நமது மனம் அங்கும் இங்குமாக பெரும்பாலும் அலைந்து திரியும். அம்மனதை இறைவன் மீது நாட்டம் ஏற்படுமாறு பழக வேண்டும். ஐம்புலனை ஒடுக்கும் பொழுது தண்டத்தின் வழியே ஒளி பெருகினால் சுழுமுனை திறக்கும். அங்கே மனதை ஒருநிலையில் நிறுத்தினால் காதில் மணி ஓசை கேட்கும். மணி ஓசைக்கு நாதம் என்றும் மற்றொரு பெயர். மணி ஓசை கேட்கும் நபர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களை சுப்ரமணி என்றே அழைக்கலாம்.
செந்திருவாம் அண்டவரை மனத்தைத்தானும்
செலுத்தியே சிறுவாசற் குள்ளேசென்று
அந்தரமாய் நின்றதொரு சபையைப்பார்த்து
ஐம்புலனை யண்டமதிற் சேர்க்கும்போது
சுந்தரம்போற் சிலம்பொலியுங் காதிற் கேட்கும்
சுப்ரமண்ய னென்று சொல்லப் பேரும் கொண்டேன்
மந்திரம் போற் கும்பமுனி மகனே ஐயா
மவுனமுட னென்றிதுவே வகாய்முற்றே.
~ சுப்ரமணி ஞானம்