அம்மன், சிவன், விஷ்னு போன்ற பெரும்பாலான
கோயில்களில் கொடிமரத்துக்கு அடுத்து பலிபீடத்தை எதற்கு வைத்துள்ளார்கள் என இப்பதிவில் பார்ப்போம்.
அம்மன் கோயில்களில் ஆடு கோழியை பலிகொடுப்பார்கள்.
சைவக்கோயில்களில் எழுமிச்சையை வெட்டுவார்கள் அல்லது உப்பை கறைப்பார்கள்.
எழும் இச்சையை அறுக்க வேண்டும்.
எழுமிச்சையை அறுத்து குங்குமத்தை தடவி வைப்பர். குங்குமம் வைத்தால் தீயசக்திகள் தாக்காது. குங்குமம் வைக்கும் இடம் நெற்றிபொட்டிலிருந்து உச்சி வரை. நெற்றியிலிருந்து உச்சி வரை கவனமாகயிருந்தால் எழும் இச்சையை அறுத்து விடலாம்.
தண்ணீரில் உப்பு கறைவது போன்று மன அழுக்குகளை கறைக்க வேண்டும்.
மன அழுக்கில்லாத நிலைக்கு சென்றவுடன் இறைவனை எளிதில் பார்க்கமுடியும்.
கோழி ஆடுகளை வெட்டினால் இறைவனை பார்த்துவிடலாம் என்பது தவறு. பலிபீடம் அதற்கில்லை. அதற்கு பதில் காமம், கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற மனஅழுக்குகளையும் உடல் பற்றையும் வெட்டினால் இறைவனை உணரலாம் என சொல்லாத்தான் பலிபீடம்.
நம்மை நாமே வெட்டுவது அல்லது அறுப்பதற்க்கு சமம் தான் இந்த பலிபீடம். நம் தலையிலுள்ள கனத்தை வெட்டினால் இறைவனை எளிதில் காணலாம்.
இலங்கையின் சிறையிலிருந்து சீதை விடுவித்தபின் இராமனிடம் சேருமுன் அக்னியில் குளிப்பது போன்றது பலிபீடம்.
ஏசு தன்னை சுத்தப்படுத்திக்கொண்டார் என்பதற்கு அடையாளம் தான் சிலுவை. ஏசு சிலுவையில் இருப்பது பலிபீடம் தான்.
நல்லது கெட்டது போன்ற எல்லா பாவத்தையும் பலியிட்டு பின்தான் இறைவனை காண முடியும் என்பதற்காக கோயில்களில் பலிபீடம் அமைத்துள்ளனர்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு
நெற்றியிலிருந்து உச்சி வரை கவனமாகயிருந்தால் எழும் இச்சையை அறுத்து விடலாம்.
உணர்வு கூடினாலும் தொடர்ந்து நிற்பதில்லை…அங்கு உணர்வு இருப்பதால் எதாவது நல்லது உண்டா.
உணர்வு இங்கே தெரிகிறது ஆனாலும் உலக இச்சைகள் தொடர்கிறது.நிலையற்றது தான் …அதற்காக அறுவது தேவையா ..
யோக பயிற்சியை நாள் தவறாமல் தொடரும்பொழுது உணர்வு இருக்கும். மேலும் இச்சையும் இருக்கும். தேவைக்கும் ஆசைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. யோக பயிற்சியை நாள் தவறாமல் தொடரும்பொழுது நாதமும் ஒளியும் அதிகமாகும். இறைவனின் அருளை பெறலாம்.