ஒவ்வொரு முறையும் வானத்தில் உள்ள சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும் பொழுது எதோ ஒரு விதத்தில் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பாட்டி வடை சுட்ட கதை, நிலா சோறு போல கதைகளை படித்து நாம் சந்திரனை மகிழ்வுடன் பார்க்கிறோம். சந்திரனின் ரூபம் தினமும் மாறும்பொழுது எப்படி நடக்கிறது என பல கேள்விகள்.
சந்திரன் தன்னுடையை ஒளியை சூரியனிடமிருந்து பெற்று நமக்கு பிரதிபளிக்கிறது. சந்திரனின் ஒளி தன் சுற்றுப்பாதையின் இருப்பிடத்தை பொறுத்து வளர்வதும் தேய்வதுமாக உள்ளது. முதலில் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டில் உள்ளது. இப்பொழுது சூரியன் பக்கமுள்ள சந்திரனில் ஒளி படுகிறது. நம் பக்கமுள்ள சந்திரனில் ஒளியில்லாதால் அம்மாவாசை அல்லது சூனியம் என சொல்கிறோம். பின்பு சந்திரன் ஒவ்வொரு நாட்களும் 12 பாகை (அ) டிகிரி சுற்றுப்பாதையில் நகரும் பொழுது சந்திரனின் ஒளி நம் மீது படுகிறது. சூனியத்திலிருந்து ஒளி வளர்வதால் வளர்பிறை என்கிறோம். ஒவ்வொரு நாளும் சந்திரனின் ஒளி வளர்ந்து 15-ம் நாளில் இருக்கும் சந்திரனை பௌவர்ணமி என்கிறோம். இந்நாளில் சூரியன் பூமி சந்திரன் ஒரே நேர்கோட்டில் இருக்கும். மீண்டும் சந்திரன் ஒவ்வொரு நாட்களும் 12 பாகை (அ) டிகிரி சுற்றுப்பாதையில் நகரும் பொழுது சந்திரன் மீது படும் ஒளி குறைகிறது. ஒளி தினமும் குறைவதால் சந்திரனை தேய்பிறை என்கிறோம். ஒவ்வொரு நாளும் சந்திரனின் ஒளி தேய்ந்து 15-ம் நாளில் இருக்கும் சந்திரனை அம்மாவாசை என்கிறோம். சந்திரன் பூமியை ஒரு சுற்று வருவதை ஒரு மாதமாக கணக்கிடப்படுகிறது.
இதே போல மனமும் சில வகையான சந்திரனின் குணம் ஒத்துபோகிறது. சந்திரனை போல நம் மனமும் வளர்கிறது தேய்கிறது. பிறக்கும் பொழுது எண்ணமற்ற நம் மனம் நாம் வளரும் பொழுது பல எண்ணங்கள் சேர்ந்து கொள்கிறது. நமக்கு மறதி ஒன்று இருப்பதால் எண்ணங்களும் தேய்கிறது. ஒரு வேலை நமக்கு மறதில்லாமல் இருந்தால் பல எண்ணங்களுடன் துன்பமுடன் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும். அறிவை வளர்த்து கொண்டு நாம் மேன்மையடையாமல் பல எண்ணங்கள் சேர்த்து துன்பத்தில் வாழுகிறோம். சூரியனை போல சுயமான ஒளியை பிரதிபளிக்க்கூடிய நாம் சந்திரனை போல வாழ்ந்து மடிகிறோம். இத்துன்பத்தை போக்க தான் பல முறைகளை கையாள்கிறோம்.
துன்பத்தில் வாடும் மனம் நிம்மதி அன்பை தேடுகிறது. இச்செயலை சந்திரனின் அம்மாவாசை பௌவர்ணமியை உவமையாக வைத்து பெரியோர்கள் கொண்டாடியுள்ளனர்.
அம்மாவாசையில் சில பண்டிகைகளும் பௌவர்ணமியில் சில பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது. அமாவாசை எப்பொழுதும் ஆரம்பம் செய்யும் நாள், கற்க, தொழிலை தொடங்க வேண்டிய நாள், தீபாவளி, ஆடி அம்மாவாசை என உண்டு. பௌவர்ணமி என்பது முழு அன்பை வெளிப்படுத்தப்பட்ட நாள். அதனால் அன்பை கொண்டாடும் விதமாக பொங்கல், திருக்கார்த்திகை, கௌதம புத்தர் ஞானமடைந்த நாள், ஞானமடைந்த குருவுக்கு மரியாதை செய்யும் நாள் என உண்டு. சந்திரனின் அம்மாவசையை அன்பில்லாத ஒன்றாக கற்பனை செய்க. தாய் பாசம், ஆண் பெண் இருவருக்கு ஏற்படும் அன்பு ஒன்றிலிருந்து ஐம்பது வரை ஒளியை பெற்ற சந்திரனாக கற்பனை செய்க. ஞானமடைந்த ஒருவரின் இதயம் 100 சதவிகிதம் அன்பான ஒளியை பெற்ற பௌவர்ணமி போல் கற்பனை செய்க. ஞானம் எப்ப வேண்டுமானாலும் எந்த நாட்களில் வேண்டுமானலும் நடக்கும். ஆனால் ஞானம் அடைந்த ஒருவரை முழு ஒளியை அடைந்த பௌவர்ணமி அன்று கவுரவிக்கப்படுகிறார். அம்மாவாசையில் மகாவீரர் ஞானமடைந்தாலும் பௌவர்னமி அன்று கவுரவிக்கப்படனும்.
மனதில் எண்ணத்தால் நிரப்பி துன்பத்தை சந்திக்கிறோம். அதே மனதில் அன்பை நிரப்பி இன்பத்தை அடைகிறோம். நமது முன்னோர்கள் சந்திரனை வைத்து மனதின் பண்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
நன்றி
~ சசிகுமார் சின்னராஜு.