விவசாயி தன்னுடைய பெண்பிள்ளையை படித்த ஆண்மகனுக்கும், தன்னுடைய ஆண்பிள்ளையை படித்த பெண்ணுக்கும் கல்யாணம் செய்து வைத்து அழகு பார்த்தான். படித்துவிட்டு விவசாய வேளை செய்தால் இந்த வேளை செய்வதற்க்குதான படிக்க வைத்தேனா? என்ற கேள்வி சரளமாக பெரும்பாலும் விவசாயிடம் வர ஆரம்பித்தது. விவசாயின் பிள்ளைகளிடம் விவசாய வேளை செய்ய சொன்னால், தற்பெருமை, தன்முனைப்பு அவர்களை தடுக்க ஆரம்பித்தது. பரம்பரை பரம்பரையாக விவசாய நுனுக்கங்களை தெரிந்து வந்த விவசாய சாதி நுனுக்கங்களை மறக்க ஆரம்பித்துள்ளனர். அதையும் மீறி விவசாய வேளை செய்ய விருப்பமிருந்தால் நேரமில்லை. படித்துவிட்டு வேலைக்கு சென்றால் குறைந்தது 8 மணி நேர வேலை. தொழில் நிறுவனங்கள் தொழிலாலிடம் 8 மணி நேரத்திற்க்கு மேல் வேலை வாங்கிறார்களே தவிர அதற்க்கு குறைவான வேலை கிடையாது. வேலையே இல்லை என்றாலும் 8 மணி நேரம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம். கம்பெனிக்கு போவதற்க்கு குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். சாப்பிடுவது குளிப்பது போக மீதி இருக்கும் 8 மணி நேரம் தூங்குவதற்க்கு தான் மீதி இருக்கும். இதில் எங்க விவசாய வேலை செய்வது. இதனால் விவசாயின் பரம்பரை விவசாய நிலத்தில் கால் வைக்க அவசியமில்லாமல் விவசாயத்தை மறந்து போக ஆரம்பித்துள்ளார்கள்.
விவசாயிடம் பண பலத்தில் வளரவேண்டும் என்ற கருத்து ஆழமாக பதிந்துள்ளது. முன்பொருகாலத்தில் பொருளை கொடுத்து பொருளை வாங்கினார்கள். இதில் பெரிய கஷ்டத்தை சந்தித்துள்ளதால் பணம் வந்தது. பொருளை விற்று பணத்தையும் பணத்தை கொடுத்து பொருளையும் வாங்கினார்கள். இடையில் வந்த பணத்தை வைத்து பெரும் சூழ்ச்சியை செய்கிறார்கள். பணத்தை கொடுத்து பொருளை வாங்கி பதிக்கிவைத்தார்கள். அதிகமாக பொருள் தேவைபடும் பொழுது பன்மடங்கு விலையேற்றம் நடக்கையில் பொருளை கொடுத்து பணம் வாங்கினார்கள். இப்படி பணத்தை சேர்த்தவர்கள் உழைக்க அவசியமில்லாமல் பணத்தை கொடுத்து பொருளை வாங்கினார்கள். பொருளும் பணமும் ஏற்றமும் இறக்கமும் இருந்தாலும் மனிதர்களின் தின கூலி அப்படியே இருந்தது. பணம் அதிகமாக இருக்கும் பொழுது மனிதனையும் விலைக்கு வாங்கினார்கள். மக்களை விலைக்கு வாங்கியதால் மக்களின் உடல் பலத்தையும் மன பலத்தையும் பயன்படுத்தி பொருளையும் அதிகாரத்தையும் கையில் எடுத்தார்கள். இந்த அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்தை பொருள் வைத்தவர்களுக்கு தகுந்தார் போல் வளைத்துள்ளனர். ஒரு தனி மனிதன் அல்லது கூட்டாளிகள் இடத்தில் பணம், பொருள், மக்கள், அதிகாரம், சட்டம் வைத்து விவசாயினை பல வழிகளில் கண்ணுக்கு தெரியாமல் நசுக்கபடுகிறார்கள். பணம் மற்றும் அதிகார மோகத்தை அதிகபடுத்தி விவசாயினை உழைக்க வைத்தார்கள். அவனுக்கோ அல்லது குடும்ப உணவிற்க்காக மட்டும் உழைத்திருந்தால் எந்த பிரச்சனையின்றி இருந்திருப்பான். பிள்ளைகள் படித்தால் தான் வயதான காலத்தில் சந்தோசமாக இருப்போம் என்றும் ஒரு மோகம். கல்விக்கான செலவு கூடியது ஆனால் இவன் விற்க்கும் பொருள் மட்டும் மிகவும் குறைவாக இருந்தது. மிகுந்த நஷ்டமடைந்தான், கடனை வாங்கி படிக்க வைத்து கடனில் ஆழ்ந்தான். கடனால் நிலத்தை விற்க்க நேரிட்டது.
நில வியபாரிகள் மூலம் விவசாய வீழ்ச்சி:
நிலத்திற்க்கு அருகில் கல்லூரி, பள்ளிகூடம், தொழிற்சாலை என்று ஏதாவது வந்துவிட்டால் நிலத்திற்க்கு மதிப்பு கூடிவிடுகிறது. இடைத்தரகர்கள் அல்லது வியபாரிகள் மூலம் நிலத்தின் விலையை கூட்டி விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் மனதில் ஆசையை தூண்டுகின்றனர். காலம்காலமாக விவசாயம் செய்தவன் ஒன்று நஷ்டமடைகிறான் அல்லது சிறு வருமானம் பெற்று வறுமையில் வாழ்கிறான். இன்று நடைபெற்றுகொண்டிருக்கிற பொருளாதர சமுகத்தில் வீடு, உடை, கல்வி, ஆடம்பரம் போன்ற பல தேவைகளுக்கு பணம் அவசியம் தேவைபடுகிறது. சிறு வருமானம் தந்துகொண்டிருக்கிற விவசாயத்தை வைத்துகொண்டு என்ன செய்வது என்று நிலத்தை, நிலத்தின் விலை கூடும்பொழுது விற்றுவிடுகின்றனர். மற்றும் கழிவால் சுற்றுச்சூழலை கெடுக்கும் தொழிற்ச்சாலை வந்துவிட்டால் மண், தண்ணீர், நுண்ணுயிர் போன்ற விவசாயத்திற்க்கு அவசியமான தேவைகள் கெட்டு விவசாயம் செய்யமுடியாமல் கைவிடுகிறார்கள். அப்படி கழிவு தேங்கின நிலத்தை விற்பதை தவிர வேறு வழியில்லை. இதனாலும் விவசாயம் வீழ்ச்சியடைகிறது.
விதையினால் விவசாய வீழ்ச்சி:
வித்து சரியாக இருந்தால் வளரும் வித்தின் செடி கொடி மரம் சரியாக இருக்கும். சரியில்லாத விதையை நடவு செய்தால் வளரும் செடியும் சரியில்லாமல் தான் இருக்கும். இப்ப பெரும்பாலான விவசாயிகள் விதை நேர்த்தி செய்வதை மறந்துள்ளனர். விதையை நேர்த்தி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, விதையை விலைக்கு வாங்கி நடவு செய்கின்றனர். சில நேரங்களில் விலைக்கு வாங்கின விதைக்கான செலவு கூட விவசாயியால் சம்பாதிக்க முடியவில்லை. பாரம்பரியமாக விதையை விலைக்கு வாங்காமல் நிலத்தில் விழைந்த செடி கொடி மரங்களின் விதையை நேர்த்தி செய்து பாதுகாப்பாக வைத்திருந்து நடவு மேற்கொண்டனர். அப்படியே விலைக்கு வாங்கினாலும் 10 மைலுக்குள்ள தான் வாங்கி நடவு மேற்கொண்டனர். இப்பொழுதெல்லாம் விதையை பல மைல் தூரத்திலுள்ள நாட்டிலிருந்து இறக்குமதி செய்து நடவு செய்கின்றனர். இதனால் விதையின் மதிப்பு கூடுகிறது. ஒரு கால சூழ்நிலையில் வளர்ந்த செடி மற்றொரு காலச்சூழ்நிலையில் வளரும் போது தடுமாறுகிறது. அந்த செடியை பாதுகாக்க மருந்து உபயோகம் அதிகமாக தேவைபடுகிறது. இதனால் மேலும் செலவு கூடுகிறது.
விவசாய பரம்பரையை தங்கள்வசம் முதலில் ஈர்ப்பதற்க்காக விதையை இலவசமாக கொடுத்தனர். பின்பு அதிகமாக விழைச்சல் தருவதாக சொல்லி மாற்றுவிதை மற்றும் மரபனு மாற்றுவிதையை விற்றனர். பின்பு விழையும் பொழுது அதற்க்கான மருந்தையும் நிர்னயம் செய்தனர். மருந்தை விவசாயிகளிடம் விற்ப்பதற்க்காக செய்த தந்திரம் என்ன சொன்னாலும் விவசாயிகள் தலைசைக்கும் அளவுக்கு நன்றாக வேளை செய்தது. விதைக்கான மருந்தால் அமோகமாக விழைந்தது. குறிப்பிட்ட வருடம் இலவசமாக கொடுத்த விதையை நிறுத்தி, விதைக்கான விலையை நிர்னயம் செய்தனர். அமோக விழைச்சலால் விதையை வாங்கவும் தயங்கவில்லை. கார் பங்களா என்று ஆசை விவசாயியை ஈர்த்தது. விழைச்சலும் ஆசையும் புதிய மாற்றத்தை விவசாயிகள் உணர்ந்தனர். குறிப்பிட்ட வருடம் அமோகமாக விழைந்தது. இந்த குறிப்பிட்ட வருடத்திலே விவசாயிகள் நுணுக்கத்தை மறக்க ஆரம்பித்தனர். விளைச்சல் குறைந்தாலும் விதை மற்றும் மருந்தின் மீது மோகம் குறையவில்லை. மீண்டும் விதையை மாற்றினர், மருந்தை அதிகபடுத்தினர் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்திந்தனர். மருந்தை அதிகபடுத்தியதால் மண்ணின் தரம் குறைந்தது, தரத்தை உயர்த்த உரம் வகையான வேறொரு மருந்து என்று சொல்லி அதையும் விவசாயிகள் நம்ப மறுக்காமல் வாங்கி பயன்படுத்தினர்.
மருந்தை அதிகபடுத்தியதால் மண்ணிலும் சுற்றுச்சூழலிலும் நுண்ணுயிர் குறைந்துவிட்டது. பூஞ்சை, கரையாண், பூச்சி, வண்டு, கொசு, எறும்பு, தும்பி, தேனி, புழு, குழவி போன்ற எண்ணெற்ற உயிரினம் சுற்றுச்சூழலையும் மண்ணையும் பாதுகாக்கிறது. கரையான் தண்ணீர் குறைவான பகுதியில் மக்கும் பொருளை சக்தியாக மாற்றும். வெயில் காலத்திலும், குளிர் காலத்திலும் விளைநிலத்தில் பார்க்கலாம். மண்புழு கீழ் இருக்கும் மண்ணை மேலே தள்ளும் மேலிருக்கும் மண்ணை கீழே தள்ளும். மனிதன் உழவு செய்யவில்லை என்றாலும் மண்புழு அந்த வேளையை செய்யும். குளிர் மற்றும் வெயில் காலத்தில் எலி, எட்டுகால் பூச்சி, நண்டு இதெல்லாம் பூச்சிகளை சாப்பிட்டு எச்சத்தை மண்ணுக்கு உரமாக கொடுக்கும். மற்றும் கீழே இருக்கும் மண்ணை மேலே தள்ளும். தும்பி அடுத்த பூச்சியின் முட்டையை சாப்பிட்டு மகரந்த சேர்க்கையும் செய்து விளைச்சலை அதிகபடுத்தும். தேனீயும் வண்டும் பூக்களிலிருக்கும் தேனை உறுஞ்சும். அப்படி உறுஞ்சும் பொழுது மகரந்த சேர்க்கையும் நடைபெறும். புழு அதிகமாக இருக்கும் பொழுது இலைகளையும் காய்களையும் சாப்பிடும். புழு இருக்கும் பொழுது மனிதர்களின் மனம் அல்லல்படும். ஆனால் அதே புழுதான் பின்பு பட்டாம்பூச்சியாக மாறும். பட்டாம்பூச்சியாக இருக்கும் பொழுது நமக்கு மகரந்த சேர்க்கை நடைபெற்று விளைச்சல் அதிகமாகும். கோட்டான் எலியை சாப்பிட கூடிய உயிரினம். எலியை மருந்து வைத்து கொன்றுவிட்டால் கோட்டானுக்கு ஏது உணவு. எலி நெற்பயிரை தாக்கும் பொழுது நெற்பயிர்க்கிடையில் கோட்டான் அமருவதற்க்கு ஏற்றவாறு செய்தால் எலி தொல்லை குறைந்துவிடும். இப்படி உதவும் உயிரினத்தை மருந்தடித்து கொன்றுவிட்டால் சுற்றுசூழலும் மண்ணும் மாசடைந்துவிடும். மருந்தடித்தால் விளைச்சல் நன்றாக வரும் என்ற எண்ணம் மனிதர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளதால் மருந்தடித்து மண்ணை கெடுத்துகொண்டிருக்கிறோம். நுண்ணுயுர் குறைந்ததால் விவசாயி வீழ்ச்சி அடைந்துள்ளான்.
விவசாய வேலைக்கு செல்வோர் முன்பெல்லாம் விளைந்த தானியங்களையும் உணவையும் கூலியாக பெற்றனர். இப்பொழுது பணம் என்ற போர்வைக்கு மாறியுள்ளதால் வேலைக்கு வருவோர் பணத்தை பெறுகின்றனர். விதையை நற்று செடி பழம் பழுத்து அறுவடை செய்து ஒரேநாளில் பணமாக மாற்றினால் எந்த தொந்தரவும் இருக்காது. விதையை நடவு செய்வதற்க்கும் விற்ப்பதற்க்கும் இடையில் பலநாட்கள் முதல் பல மாதங்கள் ஆகின்றன. ஆனால் வேலைக்கு வருவோர்க்கு தினகூலியை அன்றே அல்லது சில நாட்களில் கொடுத்துவிட வேண்டும். விதையை நடுவதற்க்கு முன்னால் மண்ணிற்க்கு உரம் கொடுத்து உளவு செய்து விதையை விலைக்கு வாங்கி ஆட்களை வைத்தி நடவு செய்து பொருளை உற்பத்தி செய்கிறான். எல்லாத்துக்கும் முன்பே முதலீடு செய்ய வேண்டும். அப்படி முதலீடுக்கும் அதன் வட்டிக்கும் தகுந்தார் போல் விளைச்சல் இருந்தால் தான் நல்லது. அப்படியே விளைந்த பொருள் முதலீடுக்கு தகுந்தார் போல் பணமாக மாற்றினால் நல்லது.விலை வீழ்ச்சிடைந்தால் விவசாயி என்ன செய்வான். நிலம், விதை, மருந்தடிக்காமல் இயற்கையான முறை விவசாயம் என விவசாயின் கையில் அதிகாரம் இருந்தாலும், ஆட்களை வைத்து தான் விவசாயம் செய்ய முடியும். அக்காலத்தில் குடும்பகட்டுப்பாடு என்றெல்லாம் கிடையாது. ஒரு ஆணுக்கு இரண்டு மூன்று பெண்களை கல்யானம் செய்தனர். அப்படி ஒன்றே இருந்தாலும் பல பிள்ளைகளை பெற்றெடுத்தனர். அந்த பிள்ளைகளை வைத்து கூலியாட்களுக்கு பதில் வேலை செய்தால் லாபம் வரும். ஆனால் இன்றோ குடும்ப கட்டுப்பாடு என்று வந்தவுடன் இரண்டு அல்லது ஒன்றோ தான் பெற்றுகொள்கின்றனர். அந்த பிள்ளைகளையும் படித்து வேலைக்கு அனுப்பிவிட்டால் என்ன செய்வான், விவசாய வேலைக்கு ஆட்களைதான் வைக்கவேண்டும்.
