இமயமலைக்கு சென்று வர வேண்டும் என்ற ஒரு ஆர்வம் இந்தியாவில் வசிக்கும் ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு இருக்கும்.
இமயமலையில் பாபா போன்ற சித்தர்கள் ஞானிகள் சூச்சம தேகத்தில் நடமாடுகிறார்கள் என கருத்து நிலவுகிறது. அதனால் ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் பலர் அங்கே சென்றால் அமைதி முக்தி கிடைக்கும் என நம்புகின்றனர்.
பலர் அங்கு சென்று பார்த்து திரும்புகின்றனர், சிலர் அங்கே தங்கி விடுகின்றனர்.
ஆன்மீகத்தில் சொல்லுகிற இமயமலை இந்தியாவின் வடக்கில் அமைந்துள்ள இமயமலை என்ற நிலப்பகுதி என நம்பிக் கொண்டிருக்கிறோம். அது இந்தியா திபத் சீனா எல்லைப்பகுதி மட்டும், மற்றபடி ஒன்றுமில்லை.
குளிர்ந்த பகுதியான இமயமலையில் சிவன் வாசம் செய்கிறான், அதனால் அங்கு சென்றால் சிவனைப் பார்த்து விடலாம் என எண்ணி பலர் செல்கின்றனர். சிவன் எல்லா இடத்திலும் இருப்பார். இறைவன் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இல்லை, அனைத்தும் அவன் தான்.
மனதால் அசிங்கம் அழுக்கு என உணர்ந்த பகுதியிலும் சிவன் வாசம் செய்வான். அசைவம் சாப்பிடும் இடத்திலும், அன்பு உள்ளம் கொண்டு அசைவம் சாப்பிடும் மனதிலும் இருப்பான். அவனைப் பார்க்க உடல் சுத்தம் அவசியமில்லை, மனச்சுத்தமே முக்கியம். வசிக்கும் இடத்திலிருந்து இறைவனை / சிவனை உணர முடியும்.
இமயமலை என்பது நம் கண் இமைகளுக்கு நடுவில் உள்ள ஒரு பகுதி. அங்கு பல நிமிடங்கள் எந்த எண்ணங்களும் இல்லாமல் விழிப்புணர்வோடு காத்திருப்போருக்கு இறைவன் காட்சி கொடுப்பான் என சந்தேகமே கிடையாது.
மேலே கூறப்பட்ட செய்திகளை தங்கள் மனதால் பகுத்து உணர்ந்து செயல்படுங்கள்.
நன்றி.
~சசிகுமார்.