அண்டம் என்றால் இந்த உலகத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள். பிண்டம் கரைகிற மாதிரி நாமும் கரைந்துவிடும் என்ற உண்மை பலருக்கு தெரியாது. இறைவனை தேடும் முயற்ச்சியில் அக்னியில் நிற்கும் நிலை உருவாகும். அக்னியில் நிற்கும் பொழுது மனம் தூய்மை அடைகிறது. அக்னி என்பது குண்டத்தில் விறகு, நெய் போட்டு எரிப்பதல்ல. அக்னி வேறு நெருப்பு வேறு. தம்முடைய அசுத்தத்தை நீக்கவே சீதை அக்னியில் இறங்கினாள். கங்கையில் நீராடினால் நாம் புனிதமாவோம் என்பது முன்னோர் வாக்கு. அக்னி, கங்கை இரண்டும் ஒன்று போல தெரிகிறது. அந்த அக்னியில் நிற்கும் பொழுது மனமும் உடலும் கரைந்து சிவத்தில் லயிக்கிறது. அதனால் தான் செத்த பின்பு பிண்டம் இன்னும் கரையவில்லை என்று சொல்லும்விதமாக பிண்ட உருண்டையை நீரில் கரைக்க சொல்வார்கள். மண்ணை கரைப்பதும் இதுவே. ஒரு பொருளை மறைப்பது, எரிப்பது, கரைப்பது, இல்லாமல் ஆக்குவது போன்ற சடங்குகளை காணலாம். பித்ரு, முன்னோர், காகம், எள், அம்மாவாசை, சூன்யம் எல்லாம் ஒன்று போல் தெரிகிறது. முன்னோர்களிடம் பாவம் கழிப்பதற்க்காக கடனாக பெற்று வந்த இவ்வுடலை கரைத்தால் பித்ருதோசம் நீங்கி முன்னோர்களின் ( இறைவன் ) ஆசிர்வாதம் கிடைக்கும். அவங்க அவங்க தோசத்தை அவர்கள் மட்டும் தான் கழிக்கமுடியும். தங்களுடையை பசியை தீர்க்க மற்றவர் சாப்பிட்டால் பசி அடங்குமா. ~~சிந்தனை செய்யுங்கள் ~~
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு