தீபாவளி= தீபம் + ஒளி.தீபாவளியை தீப ஓளித்திருநாள் என்றும் சொல்லப்படுகிறது.தீபஓளியை தான் தீபாவளி என்று மாற்றம் பெற்றிருக்கலாம்.
தீபாஓளியை கொண்டாடுவதற்க்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. மஹாவிஷ்னு பாதாளத்தில் செல்லும்போது மஹாவிஷ்னுவின் பரிஷத்தால் பூமாதேவி பவுமன் என்று ஒரு குழந்தையை பெற்றெடுத்தால். பவுமன் சாகாவரத்தை வேண்டி மஹாவிஷுனுவின் பிள்ளையான பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டு தாயைத்தவிர யாராலும் என்னைக்கொல்லகூடாது என வரம் பெற்றான். பவுமன் தன் அகங்காரத்தால் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் மிகவும் துன்பத்தை கொடுத்தான்.பவுமன் மக்களுக்கும் தேவர்களுக்கும் நரக வேதனை கொடுத்தால் நரகன் என்றும் அசுரன் என்றும் இரண்டும் கலந்து நரகாசுரன் என்றும் பெயர் பெற்றான். மகாவிஷ்ணு கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார்.பூமாதேவி சத்யபாமாவாக அவதாரம் எடுத்தார். இருவரும் மணந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தபொழுது பவுமன் துன்பம் கொடுத்தான். கிருஷ்னருக்கும் பவுமனுக்கும் போர் நிகழ்ந்தது. இப்பிறவியில் பவுமன் யார் என்றே சத்யபாமாவுக்கு தெரியவில்லை. நரகாசுரன் கிருஷ்னரின் மேல் அம்பெய்ததால் கிருஷ்னர் மயக்கதில் உள்ளவாரு நடித்தார். சத்யபாமா பின்பு அம்பு எய்து நரகாசுரனை வென்றார் என்ற கதை உண்டு. பின்பு பவுமன் தன் பிள்ளை என்று நினைவு ஏற்பட்டு கிருஷ்னரிடம் இதை விழாவாக கொண்டாட வேண்டும் என்ற வரம் வாங்கினார்.
நரகாசுரன் என்பவன் யார்? நரன் என்றால் மனிதன். அசுரன் என்றால் அசுர குணமான காமம், கோபம், பொறாமை, தற்பெருமை, அகங்காரம் போன்ற உயிரை மிக வேகமாக அழிக்க கூடிய குணங்கள். நரகாசுரன் என்றால் அசுர குணமுள்ள மனிதன் என்று அர்த்தம். அசுர குணம் கொண்டவர்கள் அனைவரும் நரகாசுரன் தான்.
அசுர குணம் இருக்குமென்றால் தெய்வீக குணம் என்று சில இருக்கும். சத்துவ குணம்,தூய்மை, ஞானம், வைராக்கியம் ஆகியவை தெய்வீக குணங்கள். அசுர குணம் சிற்றின்பத்தை குறிக்கிறது, தெய்வீக குணம் பேரின்பத்தை குறிக்கிறது. அசுர குணம் உயிரை அழிக்க கூடியது, தெய்வீக குணம் உயிரை பாதுகாக்ககூடியது. அவ்வையார், திருவள்ளுவர், புத்தர், மகாவீரர் போன்றோர் தெய்வீக தன்மை கொண்டவர்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் இல்லை. நரகாசுரன், இராவனன் போன்றோர் அசுரர்கள். இவர்களும் இப்பொழுது உயிரோடு இல்லை. ஆனால் புத்தர், மகாவீரர், நரகாசுரன், இராவனன் என்பதெல்லாம் ஒரு மனிதனின் தன்மையை குறிக்ககூடிய சொல்லாக இருக்கிறது என்பதை தீவிரமாக யோசித்தால் புரியும். சித்தார்த்த கௌதமர் என்ற மனிதரை தான் புத்தர் என்று குறிப்பிடுகிறார்கள். புத்தர் என்பது சலனமில்லாத இன்பத்தை அதாவது புத்தியை பெற்றவர் என்று அர்த்தம். அசுர குணம் மீண்டும் மீண்டும் தோன்றிகொண்டே இருக்கும். அசுரனை திரும்ப திரும்ப கொன்றதால் மகாவீரர் என்று தோன்றுகிறது.
வாழ்வில் என்ன எதிர்பார்கிறோம் என்றால் இன்பத்தை தான் என்பது சந்தேகமே இல்லை. அது சிற்றின்பமா அல்லது பேரின்பமா என்பது முக்கியம். சிற்றின்பத்தில் சக்தி செலவாகும், பேரின்பத்தில் சக்தி பாதுகாக்கபடும். நமக்கு கோபம் வருகிறது என்று வைத்துகொள்வோம், இடையறாது கோபத்தினால் நம் சக்தி பல வழிகளில் செலவாகி சோர்வு, வியாதி வரும். அதிகமான காமமும் இதே நிலமை தான். ஒருவேளை பேராசை, அதாவது நம் சக்திக்கு மீறகூடிய ஆசையாக இருந்தால் நம் நினைக்கும் பொழுதே மூச்சி காற்று வேகமாக நடைபெறும். அதற்க்காக நாம் பெரும் உழைப்பை கொடுக்க வேண்டும். அதிக உழைப்பு நம் உடலை சோர்வாக மாற்றி வியாதியை கொடுத்துவிடும். கெட்டுப்போன உணவை சாப்பிடுகிறோம் என்றால் உடலில் விசம் ஏற்பட்டு சக்தி செலவாகி நோய் தொற்றிக்கொள்ளும். பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் சக்தி செலவானால் நோய் ஏற்பட்டு நம் உயிர் சீக்கிரமாக சென்றுவிடும்.
பேரின்பத்தில் சக்தி பாதுகாக்கபடும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே அது எப்படி அடைவது?
உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி;
அச்சுள்ள விளக்கு வாலையடிஅவி
யாம லெரியுது வாலைப் பெண்ணே
எரியு தேஅறு வீட்டினி லேயதில்
எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை;
தெரியுது போக வழியுமில் லைபாதை
சிக்குது சிக்குது வாலைப் பெண்ணே!
சிலம்பொ லியென்னக் கேட்டுமடிமெத்த
சிக்குள்ள பாதை துடுக்கமடி;
வலம்புரி யச்சங்க மூது மடிமேலே
வாசியைப் பாரடி வாலைப் பெண்ணே!
வாசிப் பழக்க மறியவே ணுமற்று
மண்டல வீடுகள் கட்டவேணும்;
நாசி வழிக்கொண்டு யோகமம் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப் பெண்ணே!
முச்சுட ரான விளக்கினுள் ளேமூல
மண்டல வாசி வழக்கத்திலே
எச்சுடராகி யந்தச் சுடர்வாலை
இவள் விட வேறில்லை வாலைப் பெண்ணே!
சூடாமல் வாலை யிருக்கிற தும்பரி
சித்த சிவனுக்குள் ளானதால்
வீடாமல் வாசிப் பழக்கத்தைப் பாருநாம்
மேல்வீடு காணலாம் வாலைப் பெண்ணே!
மேற்கண்ட பாடல் மூலம் தெரிந்த கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் நமது தலைப்பகுதியில் உச்சிக்கு கீழே உள் நாக்கு மேலே விளக்கு அல்லது சீவன் இருக்கு, அங்கே நினைவை வைத்திருந்தால் கடவுள் காட்சி தருவார் என்று பெரியோர் கூற்று. தொடர்ந்து நம் நினைவை சீவன் இருக்கும் இடத்தில் வைத்திருந்தால் உடலில் குறிப்பிட்ட நாட்கள்/மாதம்/வருடம் பின் யோகம் நடைபெற ஆரம்பிக்கும். அப்பொழுது தான் தலைப்பகுதியில் உள்ள விளக்கு நன்றாக எரிய ஆரம்பித்து அசுர குணம் அழிக்கப்படும். இதை தான் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது.கார்த்திகை தீபம் என்று சொன்னாலும் ஒன்றும் குறை இல்லை என்று தான் தோன்றுகிறது. யோகிகள் இந்த தீபஒளியை தினமும் கொண்டாடுவார்கள். இந்த தீபாவளியை கொண்டாடப்படுகிறது என்பதின் அர்த்தமாக பால் நம் உடலில் சுரக்க ஆரம்பிக்கும். தீபாவளியை கொண்டாடும் ஆணுக்கும் நடைபெறும், பெண்ணுக்கும் நடைபெறும். இந்த பாலைத்தான் பிராமணர்கள் என்று சொல்லும் குல மக்கள் குடிக்க வேண்டும் ஆனால் அவர்களோ மாட்டுப்பாலை குடிக்கிறார்கள். மொத்தத்தில் அவர்கள் பிராமணர்களே இல்லை. இந்த பாலை குடிக்கும் பொழுது உடலுக்கு பேரின்பம் ஏற்பட்டு உயிர் பாதுகாக்கபடும். எல்லா பண்டிகைகளும் இதன் சாயலில் தான் இருக்கும். கதை மட்டும் வெவ்வேறு கோணத்தில் சொல்லப்படும.
சமணர்கள் மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாளை தீபாவளி அன்று விழாவாக கொண்டாடுகின்றனர். பெரும்பாலும் சமணர்கள் ஆடையின்றி நிர்வாணமாக இருக்கிறார்கள். இது சமணர்களின் கோட்பாடாக இருக்கலாம். யோகா செய்வதாலும் இந்த மாற்றம் ஒரு மனிதனுக்கு ஏற்படும். அப்பொழுது நிர்வாணம் என்றால் என்ன? நிர்வாணம் என்பது விருப்பு வெறுப்பற்ற மனதின் நிலை. சமாதி, முக்தி என்றும் சொல்வர்.
ராமன்(பிராணன்) விபிசினனின்(சாத்வீகம்) வழிகாட்டுதலால் கும்பகரனையும்( தாமசம் ), இராவணனையும்(ராஜசம்) கொன்று இராவணனால் இலங்கைக்கு( சக்தி விரயமாகும் பகுதி ) கடத்தி சென்ற சீதையை(சக்தி) மீட்டு பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்க்கப்படுகின்றனர். இதை தீபாவளியாக மக்கள் கொண்டாடுகின்றனர். தாமசம், ராஜசம், சாத்வீகம் என்பது மனிதனின் குணங்களின் நிலை.
பிறப்பால் அனைவரும் விலங்குகளே. அசுர தன்மையும் தெய்வீக தன்மையும் மாறிக்கொண்டே இருக்கும். மனிதர்களுக்கு மறதி அதிகமாக இருப்பதால் ஒரு விழா வைத்து கொண்டாடப்படுகிறது.இதில் தீபஒளியை புரியாதவருக்கு விளக்கு வைத்து காண்பிக்கப்பட்டது.
தீபாவளிக்கு முன் நாளே வீட்டை சுத்தம் செய்து சுண்ணாம்பு அடித்து மனிதனின் மனதில் நல்ல ஒரு மாற்றம் நிகழும் வண்ணம் மாற்றி அமைப்பர். தீபாவளியன்று காலையில் எள் எண்ணை தேயித்து குளித்து சுத்தமான உடையனிந்து கோயிலுக்கு சென்று வனங்கி வருவர். நோன்பு முடி கிடைத்த வீட்டில் பெரியவர்கள் விரதம் இருப்பர். சாமிக்கு பலகாரம் செய்து மாலை வேளையில் கோயிலுக்கு சென்று வந்தபின் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து சாமிக்கு படைப்பர். பின் நோன்பு முடி இல்லாத வீடுகளுக்கு சென்று சாப்பிட அழைத்து சாப்பிட்ட பின் விரதம் முடிப்பர். காலை வேளையிலிருந்து சாப்பிடதலால் நன்கு சாப்பிடுவர்.
எண்ணை தேய்த்தால் பகலில் அதிகமான உணவு கூடாது.உறக்கம் கூடாது.உடல் உறவு கூடாது. மக்களாகிய நம்மால் இப்படி கட்டு பாட்டில் இருக்க முடியாது.பெரும்பாலும் இந்த மாதத்தில் அதிகமான உணவு கூடாது. பூமி வலது புறத்தில் இருந்து இடது புறத்தில் நகரும். அப்பொழுது சூரியன் இடது புறத்திலிருந்து வலது புறத்துக்கு செல்வதாக நமக்கு தெரியும்.இந்த கால மாற்றத்தால் மழை பெய்ய ஆரம்பிக்கும்.சூட இருந்த பூமி மழையால் வரும் குளிச்சியால் ,பூமியின் சூடு மேலே வந்து சமனாகும். அனைத்து உயிர்களுக்கும் அக்னி மந்தம் ஏற்படுமாம்.இக்காலத்தில் அதிகமாக நாம் சாப்பிட கூடாது. இந்த இயற்கை மந்தத்தை சரி செய்ய உஷ்ணமான உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இதற்குதான் அயுர்வேதத்தில் இஞ்சி லெகியம்/தீபாவளி லேகியம் சாப்பிடனும் வழியுறத்தப்படுகிறது
நோன்பு முடி என்பது தீட்சையை குறிக்கிறது. தீட்சை இல்லாமல் பாவத்தை குறிக்ககூடிய நரகசூரனை அழிக்க இயலாது. நோன்பு முடி உள்ளவர்கள் மட்டும் தீபாவளிக்கு நோன்பிருங்கள். உண்மையான வழிக்கு வெகு தூரமாயினும் இதை தயவு செய்து மாற்றம் வேண்டாம்.கொண்டாட விருப்பமிருந்தால் கடைகளில் நோன்பு முடியை வாங்கி தீட்சை கொடுக்கும் யோகியுடம் சென்று தீட்சை பெற்று தீபாவளியை கொண்டாடுங்கள். பயப்பட தேவையில்லை பாவம் சேராது. யோகாவை பற்றி எந்த அறிவும் இல்லாத ஐயனிடமோ அல்லது பூஜாரிடமோ அந்த நோன்பு முடியை வாங்க கூடாது.
.
பழகாரம் (பழ ஆகாரம்) பலகாரமாக( பல ஆகாரம் ) மருவி உள்ளது. யோசித்து செயல்படுங்கள்.
ஒரு வியாபாரி தன் வியாபாரத்திற்காக உண்மையை மருவி அமைக்க வலிமை பெற்றவர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு உணவு/உடல்/காலம் போன்றவற்றில் சூச்சமம் உள்ளவர்கள்.தீபாவளி சமயத்தில் வியாபாரி என்ன விதத்தில் லாபம் வருமோ அதெல்லாம் செய்ய ஆரம்பிப்பான். இக்காலத்தில் கொசுக்களும்/பூச்சிகளும் அதிகமாக இருப்பதால் வீட்டைச்சுற்றி விளக்கு வைத்தால் கொசுக்கள்/பூச்சிகள் என்ற அசுரன் விளக்கினால் ஈர்க்கப்பட்டு அழிய ஆரம்பிக்கும் என்றும் ஒரு கதை உண்டு. வெடி வைத்தாலும் அதற்கும் ஈர்க்க படுமாம். ஒரு விழான்னு வந்து விட்டால் புது துணி,நகை,பட்டாசு,இனிப்பு என்று ஒரு வியாபாரம் தொடங்க ஆரம்பித்து விடும்.மக்களுக்கு சீரணத்தை கெடுக்கும் உணவுகளை பழக்கப்படுத்திவிட்டால் வியாபாரம் நன்றாக நடைபெறும்.
தீபாவளி சமயத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் தான்.மற்றவருக்கு நிச்சியம் நஷ்டம் தான்.
பட்டாசு/துணி/இனிப்பு/ஆடம்பர செலவுகள் நிச்சயமாக சுற்றுப்புறத்தை இக்காலத்தில் வேகமாக கெடுக்கும். பட்டாசு/துணி/இனிப்பு/உறவு/நண்பர் ஆகியவை சேரும்பொழுது நமக்கு நிச்சயமாக ஒரு விதமான மயக்கமான மகிழ்ச்சி இருக்க தான் செய்கிறது.இந்த மயக்கமான மகிழ்ச்சி வேண்டுமானால் பட்டாசு/துணி/இனிப்பு/உறவு/நண்பர் நோக்கி நகர ஆரம்பியுங்கள்.
தூய்மையான மகிழ்ச்சி வேண்டுமானால் யொக குருவை நோக்கி நடைபோடுங்கள்.இதில் செலவு மிகவும் குறைவு. லாபம்/நஷ்டம் உங்களை மட்டும் சார்ந்துள்ளது.
இந்த தீபாவளி/கார்த்திகை பண்டிகை முறை தொடர்ந்து நடை பெற வேண்டும். தேடல் உள்ளவர்களுக்கு எதற்கு இந்த பண்டிகை என்ற கேள்வி வரும். முதலில் தவறான கதைகள் சொல்லப்பட்டாலும் தேடல் உள்ளவன் கடைசியில் தூய்மையான வழி ஒன்று உள்ளது என்ற விழிப்புணர்வால் உந்தபட்டு சரியான வழி ஆரம்பமாகும்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…
–சசிகுமார் சின்னராஜு