சில மதம் மாமன் மச்சான் உறவுகளை கல்யாணம் செய்கின்றனர், சில மதம் அண்ணன் தம்பி உறவுகளை கல்யாணம் செய்கின்றனர். சில சாதி மக்கள் சொந்தமான உறவுகளுக்குள் கல்யாணம் செய்யாமல் வெளியில் கல்யாணம் செய்கின்றனர். தற்போது சில இன மக்கள் ஒரே அப்பா அம்மாவுக்கு பிறந்த ஆண்மகனின் பிள்ளைகளை அதே அப்பா அம்மாவுக்கு பிறந்த வேறொரு ஆண்மகனின் பிள்ளைகளுடன் கல்யானம் செய்வதில்லை. ஆனால் ஒரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனின் பிள்ளைகளை அதே குடும்பத்தில் பிறந்த ஆண்மகனின் சகோதிரிகளின் பிள்ளைகளுடன் கல்யாணம் செய்கின்றனர். சித்தப்பா பெரியப்பாவின் குடும்பத்திலும் கல்யானம் செய்வதில்லை ஆனால் மாமன் மச்சான் குடும்பத்தில் கல்யாணம் செய்கின்றனர். சுத்தி வளச்சி சொந்தம் பந்தந்தையெல்லாம் தேடி சித்தப்பா பெரியப்பா குடும்பத்தில் கல்யாணம் செய்வதில்லை ஆனால் தூரமான மாமன் மச்சான் உறவுகளை கல்யாணம் செய்கின்றனர்.
சில இனம் தன் மகன் மகளை கூட பிறந்த சகோதரனனின் பிள்ளைகளுடன் கல்யாணம் செய்கின்றனர். இந்த இனம் தன் சகோதரிகளின் பிள்ளைகளுடன் திருமணம் செய்வதை விரும்பவதில்லை. இப்படி செய்வதால் மாமன் மச்சான் உறவுகள் மிகவும் குறைவாக இருக்கும். சகோதரரின் குடும்பத்தில் ஆண்பாலினமும் பெண்பாலினமும் சரிசமமாக இருந்தால் சகோதரரின் குடும்பத்திலே கல்யாணம் செய்யலாம். அதனால் இது போன்ற கல்யாணம் செய்வது 100% சாத்தியம் கிடையாது. சகோதரரின் குடும்பத்தில் கல்யாணம் செய்வதால் பல செலவுகள் குறைகிறது. இரண்டு குடும்பத்திலுள்ள அப்பாக்களும் சகோதரன் என்பதால் வரதட்சனை வாங்க வேண்டிய அவசியமில்லை. பிறந்ததிலிருந்து ஒரே குடும்பத்தில் வளர்ந்த இருமணம் திருமணம் செய்யும்பொழுது பணத்தின் அவசியம் மிகவும் குறைந்துவிடும். இருவரும் ஒரே குடும்பத்தில் சிறு வயது முதல் வாழ்ந்ததால் ஜாதகம்/ பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எப்படியும் புரிந்துகொண்டு வாழ்க்கையை வாழ்வார்கள். தனியாக மண்டபம் அவசியமில்லை, விலை உயர்ந்த பட்டாடைகள் அவசியமில்லை சாதரன ஆடைகள் போதும், நகைகள் அவசியமில்லை. அழகுநிலையம் சென்று அழகை அதிகபடுத்தவேண்டிய அவசியமில்லை. ஆடம்பரமான வீடு அவசியமில்லை. பெண்ணையோ அல்லது ஆணையோ கல்யாணம் செய்யும் முன் கேட்கும் கல்வி தகுதி அவசியமில்லை. ஆடம்பரமாக கல்யாணம் செய்வதற்க்கு பணத்திற்க்காக உழைக்கும் அவசியம் மிகவும் குறைந்துவிடும், ஒரே வீட்டில் பிறந்ததிலிருந்து வளர்ந்து வருவதால் இருமனதுக்கும் பிடித்திருந்தால் போதும் தாளியோ அல்லது மோதிரம் போட வேண்டிய அவசியமில்லை. இரு மனதுக்கும் பிடித்திருந்தால் கல்யாணம் என்ற பேச்சிக்கே அவசியமில்லை.
