு இடத்திற்க்கு தான் செல்ல வேண்டும். வறட்சி வராமல் தடுக்க ஒன்று ஜெர்சி மாடு வளர்க்க கூடாது, அல்லது பால் குடிக்க கூடாது. பாலை குடித்து பழகின நாம் குடிக்கும் பொழுது நன்றாக சுவைத்து பத்திலிருந்து பதினைந்து நொடி வரை வாயில் வைத்து சாப்பிடும் பொழுது பாலிருந்து சக்தியும் பெறுவோம். கூடிய விரைவில் தொட்டில் பழக்கமான பாலும் திகட்டி விடும். இதனால் பால் குடிக்கும் பழக்கம் நாளடைவில் குறைந்து விடும். வெளிநாட்டிற்க்கும் வெளிமாநிலங்களுக்கும் பால் ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும். பால் நிறுவனங்களை மூடித்தான் ஆக வேண்டும். பால் நிறுவனங்களை மூடினாலும் ஜெர்சி மாடு வளர்ப்பது குறைந்து விடும்.
வறட்சி வரும் வரும் என்று கருத்து பதிவு செய்யபட்டுள்ளது. ஆனால் வறட்சி வந்துவிட்டது. ஐம்பது வயதுக்கு மேல் ஆகும் ஒருவர் சொல்லும் கருத்து என்னவென்றால் நான் வாழும் செழிப்பான இடத்திலே வறட்சி என்றால் என்ன நடக்க போகிறதோ தெரியவில்லை. கடந்த ஐம்பது வருடங்களில் நான் பார்க்காத வறட்சி. ஒருத்தர மாத்தி ஒருத்தர் அழித்துகொண்டு செயல்படுவதற்க்கு பதில் இயற்க்கையும் மக்களும் செழிப்பாக மாற பல நல்ல கருத்துக்களை உள்வாங்குவோம். அதை நடைமுறை செய்வோம். மாற்றம் தேவைபடுகிறது. யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு