நமக்கு துக்கம் காரணமாக கண்ணீர் வருவது இயல்பான ஒன்று. நோய் தாக்கத்தினால் கூட கண்ணீர் வரும். அளவுக்கு மீறி கண்களுக்கு வேலை கொடுக்கும் பொழுது கண்ணீர் வரும். அதாவது தொடர்ந்து டிவி, கம்பூட்டர் பார்ப்பதால் கண்ணீர் வரும்.
ஆனால் ஆனந்தக்கண்ணீர் என்பது அப்படியல்ல. அளவுக்கு மீறிய ஆனந்தம் அல்லது சந்தோசம் அடையும் பொழுது வரும் கண்ணீருக்கு ஆனந்தகண்ணீர். இறைவனை நினைத்து உருகும் பொழுதோ அல்லது உடலில் பிராணன் அதிகமாகும் பொழுது நமது உடலில் கண்ணீர் வரும். அளவுக்கு மீறிய இன்பம் பொங்கும் பொழுது ஆனந்தக்கண்ணீர் அருவி போல கொட்டும். அன்பில் ( சிவத்தில்) நனையும் பொழுது அருவி போல கண்ணீர் கொட்டுகிறது.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு