காடு மலைகளில் பைத்தியம் போல திரிபவன் சித்தன் என பெரும்பாலும் நம்புகிறோம்.ஆனால் அவ்வாரில்லை.
சிவனின் ரூபமாக நமது உடலில் சீவன் உள்ளது. எல்லா உயிர்களிலும் உள்ளது. சீவனை பற்றி தெரிந்து கொள்ள மூச்சு காற்றின் வேகத்தை தடுத்து மனதை வசப்படுத்தி இறைவனின் நினைப்பிலே இருக்க வேண்டும். சித்தனின் போக்கு சிவனை அறிந்துகொள்ளவோ அல்லது இணைந்துகொள்ளவோ துடிக்கும். அதனால் தான் சித்தன் போக்கு சிவன் போக்கு.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு