மாடுகளை குளிப்பாட்டி பூஜை செய்து கொம்புகளுக்கு பல வர்ணம் பூசப்பட்டு சலங்கைகளும் பூ மாலைகளும் அணியப்படுகிறது.
ஒரு பொதுவான இடத்தில் ஒரு சில மாடுகளை மட்டும் தேர்வு செய்யப்படுகிறது. நான் சிறிய வயதாக இருக்கும் பொழுது அந்த மாடுகளுக்கு சாரயம் போன்ற போதையை மூங்கில் புணலை வைத்து வாயிலில் ஊற்றினார்கள். எதற்க்கு என்று பல நாள் கேள்வியை என்னுள் கேட்டுக்கொண்டேன். போதையை கொடுத்த பிறகு மாடு முரட்டுத்தனம், திசை தெரியாத தள்ளாடும் தன்மை அதிகமாகும். முன்பே அம்மாட்டிற்க்கு பல கையிறுகளை கட்டி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். பறை அடிப்பவர் விளையாட்டில் பங்கு பெறுபவர்களையும் மாடுகளையும் இசை கொண்டு உசுப்பேற்றுவார்கள். பின்பு கருப்பு அல்லது சிவப்பு கலந்த துணியை ஒல்லியான மூங்கில் கம்புகளில் கொடி போன்று கட்டி மாட்டின் முன்பு அசைப்பார்கள். அதை பார்த்து மாடு கொடி காட்டும் நபர்களிடம் முரட்டுதனமாக வரும். அதை அவர்கள் அடக்க வேண்டும். சில நாடுகளில் அப்படி வரும் மாட்டை கூர்மையான அயுதம் கொண்டு குத்தி அடக்க வேண்டும். இது கூளி விளையாட்டு.
மஞ்சு விரட்டு என்பது கிராமத்தின் வீதிகளில் நடைபெறக்கூடிய விளையாட்டு. விவசாயிகள் தாங்கள் வைத்திருக்கும் மாடுகளை தோரணத்திற்க்கு முன் நிறுத்தப்படும். அங்கு எந்த உயிர் சேதமும் நடைபெறக்கூடாது என்று கடவுளை வேண்டி ஒரு ஆட்டினை பலி தருவார்கள். பறை இசைக்கும் கலைஞர்கள் கொண்டு எழுப்பபடும் சப்தத்தத்தை கேட்டு ஒவ்வொரு மாடும் ஓட்டப்படும். முதலில் ஊர் பெரியவர்களின் மாடுகள் விரட்டப்படும். கையிறு, சிறிய மூங்கில் அல்லது கை கொண்டு மாட்டினை தட்டி வேகத்தை அதிகபடுத்துவார்கள். பின்பு அவர்களே மாட்டை நிறுத்த வேண்டும். அதை பார்த்து சுற்றியுள்ள மக்கள் அனைவரும் கைத்தட்டியும் விசில் அடித்தும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.
ஜெல்லி கட்டு என்பது வீரியம் அல்லது முரட்டுதனம் நிறைந்த காளைகளை வைத்து விளையாடுவது. சல்லிக்காசு கூட கொடுக்கமாட்டேன் என்று வாக்கியத்தை இன்னும் பயண்பாட்டில் உள்ளது. சல்லி காசு என்பது மிகச்சிறிய பணம். அது போல மிகக்குறைந்த கயிற்றை மட்டும் கொண்டிருக்கும் காளையை வைத்து விளையாடுவது. பொதுவான விளையாட்டிற்க்கு தகுந்த இடத்தை சுற்றி மக்கள் நிற்பார்கள். காளை வைத்திருப்பவர் அவிழ்த்து விடும் பொழுது துல்லி குதித்து வரும் காளையை விளையாட்டில் பங்கு பெறுவர் அடக்க வேண்டும். அடக்கினால் பரிசு காத்திருக்கும். மாட்டை அடக்கினால் தான் பொண்ணு தருவேன் என்று வரிகள் ஞாபகத்திற்க்கு வருகிறது. மாட்டை அடக்கிய மணமாகாத ஆண்மகனுக்கு பரிசுக்கு பதில் தன் பெண்ணை( குறிப்பு: வாலைப்பெண் ) தருவது ஏறுதழுவல் என்று குறிப்பு உள்ளது.
விளையாட்டில் பங்குபெறும் காளையை அலைபாயும் மனதிற்க்கு உதராணமாகும். சுற்றியுள்ள மக்களை பார்த்து பயம் காரணமாக தனக்கு அருகில் வருபவர்களை விரட்டும். எந்த திசையை நோக்கி செல்ல வேண்டும் என்று தெரியாது. இப்படிபட்ட காளையை அடக்குவது போல அலைபாயும் மனதை தன்வசப்படுத்தினால் பரிசு காத்திருக்கும். இது கடவுளை அடையும் வழியை சுட்டி காட்டப்பட்டுள்ளது.
இப்படி பட்ட விளையாட்டின் மகிமையை பற்றி தெரிந்து சட்டங்களை இயற்ற வேண்டும். விருப்பத்திற்க்கு சட்டத்தை மாற்றக்கூடாது. ஜெல்லி கட்டை எக்காலத்திலும் தடை செய்யக்கூடாது. அப்படி தடை செய்யும் சட்ட வல்லுனர்களுக்கு அறிவு குறைவாக உள்ளது என்று தான் உண்மை. பாரம்பரியத்தை பற்றி சட்டத்தை ஒழுங்குபடுத்துபவர்கள் பாரம்பரிய விசயஞானம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த பதவிக்கு தகுந்தவர் கிடையாது என்றே அர்த்தம். இதனால் தான் பெரிய பதவியில் இருப்பவர்கள் கடவுளை பற்றி உணர்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பெரிய நீதிமன்றங்களிலும் கடவுளை உணர்பவர் ஒருவரையாவது நியமிக்க வேண்டும்.
உயிரிழப்பை தடுக்க மாட்டின் கொம்புகளை கூர்மையாக இருக்காத வண்ணம் சட்டங்களை இயற்ற வேண்டும். விளையாட்டை பார்க்கும் மக்களை பாதுகாக்க சுற்றியும் தடுப்பு அமைக்க சட்டங்கள் இயற்றலாம். ஜெல்லி கட்டு ஏன் நடத்தப்படுகிறது எப்படி நடத்தலாம் என்ற பாடத்தை பிள்ளைகள் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குறிக்கோள் ஒன்று தான் கடவுளை உணர மனதை பக்குவபடுத்த வேண்டும். அதை மறைமுகமாக ஜெல்லி கட்டு வடிவத்தில் சொல்லப்படுகிறது.பெரியோர்கள் நம்மை வழிநடத்துவதற்க்காக ஏற்படுத்தபட்ட விழாவை நாம் வருடந்தோரும் மறக்காமல் கொண்டாடுவது மிகவும் நல்லது.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு