கரோனா வியாதியின் அறிகுறியுடன் இருந்து எந்த மருந்தும் இல்லாமல் சரிசெய்த அனுபவத்தை பகிர்கிறேன்.
எனது பெயர் சசிகுமார். வில்லிவாக்கம், சென்னை பகுதியில் தற்காலிகமாக ஒருவருடத்திற்க்கு மேலாக தங்கியிருந்தேன். ஜனவரி 20, 2020 பின் தலைவலி காரணமாக வேலை சரியாக செய்ய முடியவில்லை. ஜனவரி 28,2020 பின் ஓய்வில் இருந்தேன். தண்ணீர் தேவைக்காக வாரத்திற்க்கு ஒரு 20 லிட்டர் கேன் வாங்குவேன். தண்ணீரை நானே சென்று தான் எடுத்து வருவேன். 2020 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மாலை ஏழு மணி வரை நன்றாக இருந்தேன். 50 மீட்டர் தொலைவுள்ள கடைக்கு மூன்று முறை சென்று வந்தேன். மாலை ஏழு மணிக்கு சுகமாக இருந்த நான் முக்கால் மணி நேரத்திற்க்கு பிறகு சிறிது மூக்கில் நீர் வடிந்தது, கண்கள் எரிச்சலுடன் லேசாக தலைவலி. ஏதோ ஒன்று பரவிற்று என்பதை உணர்ந்தேன். இதுவரையும் ஏற்படாத தலைவலி. தண்ணீர் எடுத்து வரும் போது கரோனா தொற்று ஏற்பட்டதா அல்லது அதற்க்கு முன்பா என்று தெரியவில்லை.
அடுத்த நாள் காய்ச்சலுடன் உடல்வலி மூக்கடைப்பு இருமல் தொண்டை வலி ஏற்பட்டது. இதற்க்கு முன்பும் காய்ச்சல் வந்துள்ளது, அப்போது காய்ச்சல் சரியாகுற வரைக்கும் ஆகாரமெடுக்காமல் நன்றாக ஓய்வு எடுப்பேன். அப்பொழுது இரண்டு அல்லது மூன்று நாளில் சரியாகிவிடும். இந்த முறை எட்டு நாளுக்கு மேல் இருந்தது. ஆகாரம் ஏதும் எடுக்கவில்லை. எட்டு நாளில் சூப், கசாயம் அருந்தினேன். சாப்பிட்டதாக ஞாபகமில்லை. இந்த முறை காய்ச்சலில் இரண்டு பக்க மார்புபகுதியில் வலி ஏற்பட்டது. உடல் வலியும் அதிகமாக இருந்தது. எட்டு நாட்களில் ஓய்வு எடுத்ததால் காய்ச்சல் மிகவும் குறைந்தது. ஆனால் உடல் வலி, சோர்வு மட்டும் இருந்தது.
யோகாவை( தியானம் ) கற்று இருப்பதால் செய்து வந்தேன். காய்ச்சல் சரியான பிறகு யோகா செய்ய முயற்சி செய்த பொழுது கடுமையான உடல்வலி மற்றும் மார்பக வலி காரணமாக படுக்கத்தான் மனம் ஏங்குகிறது. வியாதி மீண்டும் வரலாம் என்ற எண்ணமும் தோன்றியது. எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சிறிது சிறிதாக யோகாவை முயற்சி செய்தேன். காலை மாலையில் சுகாசனத்தில் அமர்ந்து அசையாமல் ஒரே இடத்தில் மூன்று மணி நேரத்திற்க்கு மேலாக யோகவை செய்தேன். ஒரு வாரத்தில் எல்லாம் சரியானது. பிப்ரவரி மாதம் 18 ம் தேதிக்குள் சரியானது.
நான் டீவி செய்திகளை அதிகமாக பார்க்கமாட்டேன். மார்ச் மாதம் இறுதியில் தான் கரோனா என்ற வியாதி பரவுகிறது என்ற செய்தி வந்தது. கரோனாவின் அறிகுறிகளும் எமக்கும் ஒரே மாதிரியாக தான் இருந்தது.
புத்தர் விளிப்புணர்வு பெறுவதற்க்கு விபாசனா என்ற யோகா முறையை கையாண்டர். அந்த விபாசனா யோகா முறையை மூன்று மணி நேரத்திற்க்கு மேல் செய்த பொழுது உடலில் வியர்வை அதிகமானது. சளியும் வெளியேறியது. காலையில் மூன்று மணி நேரத்திற்க்கு மேலாகவும் மாலையில் மூன்று மணி நேரத்திற்க்கு மேலாகவும் செய்தேன். உடல் வலி மற்றும் மார்பக வலி காணாமல் போனது. 2020 பிப்ரவரி மாதம் 18 ம் தேதிக்குள் சரியானது.
எதிர்ப்பு சக்திகள் அதிகமாக
காய்ச்சல் இருக்கும் பொழுது ஏதும் பசிக்காது, சாப்பிட வேண்டிய அவசியமில்லை. சாப்பிட்டால் காய்ச்சல் எளிதில் தீராது. நன்றாக ஓய்வு எடுக்கவும்.
பசித்தால் மட்டும் சாப்பிடவும். உணவை நன்றாக மென்று சாப்பிடவும். சாப்பிடும் பொழுது உணவின் மீது கவனம் இருக்க வேண்டும். அரை வயிறு மட்டும் சாப்பிடவும்.
பழங்கள், பழச்சாறுகளை அதிகமாக சாப்பிடவும். பழச்சாறுகளை வெள்ளை சர்க்கரையுடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரைக்கு பதில் வெல்லம் எடுக்கலாம்.
அதிகமாக சாப்பிட்டாலோ, உடலுக்கு மிகுந்த காரமோ அல்லது மற்ற சுவை சேர்த்தால் சளி வரும். கெட்டுபோன உணவை சாப்பிட்டால் சளி உருவாகி விடும். உடல் தேவைக்கு மீறிய சூடோ அல்லது குளிர்ச்சியோ இருந்தால் சளி வரும். உடலுக்கு ஒத்துவராத பொருள் உடலில் இருந்தால் சளி உருவாகி நம்மை காப்பாற்றும். வைரல் கிருமி நுரையீரலில் இருப்பதால் சளி உருவாகிவிடும். தொடர்ந்து கிருமி பெருகுவதால் சளி அதிகமாகி மூச்சை அடைத்து நம்மை கொல்லும்.
மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்கவில்லை என்றாலோ, மருத்துவத்தின் மீது அதிருப்தி இருந்தாலோ அல்லது வாகன வசதி இல்லை என்றாலும் கீழே சொன்ன முறையை கடவுளை நினைத்து முயற்சி செய்யவும்.
ஒரு இடத்தில் அமருங்கள். உடலின் பகுதிகளை மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாக ஒவ்வொரு பகுதியாக கவனிக்கவும். தலை பகுதியை 10 பாகமாக பிரித்து ஒவ்வொரு பகுதியையும் அரை நிமிட நேரம் கவனிக்கவும். மனதை சம நிலையுடன் வையுங்கள். மூச்சை இழுக்கவும் தேவையில்லை, வேகமாக விடவும் தேவையில்லை. பிறகு முகம், கழுத்து, கை, உடல், கால் எல்லாத்தையும் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் கவனிக்கவும். மனம் அலைபாய்ந்தால் மீண்டும் விட்ட இடத்தில் கவனிக்கவும். மேலும் கீழுமாக கவனிக்க ஒரு மணி நேரத்திற்க்கு பிறகு நெருப்பில் நடப்பது போல் உடலின் பல பகுதிகளில் வலி ஏற்படும். அப்பொழுதும் உடல் அசையாமல் அமர்ந்தால் உடலில் வியர்வை அதிகமாகி வியாதிகள் சரியாகும். தியானத்தை மூன்று மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து செய்வதால் உடலில் நரம்பு மண்டலம் வலுப்பெறுகிறது. தேவையில்லாத சளி போன்ற அழுக்குகள் கொழுப்புகள் கரைந்து விடும். அதனால் உடல் புத்துணர்ச்சியுடன் மாறும். பல வியாதிகள் சரியாகுவதற்க்கு வாய்ப்பு மிகவும் அதிகம்.
பெரும்பாலும் மருந்துகள் உடலிலே இருக்கிறது. அதை பெறுவதற்க்கு மனதை சுத்தம் செய்ய வேண்டும். கரோனா போன்று பல வியாதி பரவுகிறது என்று தகவல் வருகிறது. விளிப்புணர்வோடு இருக்கவும்.
மேலே சொன்னது எல்லாம் அனுபவம். ஒரு முறை முயற்சி செய்துபார்த்தால் என்ன நடக்க போகிறது என்று எண்ணம் எழ வேண்டும். அவர்களுக்கு நிச்சயமாக இப்பதிவு உதவும்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு