தீபாவளி

காமம், கோபம், பொறாமை, டம்பம், வஞ்சம் போன்ற நரக வேதனை தருவது அசுரர் எனப்படும்.  இதைத்தான் நரகாசுரன் என்கிறோம்.

வளி என்பது காற்று.  நமது உடலில் தீபம் உள்ளது. அஃது சரியான முறையில் ஏற்றாமல் அல்லது வெளிச்சமில்லாமல் உள்ளது. காற்றைக்கொண்டு கனலை(வெளிச்சத்தை) ஏற்ற வல்லவர்களுக்கு நரக வேதனை தரும் அசுர குணம் அழிக்கப்பட்டு இறைவன் அருளை பெறமுடியும். அதன் காரணமாக தீபாவளி கொண்டாடுகிறோம்.

எண்ணை தேய்த்து குளித்து உடலிலுள்ள அழுக்குகளை வெளியேற்றுவதுபோல மனதிலுள்ள அழுக்குககளையும் வெளியேற்றினால் மிகவும் சுகமான சொர்கத்தை பெறமுடியும்.

அம்மாவாசை, காகம், சூன்யம், முன்னவன் போன்றவை வெவ்வேறு பெயராக இருந்தாலும் ஒரே சத்தியத்தை சொல்லக்கூடியது. தீபாவளியை அம்மாவாசையில் கொண்டாடுவது இதனால் தான்.

நோன்புமுடி என்பது இறைவன் அருளை பெறுவதற்க்கான தீட்சை அல்லது வழிமுறை.

தினம் கொண்டாடினால் மிகவும் சிறப்பு. ஞாபகத்திற்க்காக ஒருநாள் கொண்டாடுகிறோம்.

வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் தீபாவளியை என்றும் மறக்காதிர். அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.

-சசிகுமார் சின்னராஜு

Share

sasikumar

i am sasikumar graduated as an Electrical and Electronics Engineer. Now i am working as software web developer. Since my college first year onwards my thoughts move towards peace and still i collecting information related to simple and happy living style. Here i share Information related to health, simple life style and yoga.

3 thoughts to “தீபாவளி”

  1. Wonderful Thought…
    All the best for the awareness you have.
    Love and peace may filled with you all the time.

Comments are closed.