தங்கள் உணவுகளில் கோதுமை, மைதா, இரவை, பரோட்டா, சப்பாத்தி, பிரட் இருக்கிறதா! அப்படியென்றால் தமிழகத்தில் வறட்சி மற்றும் பொருளாதார சீர்கேடுக்கு தாங்களும் உடந்தை என்று சொன்னால் நம்புவீர்களா!
மிக மிக முக்கியமான காரணம் அலோபதி மருத்துவர்கள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா! அவர்கள் தான் சப்பாத்தி, பிரட்டை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.
மருத்துவர்கள் என்ன செய்ய முடியும், அவர்கள் படித்தது அப்படி தானே! சப்பாத்தி, கோதுமையை பாடப்புத்தகத்தில் வைத்தவன் தான் பொருளாதார சீர்கேடுக்கு முக்கிய காரணம்.
பெரும்பாலும் நம் வீடுகளில் சப்பாத்தி, இரவை சமைத்து சாப்பிடுகிறோம். பெரும்பாலான பேக்கரி கடைகளில் பிரட், பப்ஸ் போன்ற கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக உண்ணுகிறோம். நம் தமிழகத்தில் விளையாத அல்லது உற்பத்தியாகாத பொருளை அதிகமாக பயண்படுத்துகிறோம். அப்பொழுது இங்கிருக்கும் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், நம் தமிழகத்தில் உற்பத்தி செய்த பொருளை வியாபாரம் செய்பவருக்கும் நேரடியாக நஷ்டத்தை ஏற்படுத்துகிறோம். வடமாநில வியாபாரிக்கு மிகவும் இலாபம் ஏற்படும். பெரும் வருமானம் காரணமாக நம்முடைய வியாபார சந்தைகள் வடமாநில வியாபாரிகள் கட்டுப்பாட்டிற்க்கு தானாகவே செல்லும். பின்பு அவர்கள் சொந்தங்களையும் அவர்கள் பகுதியில் வேலை செய்யும் நபர்களைத்தான் வேலையில் அமர்த்தப்படுவார்கள். சந்தைகள் வடமாநில மக்கள் கட்டுப்பாட்டில் உள்ளதால் வரும் வருமானத்தை கொண்டு அரசு சார்ந்த அதிகார மையத்தை மிக சுலபமாக வளைக்க முடியும். இதனால் தான் தமிழக மக்களுக்கு வேலை இல்லாமல் வடமாநில மக்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது.
வடமாநில மக்களோ அல்லது வேற நாட்டின் மக்கள் வேலை செய்தாலும் அல்லது ஆட்சியை பிடித்தாலும் ஒன்றும் தவறில்லை, ஆனால் இயற்கையை பாதுகாக்க வேண்டும். ஒருவேலை இயற்கையை பாதுகாக்க தவறிவிட்டால் என்ன செய்வது.
நாம் எந்த பகுதியில் வாழ்கிறோமோ அப்பகுதியில் விளைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். வேறு சூழ்நிலையில் வளர்ந்த உணவுகளை சாப்பிட்டால் சளி, சீரனகோளாறு போன்று பல வியாதி வரும். இதனால் மருத்துவ துறை நன்கு வளரும். பல மருத்துவமுறைகள் வந்தும் வியாதிகள் குறையாதற்க்கு காரணம் தவறான உணவு பழக்கம் மட்டுமே. தவறான உணவுகளை பழக்கப்படுத்திவிட்டால் மருத்துவம் சார்ந்த கல்லூரி, பாடப்புத்தகத்தை உருவாக்கி கொண்டே செல்லலாம். இது ஒரு மாயையான விளையாட்டு.
வேறு பகுதியில் விளைந்த உணவுகளை நாம் சாப்பிடுவதாலும், நம் பகுதியில் விளைந்த உணவுகளை மற்ற பகுதியில் சாப்பிடுவதாலும் சாப்பிடும் பொருளின் விலை அதிகமாக இருக்கும். பொருள் பரிமாற்றம் உள்ளதால் வாகனத்தேவை, பெட்ரோல், ஆயில் தேவை உள்ளது. தேவையில்லாத அல்லது சூழ்ச்சியின் மூலம் பல மடங்கு ஆயிலை இறக்குமதி செய்வதால் நம் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறது. வாகனத்தேவை இருப்பதால் ஆட்டோமொபைல் சார்ந்த பல துறைகள் நன்கு வளரும். ஒரு நாட்டில் நல்ல மழை வளமும் உணவு செழிப்பும் உள்ள போது பல துறை வளருவதற்க்கு அரசியலில் விளையாடுவது தவறில்லை. அப்படிபட்ட விளையாட்டினால் இயற்கையை எந்த வகையிலும் அழிக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இயற்கை மிக வேகமாக அழிகிறது. இதை எந்த காரணத்திற்காகவும் பொறுத்துக்கொள்ள முடியாது. மூலமே போன பின்பு இந்நிலத்தில் வாழ முடியாது.
கோதுமை உணவுகளை அவன் சந்தைப்படுத்தும்பொழுது நம் பகுதியில் விளைந்த உணவுகளை நாம் சந்தைப்படுத்தினால் எவ்வளவு நன்மை பயக்கும் என்று யோசனை செய்யுங்கள். நம் பகுதியில் விளைந்த உணவுகளை மாற்று யோசனை மூலம் பல வகையான உணவுகளை தயாரித்து மக்களை பழக்கப்படுத்தினால் நல்லது. ஒவ்வொரு பேக்கரிலும் நம் பகுதியில் விளைந்த உணவுகளை விற்றால் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்து முதலில் விலகமுடியும். ஒற்றுமையோடு சேர்ந்து கூட்டு முயற்ச்சியில் சந்தைபடுத்துதல் சிறந்த பலன் அளிக்கும். தனி மனிதனால் இப்பொழுது பெரும் சந்தையை எதிர்த்து போராட முடியாது.
தங்கள் பகுதியில் விளைந்த உணவுகள் தான் உடலிற்க்கு மிகவும் நல்லது. தங்கள் பகுதியில் விளைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது உணவின் விலையும் குறைந்துவிடும். ஆயில் இறக்குமதி தானாகவே குறைந்துவிடும். தேவையில்லாத போக்குவரத்து குறைவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைந்து இயற்கையை பாதுகாக்க முடியும். நம் பொருளாதாரமும் வீழ்ச்சியிலிருந்து மாறிவிடும். தாங்கள் எடுக்கும் முடிவே இந்நிலத்தை பாதுகாக்க முடியும்.சிந்தனை செய்யுங்கள்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு