சிவன் எங்கும் பரந்தும் விரிந்தும் உள்ளதாக பெரியோர்களின் கூற்று. அவன் நம்முள்ளும் உள்ளான் என்பது உணர்வாளர்களுக்கு புரியும்.
குலம் என்பது நம்முடைய மூதாதையர்களின் வழிதோன்றல்களாக உள்ள கருத்து. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஒரே சாதியுள் பல குலம் இருக்கிறது. ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு குலதெய்வம் இருக்கிறது. ஒரே ஊரிலுள்ள ஒரே சாதியில் பல குலதெய்வம் இருக்கிறது. தாத்தா இறந்தாலும் தாத்தாவின் மகன் வழி பேரனுக்கு இக்குலதெய்வம் மாறாது. தாத்தாவின் மகள் வேறு குடும்பத்திற்க்கு செல்லும்பொழுது குலதெய்வம் மாறிவிடும். குலதெய்வத்தை தான் குலம் என ஐயம் எமக்கு உள்ளது.
வாழும் ஒருவர் தெய்வ நிலையை எட்டிவிட்டால் குரு இடத்திற்க்கு சென்றுவிடுவார். மற்றவருக்கு வழிகாட்டகூடிய ஒருவர். அவரை மதித்து வணங்கினால் குரு சரியான வழியை நிச்சயம் காட்டமுடியும். குரு தன் சீடர்களுக்கு வழிகாட்ட பள்ளிக்கோயில் அமைத்திருக்கலாம். குரு இறந்தாலும் அவரின் சீடர்கள் தெய்வசிலையை அமைத்து கோயிலாக மாறகூடிய நிலை உருவாகலாம். சீடர்களின் மகன் வழி பேரனுக்கு குருவின் பள்ளிக்கோயிலோ அல்லது குருவின் சமாதியோ குலதெய்வமாக மாறலாம்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் (திருமந்திரம்)
சிலர் முன் ஜென்மம், அடுத்த ஜென்மம் என்று கூறுவார்கள். மனதை ஒருநிலைபடுத்தினால் புரியும். நாம் செய்த பாவ புன்னியம் ஏழேழு ஜென்மத்துக்கும் தொடரும் என கேள்விபட்டிருப்போம். ஜென்மம் உள்ளது என பெரியோர்களின் கூற்று. இதுவும் குலம் என கருதலாம்.
சிவன் கோயிலுக்கு சொந்தமான பொருளை வீட்டிற்க்கு எடுத்து வந்தாள் அவர்களுடைய குலம் நாசமாகும் என புரளி உள்ளது. சிவன் எல்லா இடத்திலும் நிறைந்துள்ளான் என பெரியோர் கூறும் பொழுது எல்லா பொருளும் அவனுடையதாகிறது.
கஞ்சாவை சிவன் சொத்து என்றும் சொல்வர். கஞ்சா ஒரு போதை பொருள். கஞ்சாவை பயன்படுத்தும் ஒருவர் வீட்டில் இருந்தால் அவர்களின் குலம் நாசமாகும். போதைக்கு அடிமையானவர் உணர்வுகள் அதிகமாகும், அதனால் தன்நிலை இழந்து சரியான முடிவை எடுக்காமல் போகும் சூழ்நிலை வரும். அதுவே அவர்களின் முன்னேற்றத்திற்க்கு தடையாகலாம்.
போதை ஏற்படுத்தகூடிய ஒன்று நமக்குள்ளும் இருக்கிறது. நம்முள் உள்ள போதையை பயன்படுத்தினால் மனம் சுத்தமாகும், உடலில் உள்ள நோய் சரியாகும். இதை பெறுவதற்க்கு சிவனின்( இறைவன் ) மீது தீராத காதல் என்ற ஞானம் வேண்டும்.
சிவனின்( இறைவன் ) மீது தீராத காதல் கொண்டு சிவனை உணர்ந்து விட்டால் குலம் என மூதாதையர்களின் வழிதோன்றல் மறைந்து எல்லாம் அவனே என உணர்வு ஏற்படும். குலம் மட்டும் நசியாது, சாதி, மதம், இனம், நாடு, ஜென்மம் என அனைத்தும் நாசமாகும். இதுவே சிவன் சொத்து குலம் நாசம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு
புதிய விளக்கம்…நன்றி