அசுர குணங்களை உடையவர்கள் அசுரர்கள், தெய்வீக குணங்களை உடையவர்கள் தேவர்கள் ஆவர்.
காமம், கோபம், பொறாமை, பொருட்களின் மீதுள்ள பற்று, நான் பெரிய மனிதன் என்ற சிந்தனை, கடவுளை வணங்கத்தெரியாமல் செய்யும் வேள்வி, உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற சிந்தனை, நீ வேள்வி செய்யாமல் மற்றவர்களை வைத்து செய்து பலனை எதிர்பார்ப்பது, சிவனை பாதுகாக்கும் தியானத்தை செய்யாமல் செய்யும் காரியம் வேள்வி ஆகிய அனைத்தும் அசுர குணங்களை குறிக்கும்.
கடவுளை எப்பொழுதும் நினைவில் வைப்பது, சீவனை பாதுகாப்பது, ஆன்மாவை தவிர மற்றனைத்தின் மீதும் பற்றில்லாமல் இருப்பது, பிரானன் அபானனாக மாறுவதை குறைத்துக்கொண்டே செல்வது, விருப்பு வெறுப்பில்லாமல் வைராக்கியம் மனமுள்ளவர்கள் சத்துவ குணங்களை உடையவர்கள், தூய்மை, ஞானம், உயிரை பாதுகாக்கும் அல்லது நீட்டும் இயல்பு ஆகிய அனைத்தும் தேவர்களை குறிப்பது.
அசுரர்கள் சிற்றின்பத்தில் துய்ப்பார்கள் தேவர்கள் பேரின்பத்தில் துய்ப்பார்கள். அசுரர்கள் நேரத்தை கடக்க இயலாது, தேவர்கள் நேரத்தினை கடந்து நிற்ப்பார்கள்.மனித இனமே அசுரனாகவும் மாற முடியும், தேவராகவும் மாற முடியும். அசுரர்களாகிய அரக்கர்கள் நரகத்தில் வாழ்வார்கள், தேவதைகள் சொர்கத்தில் வாழ்வார்கள்.
சொர்கமும் நரகமும் எங்கே உள்ளது?
தனி மனிதனுக்குள்ளே தான் சொர்கமும் நரகமும் உள்ளது. மேலுகம் கீழுகமும் தனி மனிதனுக்குள்ளே உள்ளது. முயற்ச்சி செய்தால் மேலுகத்துக்கும் அதாவது சொர்கத்துக்கு செல்ல முடியும். முயற்ச்சி செய்யாமலே கீழுகமான நரகத்துக்கு செல்ல முடியும். காமம், கோபம், லோபம் போன்ற குணங்கள் இருந்தாலே நாம் நரகத்தில் வாழ்கிறோம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
அசுரர்கள் தேவர்களாக மாற முடியுமா?
மனித இனமே அசுரனாகவும் மாற முடியும், தேவராகவும் மாற முடியும். ஒரு வேலை தேவனாக மாறிவிட்டால் அசுரனுக்கு வாய்ப்பில்லை என்று எண்ண வேண்டாம். தேவன் பேரின்பத்தை விட்டு கீழே இறங்கும் பொழுது ஐந்து புலண்களும் வேலையை தொடங்கிவிடும். எண்ண பரிமாற்றம் நடைபெறும். விருப்பும் வெறுப்பும் வந்துவிட்டால் அசுரனாக மாறிவிட்டோம் என்று எடுத்துகொள்ள வேண்டும்.
சீவனிலிருந்து பிறக்கும் சக்தி கண், காது, மூக்கு, வாய், தோல் வழியாக வெளியே சென்று கொண்டே இருக்கிறது. இப்படி செலவாகும் பிராணனை தான் அபானன் என்கிறோம். அப்படி செலவாகும் சக்தியை சேமிப்பது என்பது சாதரண காரியம் கிடையாது. ஆனால் சாத்தியம் ஆகும். நம்முடைய கவனத்தை ஒரே இடத்தில் ஒடுக்கினால் சக்தி விரையமாகாமல் இருப்பது நம்மால் உணர முடியும்.
அபானனை குறைக்கும் வித்தையை கற்றுக்கொண்டு செயல்படுத்தினால் நிச்சியமாக தேவர்களாக மாற முடியும். ஒரு மனிதன் அசுர குணங்களை பெற்றிருந்தால் அசுரன் என்றும், அதே மனிதன் தெய்வீக குணங்களை பெற்றிருந்தால் தேவன் என்றும் அறியப்படுகிறார்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு