தற்போது பூணூல் சில சமுகத்தில் கடைபிடிக்கிறார்கள். ஆனால் அது எதற்க்காக என்று பலரின் கேள்வியாக உள்ளது. அதுமட்டுமில்லை பெருமை, புகழ்க்காகவும் அணியப்படுகிறது.
கல்வி என்றால் நாம் பள்ளி, கல்லூரியில் போய் தான் கற்கவேண்டும் என்ற எண்ணம் நம்முள்ளது. ஆனால் நம்முள்ளே கல்வி இருக்கிறது. அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் பூணூல் போடப்படுகிறது. இக்கல்வியை கற்றால் மறுபிறவிக்கும் உதவும் என பெரியோர்களின் கூற்று. இறைவனின் அருள் பெற்றால் சில நிமிடங்களில் அறிவில் பல மாற்றம் நிகழ்ந்து விடும். அதனால் தான் முதல் முறை பூணூல் போடும்பொழுது ஒரு விழா( உபநயனம் ) வைத்து காயத்திரி மந்திரம் கற்று கொடுக்கிறார்கள். மாறிக்கொண்டே இருக்கும் மனதிற்க்கு விளிப்புணர்வு ஏற்படுத்தவே பூணூல் அணியப்படுகிறது. உடலில் பூணூல் உரசும்பொழுது காயத்திரி மந்திரம் ஞாபகம் வரும். இம்மந்திரத்தை தினமும் விளிப்புணர்வுடன் செய்யும் பொழுது உடலிலும் மனதிலும் பல மாற்றம் நிகழும். தினமும் மூன்று வேளை கடவுளை வழிபட்டால் மிகச்சிறப்பு.
இறைவனை வழிப்படுமுன் உடலை சுத்தம் செய்து கொள்ளுதல் அவசியம். வயிறு இலகுவாக இருக்க வேண்டும். சாப்பிடக்கூடாது. நாள் தவறாமல் செய்யும் பொழுது அறிவு வளர ஆரம்பிக்கும். நமக்கு ஆறு அறிவு தான் உள்ளது என படிக்கிறோம். குரு தந்த மந்திரத்தை தினமும் விளிப்புணர்வுடன் பூசை செய்யும் பொழுது ஆறு அறிவுக்கு மேல் வளரும் என உறுதி செய்கிறேன்.
இறைவனை உணர்ந்தோர் தான் குருவாக முடியும். குருவினை சரணடைந்து காயத்திரி மந்திரத்தை கற்றுக்கொள்ளுங்கள். ஒரு வேளை தாங்கள் குரு அல்லாத மற்றவரிடம் கற்றால் இறைவனை வேண்டுங்கள். காயத்திரி மந்திரம் என்பது ஏடுகளை பார்த்தோ அல்லது மனனம் செய்தோ உச்சரிப்பதல்ல என உறுதி செய்கிறேன். குழந்தைகள் மனனம் செய்து உச்சரித்தால் தவறில்லை. விளிப்புணர்வு இல்லாமல் வயதாகும் வரை காயத்திரி மந்திரத்தை உச்சரித்தால் என்ன பயன் இருக்கிறது?
காயத்திரி மந்திரத்தை தொடர்ந்து சொல்லும் பொழுது மூச்சு காற்று குறையும், அக்னி உண்டாகும், சுழுமுனை நாடி திறக்கும். உடலிலும் மனதிலும் ஒளி, ஒலி, மங்கலம் என பல மாற்றங்கள் நடக்கும்.
காயத்திரி மந்திரம் நாள் தவறாமல் சொல்லும் பொழுது தற்காலிகமாக உடலில் சூடு உண்டாகும். சீரன கோளாருகள் நடக்கலாம். உடல் நலக்குறைவு ஏற்படும். சிந்தனை அதிகமாகி நிம்மதில்லாமல் போகலாம். அதனால் தங்களை வழிநடத்த குருவின் தொடர்பு மிகவும் அவசியம். உடலில் அதிக சூடு ஏற்பட்டால் இரண்டு முறை குளிப்பது அவசியம்.
பூணூல் அணிவது சத்தியத்தை, உண்மையை, தர்மத்தை, இறைவனை புரிந்துகொள்வதற்க்காக. உடலில் இருக்கும்போதெல்லாம் எதற்க்காக அணிகிறோம் என ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். பூணூல் உடலில் அணிவதால் அது எதற்க்காக என்று கேள்வி வரும். கேள்விகளால் சரியான பதிலை தெரிந்துகொள்ளலாம். ஒரே நாளில் தெரிந்துகொள்ள முடியாது, விளிப்புணர்வு அதிகமாகும் பொழுது தான் நிகழும். நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள், ஏன் பல பிறவிகள் கூட ஆகலாம். எப்ப வேண்டுமானாலும் நிகழலாம்.
பூணூல் பழையது ஆனாலோ அல்லது கிழிந்து விட்டாலோ புது பூணூலை மாட்டிக்கொள்ளுங்கள். பூணூலின் மகத்துவத்தை மற்றவருக்கு பகிரவும், மறக்காமல் இருக்கவும் வருடந்தோரும் ஒரு விழா வைத்து கொண்டாடுவது நல்லது. ஏற்கனவே ஆவணி அவிட்டத்தல் நடக்கிறது, தொடர்ந்து செய்தல் நலம்.
திருமணம் ஆகாதவர் ஒரு பூணுலும், திருமணம் ஆனவர் இரண்டு பூணுலும், பெரியோர் மூன்று பூணுலும் அணிவதாக சடங்கு உள்ளது. அறிவியல் காரணம் தெரிந்து செய்தல் நலம்.
ஆண், பெண், மூன்றாம் பாலினம், சாதி, மதம், நாடு என எந்த பாகுபாடும் கிடையாது. விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம். எப்ப வேண்டுமானாலும், 12-14 வயதுக்கு மேல் எந்த வயதில் வேண்டுமானலும் அணியலாம். எதற்க்கு அணிகிறோம் என்று தெரிந்து செய்தால் நல்லது.
பூணூல் அணிந்தால் தான் சத்தியத்தை தெரிந்துகொள்ள முடியும் என நினைக்க வேண்டாம். பூணூல் அணியவில்லை என்றாலும் சரியான ஆர்வமுள்ளவருக்கு இறைவனை தவிர மற்ற எதிலும் ஆர்வம் குறைவாகத்தான் இருக்கும். அவன் முற்பிறவியில் விட்டு வந்த தேடலை தொடரவே பிறந்திருப்பான்.
கங்கணம் கேள்விபட்டிருப்பீர்கள், ஒரு செயல் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என கங்கணம் கட்டுவார்கள், செயல் முடிந்தபின் கழட்டிவிடுவர். அதே போலதான் பூணூலும். கடவுளை முழுமையாக உணர்ந்து தெளிந்த பின் பூணூலும் அணியவேண்டிய அவசியமில்லை. செயல் முடிந்தபின் பூணுலை கழட்டிவிடலாம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு
விழிப்புணர்வுடன் எப்படி செய்வது.. நான் இரண்டு ஆண்டுகளாக செய்கிறேன்.
மூச்சு பயிற்சி செய்து கொண்டே செய்ய வேண்டுமா …ஏதாவது நடக்கும் என்று எதிர் பார்த்து
மாற்றம் இல்லாததால் நீங்கள் கூறிய வரி சிந்தனையை தூண்டியது.
தங்கள் உடல் மனம் மற்றும் உயிர் மீது எந்தளவு அக்கரை காட்டுகிறீர்களோ அந்தளவு விளிப்புணர்வு வரும். ஒரு வேலைய தேவையில்லாத சிந்தனையுடனும் செய்யலாம். இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைய செய்ய இயலாது. அதே வேலைய முழு கவனமுடன் செய்யும்பொழுது வேலை சிறிது சீக்கிரமாக முடியும். மனம் இங்கும் அங்கும் அலைந்துகொண்டேதான் இருக்கும். சரியான யோக ஆசிரியரிடம் கற்று யோக பயிற்சியை தொடர்ந்து செய்யும் பொழுது நிச்சயமாக மாற்றம் ஏற்படும்.
Excellent detailing and flow. Very informative. Thanks.