வேலைக்கு வருவோர் முன்பெல்லாம் 8 மணி நேரம் வேலை செய்தனர். இப்பொழுது ஐந்து மணி நேர வேலை தான் செய்கின்றனர். ஐந்து மணி நேர வேலை செய்தாலும் முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம். அப்படி கொடுக்க முடியாது என்று சொன்னால் விவசாய வேலை கடினம் மற்ற வேலை கடுமையில்லாதது என்று கூறி வேலைக்கு வர மறுக்கின்றனர். காலை வேலைக்கு வர சொன்னால் 1 மணி நேரத்திற்க்கு பின் வருவதும், சரியான நேரத்திற்க்கு முன் செல்வதும் வேலைக்கு வருவோர் செய்கின்றனர். விவசாயிக்கு லாபம் வந்தால் என்ன நஷ்டம் வந்தால் என்ன நமக்கு தினகூலி சரியாக இருக்கவேண்டும் என்று பெரும்பாலான வேலை செய்வோர் மனதில் இருக்கும் எண்ணம். இப்படி சொன்னால் சரிவராது. விவசாயி காலத்துக்கும் குழியில் இருக்கும் பொழுது மற்றவர்க்கு எப்படி கைகொடுத்து மேலே தூக்குவது? நஷ்டத்துக்கு மேல் நஷ்டமான விவசாயி வேலைக்கு வருவோர்க்கு சுகமான எண்ணத்தில் பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் தான் விவசாய வேலைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து விவசாயம் செய்வது கடினமாக உள்ளது.
அரசாங்க அல்லது தனியார் துறைக்கு வேளைக்கு செல்வோர் உயர்ந்துள்ளனர். வெளிநாட்டு வேளைக்கு செல்வோர் உயர்ந்துள்ளனர். ஆனால் விவசாய வேளை செய்வோர் பலர் விளைச்சலில்லாமல் நஷ்டமடைந்து தாழ்ந்துள்ளனர். வேளைக்கு சென்றால் கூட பிழைத்துகொள்ளலாம் ஆனால் விவசாயம் செய்தால் பிழைக்க முடியாது என்று பெரும்பாலான விவசாயிகளால் விவசாயத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது.விதையை வாங்கினார்கள். மருந்தை வாங்கினார்கள். உரம் வாங்கினார்கள். வியாபாரிகள் சொல்லும் அறிவுரைகளை கேட்க மறுக்கவில்லை. விழைச்சல் குறைந்தது. நஷ்டம் ஏற்பட்டால் மானியம் வழங்கபட்டு விவசாயிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இப்பொழுது மன உழைச்சளுக்கு ஆளாகி விளைநிலத்தை விற்க ஆரம்பித்தனர். ஒரு காலத்தில் விவசாயி சுகமாக வாழ்ந்துள்ளான். அந்த காலத்தில் விவசாயி உயர்ந்த சாதியாகவும் மற்றோரை தாழ்ந்த சாதியாகும் பிரித்துள்ளான். அக்காலத்தில் விவசாய நிலம் வைத்தவர்களுக்கு பெண் கொடுப்பதும் எடுப்பதுமான முன்னுறிமை இருந்துள்ளது. விளைநிலம் வைத்தவர்களிடம் பணமும் நகையும் இருந்துள்ளது. விளைநிலம் வைத்தவர்களிடம் ஆட்சி இருந்துள்ளது. ஆனால் அப்படிபட்ட நம்பிக்கையை சரியான முயற்சி செய்து இப்பொழுது தகர்த்தெரிந்துள்ளனர். விவசாய பரம்பரைக்கு சரியான சவுக்கடி கொடுக்கபட்டுள்ளது. கூடியவிரைவில் அரசாங்கம் நிலத்தை தன் கட்டுப்பாட்டில் வைப்பதற்க்கு முயற்சி செய்வது போல் ஒரு எண்ணம். விதையை விலைக்கு வாங்கி மருந்தடித்து நுண்ணுயிரை அழித்து விளைந்த பொருளை விற்க்கத்தெரியாமல் விற்று வாழும் விவசாயி மிகுந்த நஷ்டமடைவான் என்பது விதி. விதியை வெல்ல வேண்டுமென்றால் இயற்கையை புரிந்து அதற்க்கேற்றார் போல் விவசாயம் செய்தால் விவசாயி மீண்டும் செழிப்பான் என்பதும் விதி.யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு