திரு + இடம் மாறி திராவிடம் ஆனது என்று தொல்காப்பிய சிந்தனையாளர் பதிவிலுள்ள புலவர் இரா.இளங்குமரனார் உரையில் கேட்டேன்.
Source : https://www.youtube.com/watch?v=6nYDsaUJswg
திரு என்றால் உயர்ந்த, மேன்மையுள்ள என்று பொருள். திருப்பதி, திருத்தணி, திருச்செந்தூர், திருச்செங்கோடு, திருவண்ணாமலை போன்று பல பிரபலமான ஊர்கள் இருக்கிறது. திரு இடம் என்றால் குருவின் பார்வையில் கல்வி கற்கும் இடம் தான். அந்தனர்கள் உள்ள இடம். அந்தம் என்றால் முடிவு. முடிவை அறிந்தவர், இறைவனை உணர்ந்தவர்கள் என்று பொருள். அந்தனர்களை பிராமனர், ஆரியர், பெரியோர் என்றும் சொல்லலாம். அந்தனர்கள் பிள்ளைகள் அந்தனர் என்று ஆகாது. இவ்வுலகில் இறைவனை உணர்ந்தவர்கள் மிக சொர்பமே. இறைவனை உணர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து கல்விகளை சொல்லித்தரும் இடம் தான் திருஇடம்( திராவிடம் ).
திராவிடம் என்ற ஒரு குழு ஆரம்பித்து சாதிகளில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கும் கூட்டத்தை மட்டுப்படுத்தினர். பின்பு தான் திராவிடம் என்ற சொல் பிரபலமானது. ஏட்டை மட்டும் படித்துவிட்டு பிராமனர் என்று சொல்லும் பொழுது வாய் கூசவில்லை. சமுகத்தில் ஏதோ சதி நடந்துள்ளது. அதனால் தான் கற்சிலைக்கு பூசை செய்பவனை பிராமனன் என்று நமக்கு அடையாளம் காட்டுகிறது. பிராமனன் என்பது பிரம்மத்தை உணர்ந்தோர் என்று அர்த்தம். அப்படி பிரம்மத்தை உணர்ந்தோர் எல்லா உயிர்கள் மீது இரக்கம் காட்டுவான். அவனிடமிருந்து அன்பு மழை பொழியும். வேத மந்திரத்தை மட்டும் படித்து ஓதுவது பிராமன செயல்கள் அல்ல என்று உறுதி செய்கிறேன். இறையை உணர்வது தான் முக்கியம், இறைவனை பற்றிய ஏடுகளை மட்டும் படிப்பதல்ல.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள். சிந்தனை செய்வோம்.
–சசிகுமார் சின்னராஜு