இப்பழமொழியை கேட்கும் பொழுது நமக்கு தவறான கோனத்தில் புரியலாம்.
அடித்தால் திருந்துவான், அடித்தால் தான் படிப்பான் என்று நமக்கு வன்முறை தூண்டும் விதமாக இருக்கலாம். ஆனால் அப்படி இல்லை.
இறைவனின் திருவடியை பற்றினால் இறைவன் நன்மையை தருவது போல் அண்ணன் தம்பி கூட உதவி புரியமாட்டார்கள் என்று அர்த்தம்.
திருவடி என்பது என்ன? இறைவன் கால் பாதமா! கால் என்பது காற்றை குறிப்பது. காற்றை பிடித்து கனலை எழுப்பினால் எண்ணங்கள் குறைந்து மனம் நிறைவு பெறும். அண்ணன் தம்பியிடம் பெறும் மகிழ்ச்சியை விட இறைவனின் திருவடியை பற்றினால் வரும் நன்மை, ஆனந்தம், முழுமை மிக அதிகம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு
Arumai ayya