சில இனம் மாமன் மச்சான் உறவுகளை கல்யானம் செய்கின்றனர். அப்படி செய்யும் பொழுது ஒரு ஆண்மகனின் கூட பிறந்த சகோதரர் குடும்பத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி சென்றுகொண்டேருப்பார்கள். ஒவ்வொரு சகோதரனுக்கும் பேரன் பேத்தி வரும் பொழுது சகோதரருக்கு இடையில் இடைவெளி அதிகமாகும். அப்படி குடும்ப உறவு விலகி செல்லாமல் இருக்க அண்ணன் தம்பி குடும்பத்துக்கு இடையில் ஒரு தலைமுறைக்கு ஒருமுறை கல்யாணம் செய்கிறார்கள். இப்படி பட்ட சூழ்நிலையில் குடும்பம் மீண்டும் சேர வாய்ப்பு மிகவும் அதிகம்.
அண்ணன் தம்பி என்றால் கூடபிறந்த அண்ணன் தம்பி கிடையாது, அப்பாவின் சகோதரி சகோதரனனின் பிள்ளைகளை கல்யாணம் செய்வது. இப்படி கல்யானம் செய்வதால் அத்தை மாமன் என்ற உறவு முறை கூப்பிடும் பழக்கம் குறைந்துவிடும். சொந்தத்துக்குள்ளே கல்யாணம் செய்வதால் சம்பாதித்த சொத்து வெளியில் செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு. சொத்தின் மீது ஆதிக்கம்/பேராசை அதிகமாகும் பொழுது மற்ற குடும்பத்தின் சொத்தை பறிக்க வாய்ப்புள்ளது. குடும்பத்துக்குள்ளே கல்யாணம் செய்வதால் மக்கள் தொகை அதிகமாகி ஒரு இனம்/சாதி உருவாக வாய்ப்பு மிகவும் அதிகம். சாதி/இனம் உருவாகினால் மற்ற சாதி/இனத்துக்கும் போர் நிகழ வாய்ப்புள்ளது. இரத்த சம்பந்தம் இல்லாத குடும்பத்தில் கல்யாணம் செய்வதற்க்கு முன்னால் ஆணோ அல்லது பெண்ணோ மற்ற பாலிணத்தை கேட்கும் பெரும்பாலான கேள்வி என்ன படித்துள்ளார் என்பதும், என்ன வேலை என்பதும் தான். இரத்த சம்பந்தம் உள்ள உறவில் கல்யானம் செய்தால் என்ன படித்துள்ளாய் என்ற கேள்வி அவசியமில்லை. குடுபத்திற்குள்ளே ஒரு தொழில் இருப்பதால் வேலை என்ன என்பதும் அவசியமில்லை. இதனால் அறிவு தேடல் குறைய வாய்ப்புள்ளதால் மூடனாக இருப்பதற்க்கு வாய்ப்புள்ளது. ஒரே குடும்பத்திற்க்குள்ளே கல்யானம் செய்யும் ஆணும் பெண்ணும் இருப்பதால் சிறுவயதிலே காதல் ஏற்பட்டு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. அப்படி நடைபெற்றால் பிறக்கும் முதல் குழந்தை இறக்கலாம் அல்லது உடலில் வலுவில்லாமல் இருக்கலாம். குடும்பத்துக்குள்ளே காதல் வயப்பட்டு திருமணம் நடக்காமல் மாற்று பெண்ணோ அல்லது ஆணுடன் நடந்துவிட்ட நிலையிலும் மீண்டும் சேர வாய்ப்பு ஏற்பட்டு கலப்பு நடக்கலாம். குடும்பத்துக்குள்ளே பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ எதிர்பாலிணம் தேடும்பொழுது கிடைப்பது அரிதாகும், குறிப்பாக வேறுவீட்டுப்பெண்ணை திருமணம் செய்யும் பொழுது சந்தேகம் அதிகமாக இருக்கும். கல்வி கற்கும் அவசியம் குறைவதால் மக்களை சட்டத்தால் அச்சத்தை ஏற்படுத்தி கட்டுபடுத்த இயலாது. ஆடை, நகை, வீடு போன்ற வியாபாரம் குறைவதால் நாட்டின் வளர்ச்சி குறைய வாய்ப்பு அதிகம். ஆடம்பரத்திற்க்கான ஆடை, நகை, வீடு, கல்வி போன்ற குறைவதால் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும்.
சொந்தத்துக்குள்ளே கல்யாணம் செய்யாமல் வெளியில் கல்யாணம் செய்யவேண்டும் என்ற சட்டம் அல்லது நிர்பந்தம் ஏற்பட்டால் புதுப்புது உறவுகள் வரும். ஐந்து புலனுக்கும் இன்பம் தரும் புது உறவின் மீது புரிதலும் நம்பிக்கையும் அதிகமாக இருக்கும். ஆனால் கூடபிறந்த சகோதர சகோதிரி, இரத்த சம்பந்தம் உள்ள உறவுகளின் மீது நம்பிக்கை குறைவாகலாம். புது உறவுகளுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் கல்வி, அறிவு, ஒழுக்கம், சொத்து போன்றவற்றில் தேடுதல் இருக்க நேரிடும். இதனால் ஆசை சிறுவயது முதல் வளர்ந்து கொண்டே இருக்கும். பொய்யும் பொறாமையும் கூடவே வரும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு கொஞ்சம் இருக்கும். பிறந்த சில வருடத்திலே கல்வியை பற்றி சிந்தனை பற்றி கொள்ளும். தந்தையும் தாயும் குடும்பமும் உணவுக்கு மட்டுமில்லாமல் குழந்தையின் எதிர்காலத்துக்கும் உழைக்க நேரிடும். குடும்பத்தில் சொத்திருந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்து பிரித்து கொடுப்பதால் சொத்தின் மீது ஆதிக்கம் மற்றும் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொருவருக்கும் பணம் மற்றும் பொருளின் மீது பற்று, தற்பெருமை ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் இயற்கையை வெகு சீக்கிரமாக அழிக்க வாய்ப்புள்ளது. ஊரெல்லாம் சொந்தமாக இருக்கும் சூழ்நிலையிருந்தால் வேறு ஊருக்குள் தான் கல்யாணம் செய்யும் நிர்பந்தம் ஏற்படும். இதனால் இரண்டு ஊருக்கும் தொடர்பு, சொந்தம் ஏற்படும். வெவ்வேறு ஊரின் இரண்டு குடும்பத்தின் சொந்தத்தில் நல்லது கெட்டது நடந்தால் இரண்டு குடும்பத்தின் சொந்தங்கள் கலந்துகொள்ளவில்லை என்றால் சொந்தத்துக்குள் மரியாதை குறைவு ஏற்படும். மரியாதை குறைவு ஏற்பட்டால் குடும்பத்துக்குள்ளும், இரண்டு ஊருக்கும் சண்டை சச்சரவு ஏற்படும். விருப்பமில்லை என்றாலும் கலந்துகொள்ளவேண்டிய சூழ்நிலை உள்ளதால் பொருள், பணம் பரிமாற்றம் நடக்கும். இதனால் ஒவ்வொருத்தரின் மனதில் பணம் மற்றும் பொருள் சம்பாதிக்கவில்லை என்றால் வாழ்க்கை வாழமுடியாது என்று ஆழமான பதிவுகள் ஏற்படும். அங்கு இங்கு செல்வதால் உடை அழகாக இருக்க வேண்டும். முகம் அழகாக இருக்க மேக்கப் செய்ய வேண்டும். சென்ற இடத்தில் சொந்தம் பந்தத்துக்கு உணவோ/பொருளோ கொண்டுசென்றால் பணம் இருக்க வேண்டும். ஒரு வேளை வீட்டுக்கு வந்தால் வீடு அழகாக இருக்க வேண்டும். வருவோர்க்கு நன்றாக உபசரிக்க வேண்டும். அங்கு இங்கு செல்வதால் தன்னுடைய பெருமையை சொல்ல சொத்து சேர்க்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் செலவுக்காக பணம் அவசியம் என்பதால் கடைசி வரையில் உழைத்துகொண்டே இருக்கவேண்டும். இதனால் தனிமனிதன் வாழ்நாள் முழுவதும் பேரின்பத்தை துலைத்து சிற்றின்பத்துக்காக உழைத்து நிம்மதில்லாமல் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கடைசியில் உயிரை விட்ட பின் நிம்மதியோட சென்றார் என்ற கதை சொல்லி வாழ்க்கை வீணடித்துகொல்லும் சூழ்நிலை. செத்த பின்பும் நிம்மதியோட செல்ல காரியம் செய்ய வேண்டும். அந்த செத்து போன துக்கத்தை வருட வருடம் நினைவு படுத்தி நம்மை மட்டுமில்லாமல் சொந்தத்தை கூட்டி நிம்மதி கெடுக்க கூடிய சூழ்நிலை. இதனால் எல்லோரும் ஒருவகையான வியாபார மாயையில் சிக்கித்தவிக்கும் சூழ்நிலை. ஒருவகையில் பலநபருக்கு தெரிந்தோ தெரியாமலோ வேலை கொடுக்கப்படும். வேலை கொடுப்பதால் தேவையில்லாத கொலை, கொள்ளை தடுக்கப்படும். பணத்துக்காக பல வகையில் பொருள் பரிமாற்றம் நடப்பதால் இயற்கையை வெகுவிரைவில் தெரிந்தோ தெரியாமலோ அழித்துகொண்டிருக்கிறோம்.
பல வியாபாரம் இப்படிபட்ட கல்யாணத்தால் நடப்பதால் பலவியாபாரிகள் ஒன்றுசேர்ந்து சொந்தத்துக்குள் திருமணம் செய்தால் பிள்ளைகள் ஊனமாக பிறக்கும் என்ற கதை சொல்லப்படுகிறது. எத்தனை ஆராயிச்சியாளர்கள் வந்தாலும் நிருபனம் செய்ய இயலாது. ஆராயிச்சி மேற்கொள்ளவேண்டுமென்றால் மிருகத்தை வைத்து தானே ஆராயிச்சி செய்ய வேண்டும். தனிமனிதனாலே இதை ஆராயிந்து முடிவெடுக்கமுடியும். வீட்டில் வளர்க்கும் நாய்,கோழி, பூனை போன்ற மிருகம்/பறவைகளின் செயல்பாடுகளை பாருங்கள்.
தலையும் தலையும் ஆகாது ஏன்? ஒரு காலத்தில் 15க்கும் குறைவான வயதில் கல்யாணம் செய்தார்கள். சிறிய வயதில் சுக்கிலம் மற்றும் சுரோனிதத்தின் சக்தி குறைவாக இருக்கும். அப்படிபட்ட சூழ்நிலையில் கல்யாணம் செய்தால் பிறக்கும் பிள்ளைகள் செத்து விடும் அல்லது உடலில் ஊனமாக பிறப்பதற்க்கு வாய்ப்பிருக்கு. வித்து சரியாக இருந்தால் வித்திலிந்து விளையும் செடி கொடி மரம் சரியாக இருக்கும். அது போல சரியில்லாத இரண்டு தலபிள்ளைகள் கூடும் பொழுது பிறக்கும் குழந்தை ஊணமாக பிறக்கலாம். இதை காரணம் வைத்து தான் தலையும் தலையும் ஆகாது என்று சொன்னார்கள். இப்பொழுது பெரும்பாலும் 18 வயதுக்கு மேல் தான் கல்யாணம் செய்கின்றனர். அதனால் தலபிள்ளைகள் இரண்டுக்கும் கல்யாணம் செய்யலாம்.
ஐந்து புலனுக்கும் இன்பமளிக்க கூடிய ஒன்று என்றால் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதல்/காமம். இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதலை தான் சிற்றின்பம். சிற்றின்பம் என்பது அதிக நேரம் செலவு செய்ய இயலாது. இருவருக்கும் சக்தி பல வழிகளில் விரையமாகும். சிற்றின்பத்தை அனுபவித்து தெகட்டலோ அல்லது தேவையில்லை என்று பக்குவம் வந்தால் தானே பேரின்பத்தை பற்றி கேள்வி வரும். பேரின்பம் என்பது தனிமனிதனாலே ஐந்து புலனுக்கும் இன்பத்தை அனுபவிக்க முடியும். பேரின்பத்தில் சக்தி விரையமாகாமல் சேரும். அதனால் பல நிமிடம் முதல் பல நாட்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து அனுபவிக்கலாம். தனி மனிதனுக்கு உடலுறவு தேவைபடும் சூழ்நிலையில் சட்டத்தால் தடுத்தும், தொலைக்காட்சி மற்றும் ஊடக வழியில் அரைகுறை ஆடையுடன் தனிமனிதை ஊக்கம் கொடுத்து மனதை பல வழிகளில் துன்பத்துக்குள்ளாக்கிறார்கள். இதனால் சிற்றின்பத்தை பற்றி சிந்தித்து பேரின்பத்தை மறந்துவிடும் சூழ்நிலையுள்ளது. யாரை கல்யானம் செய்ய வேண்டும் எப்ப கல்யாணம் செய்ய வேண்டும் எத்தனை பேருடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதை தனி மனிதனின் சிந்தனைக்கும் தேவைக்கும் உட்பட்டது. இதை சட்டத்தால் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கொடியது. யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு