நாம் சாதியின் அடிப்படையில் வாழ்வதால் எமக்கு தெரிந்த சாதியின் அர்த்தங்களை மட்டும் பதிவு செய்கிறேன்.
முதலில் தொழில் ரீதியாக சாதியை பிரிக்கப்பட்டிருக்கிறது.
வேளாளர் என்பது விவசாயம் செய்பவர். மீனவர் என்பவர் மீன் பிடித்து விற்பவர். வன்னார் என்பது சலவை தொழில் செய்பவர். நாவிதர் என்பது முடி எடுப்பவர் மற்றும் அழகு சேர்ப்பவர். குயவர் என்பது மண் பாண்டம் செய்பவர்.
தச்சர், கற்தச்சர், கொல்லர், பொற்கொல்லர், கன்னார் என ஐந்து தொழிலை குறிப்பது கம்மாளர் சாதி. நுணுக்கங்கள் நிறைந்த தொழில்.
தொழில் சம்பந்தமாக இன்னும் பல சாதிகள் இருக்கலாம், எமக்கு தெரிந்த சாதிகள் மட்டும் மேலே குறிப்பிட்டுள்ளேன். தற்போது நாம் பொறியியல் பட்டதாரி ஆன பின் பொறியியல் துறையில் வேலை செய்தால் பொறியாளர் என்ற சாதியாக அழைக்கலாம். மருத்துவ தொழில் செய்தால் மருத்துவர் என்ற சாதியாக அழைக்கலாம்.
சாதி என்பது தொழிலாக கருதப்படுகிறது முதலில்.
மனிதர்களுக்கு அறிவின் ஆழம் வேறுபடுகிறது. அவ்வாறு அறிவு வளரும் பொழுது பணம், அதிகாரத்தை பிடிப்பார்கள். அப்படி பட்டவர்களை சில சாதியாக பிரிக்கப்படுகிறது.
காமுண்டன் மறுவி கவுண்டன் ஆனது. கமாண்டர் என்ற ஆங்கில சொல்லும் காமுண்டன் என்ற வார்த்தையும் ஒரே அர்த்தத்தை குறிப்பது போல தெரிகிறது . பல நூற்றாண்டுக்கு முன்பு அரசு அதிகாரத்தின் கமாண்டர் பதவியில் இருந்தவர்கள். அவர்களின் வழி வந்தவர்கள் தான் இன்று கவுண்டர் என்று அழைக்கப்படுகிறது. பாதுகாவலர் என்று அர்த்தம்.
காமுண்டன் என்பது காமம் + உண்டன், காமம் உண்டான் என்று பிரித்து பார்த்தால் வேறு ஒரு பொருள் வருகிறது. காமம் என்பது ஆசை. சிவகாமம் என்பது இறைவன் மீதுள்ள ஆசை.
ஊர் கவுண்டன் – ஊருக்கு தலைவர்
நாட்டு கவுண்டன் – குறிப்பிட்ட சில ஊர்களுக்கு தலைவர், அவ்வூரில் நடக்கும் பிரச்சனைகளை தீர்த்துவைப்பவர் என்று அர்த்தம்.
மந்திரி கவுண்டன் – ஊர், நாட்டு கணக்குகளை பார்ப்பவர்.
தொழில் ரீதியாகவும் கவுண்டர்கள் உள்ளனர். ஆளுமை உள்ளவர்கள் என்றும் சொல்லலாம்.
கவுண்டர், ஊர் கவுண்டர், நாட்டு கவுண்டர், மந்திரி கவுண்டர் என்பதெல்லாம் திறமை உள்ளவர்களுக்கு கொடுக்கக்கூடிய பட்டம். சந்ததியின் அடிப்படையில் கொடுத்ததால் அப்பட்டத்திற்க்கு மரியாதை இல்லாமல் போனது. எல்லோரும் கவுண்டராக முடியாது, அறிவு ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. குழந்தைக்கும் வயதில் மூத்தவர்களுக்கு அறிவு வளராமல் அல்லது அறிவு குன்றி விடும், அச்சமயத்தில் ஆளுமை செலுத்த முடியாது. கவுண்டன் என்பது ஆளுமை உள்ள போது தான் கொடுக்ககூடிய பட்டம். கவுண்டன் பிள்ளை கவுண்டராக முடியாது. ஐ.ஏ.ஸ் அதிகாரியின் பிள்ளைக்கு ஐ.ஏ.ஸ் பட்டம் வழங்க முடியுமா! சிந்தனை செய்யுங்கள்.
உடையார் என்பது சொத்துகளை பாதுகாப்பவர் என்று அர்த்தம். கருவூளத்தில் வேலை செய்பவர். உடை என்பது நமக்கு இறைவன் கொடுத்த உடல். அப்படிப்பட்ட உடலை பாதுகாப்பவர் என்று அர்த்தம்.
முதலியார் என்றால் முதலீடு செய்பவர், பெரிய முதலீடு செய்தால் பெரிய முதலியார், சின்னதாக முதலீடு செய்தால் சின்ன முதலியார் என்று அர்த்தம். சொத்துகளின் மீது முதலீடு செய்தால் இந்தஜென்மத்தில் மட்டும் தான் அனுபவிக்க முடியும். நம் மீது முதலீடு செய்தால் அதாவது புன்னியத்தை செய்தால் அடுத்த ஜென்மத்திற்க்கும் சேமிப்பு வரும். முதலியார் என்பது முதலும் முடிவும் உள்ள ஒரு பொருளை தெரிந்துகொண்டவர்.
செங்குந்தர் என்பவர் முருகனை வழிப்படக்கூடியவர்கள். போர் குணம், வைராக்கியம் நிறைந்தவர்கள். முருக வேலை மறக்காதிர்கள். ஒரு வேலையை ஆரம்பித்தால் முடிக்காமல் விடமாட்டார்கள். சத்ரிய வகுப்பை சார்ந்தவர்கள்.
சில சாதிகளை தெய்வீக அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது.
வன்னியர் என்போர் அக்னி குலத்திலிருந்து வந்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கோம். சந்திர நாடி, சூரியன் நாடி, அக்னி நாடி என்று மூன்று உள்ளது. சந்திரன், சூரியன் சாதரனமாக நடக்கும். அக்னி நாடி அவ்வாறு நடக்காது. அந்த அக்னி நாடியை எழுப்பக்கூடியவர்கள் தான் வன்னியர். அக்னியில் உள்ள போது அறிவு நன்கு வளரும்.
மனிதர்கள் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, போகம் மற்றும் சொத்துக்களை சேர்த்து வைப்பதிலே நின்று விடுவார்கள். சிலர் தான் இதிலெல்லாம் சந்தோசம் முழுமையில்லை என்று மேலும் தேடுவார்கள். அவ்வாறு தேடுபவர்களுக்கு இறைவன் அக்னி பூஜைக்கான வழியை கொடுத்துவிடுவான். அக்னி பூஜை என்பது குண்டத்தில் நெய், விறகு போட்டு எரிப்பதல்ல. உண்மையான அக்னி பூஜை இதுபோல இருக்கும் என்று குழந்தைகளுக்காக அல்லது அறிய விருப்பமுள்ளவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்ட ஒன்றாகும். அக்னி பூஜை செய்தால் நம் பாவங்கள் எரிக்கப்பட்டு புண்ணியத்தை சேர்க்கும் ஒன்றாகும்.
சிலர் எந்த தொழிலை செய்தாலும் பொறுமையாகவும், கவனமாகவும் செய்வார்கள், அவ்வாறு தொடர்ந்து செய்யக்கூடியவர்களுக்கு அக்னி நாடி எழுந்து விடும். அக்னி நாடி எழுந்தால் அறிவு வேகமாக வளரும். பொறுமையும் கவனமும் இல்லாதவர்களுக்கும் பதட்டபடுபவர்களுக்கு இந்த அக்னி நாடி எழும்பாது. தொழிலை விட்டால் அக்னி வளராது. அக்னியை வளர்ப்பதற்க்கு வழிமுறைகள் உள்ளது, அவ்வாறு தெரிந்து செயல்படுத்துவர்கள் தான் வன்னியர் என்று சொல்லப்படுகிறது. சாப்பிடுவது தூங்குவது போல நாள் தவறாமல் தொடர்ந்து இந்த அக்னி பூஜையை செய்ய வேண்டும். தவறவிட்டால் பலனை பெறமுடியாது.
தொடர்ந்து அக்னி பூஜை செய்பவரின் மனம் சுத்தமாகும். அப்படிப்பட்டவர்களை தான் அகமுடையார் என்று சொல்லப்படுகிறது. அகம் என்றால் உள்ளம், உள்ளமுடையார் என்று அர்த்தம்.
மனம் சுத்தமான பின் தான் இறைவனின் அருள் கிடைக்கும். இறைவனை உணர்ந்தவர்களை தான் சைவர், தேவர், கள்ளர், பள்ளர், ஐயர், பிராமனர், அந்தனர், ஆரியர் என்று குறிப்பிடுகிறோம். இறைவனின் அருளால் சொர்கத்திற்க்கு செல்ல முடியும், அவர்களே தேவர்கள். மதுரையில் சித்திரை மாதம் கள்ளழகர் விழா நடக்கும். மனம் சுத்தமான பின் ஆற்றில் கள்ளழகர் இறங்குவது போல நம்முள்ளும் இறங்கிவிடுவார். அவரிடம் பின்பு பேசலாம், பழகலாம். அவர்களை தான் கள்ளர் என்கிறோம். கண்ணன் பல பெண்களுடன் ஒரே நேரத்தில் உறவாடினார் என்றால் இது தான் அர்த்தம். இறைவனை புரிந்துகொண்டவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். இறைவனை உணர்ந்துவிட்டால் அவனின் மீது பக்தி வளரும், அப்படி பக்தி உள்ளவர்களிடம் இறைவன் என்றுமே உறவாடுவார்.
கோயிலில் இருக்கும் ஒரு ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களுடனோ அல்லது ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடனோ உறவாடுவது போல சிற்பங்கள் இருக்கும். அப்படி பல மடங்கு இன்பத்தை அனுபவிக்க கூடியவர்கள் தான் பள்ளர்கள். எப்பொழுதும் மயக்கத்திலே இருப்பார்கள். அதிகமாக வேலை செய்ய விருப்பமிருக்காது. பூலோகத்தில் சந்தோசம் போதுமானாதாக இல்லை என்றால் அக்னி பூஜை செய்து சொர்கதிற்க்கு சென்று மேலும் இன்பத்தை அனுபவிக்கலாம்.
சொர்கம், நரகம், தேவர் எல்லாம் பொய் என்று நினைத்திருந்தேன். உனர்ந்த பின் தான் புரிகிறது. இது புண்ணியம் செய்தவர்களுக்கே கிடைக்கும், எல்லோருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காது. இறைவனை பற்றி கேட்பதும், படிப்பதும் போன்ற ஆர்வமிருந்தால் தங்களுக்கும் நடக்கலாம்.
இறைவனை உணர்ந்த பின் மற்றவருக்கும் இறைவனை பற்றி சொல்லி கொடுப்பவரைத்தான் பிள்ளைமார் என்கிறோம். குரு என்றும் சொல்லலாம். மற்றவருக்கு எளிமையாக சொல்லி தர பல விசையங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சைவர்கள் என்றால் இறைச்சி சாப்பிடாதவர்கள் என்று நினைக்கிறோம், ஆனால் அவ்வாறில்லை, இறைவனை உணர்ந்தவர்களை தான் சைவர் என்று சொல்கிறோம், மேலும் கொங்குத்தேனை சுவைத்தவர்கள். தேனிக்களிடம் திருடி சாப்பிடும் தேனல்ல. இறைவனை உணராதவர் அசைவர் என்று சொல்லலாம்.
மள்ளர், மறவர் என்பது வீரர்கள் என்று அர்த்தம், அக்னியை பாதுகாக்ககூடியவர்கள். நாடார் என்பது பொருளை தேடுபவர், பொருள் என்றால் இறைவனை தேடுவது என்று கூட இருக்கிறது. இறைவனை தேடுபவர்களை நாடார் என்றும், இறைவனை தேடி முடித்தவர்களை சானார்( சான்றோர் ) என்று குறிப்பிடப்படுகிறது.
வடகலை என்பது இறைவனை தேடுவதும், தென்கலை என்பது இறைவனை தேடி உணர்ந்த பின் இறைவனை நினைத்து ஆடுவதும் பாடுவதுமாக ஒன்று. இறைவனை உணர்ந்தபின்பு தான் பக்தி வளரும். திவ்வியபிரபந்தம் இறைவனை உணர்ந்தபின்பு பாடியது.
நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் சந்தோசமாக இருக்கும் மனநிலை தான் பறையன். வீட்டில் பிணமிருந்தாலும் தீபாவளியை கொண்டாடக்கூடியவன் தான் பறையன். சாதரனமாக எல்லோராலும் முடியாது. இசையை கேட்டவன். முழுமையான ஞானத்தை உணர்ந்த மனிதன் மற்றவருக்கு உதவும் நோக்கத்தில் ஞானத்தின் வழியை சொல்வது பறையனின் உயர்ந்த நிலை. பறையன் பிள்ளை பறையனாக முடியாது.
சைவ வேளாளர், சைவ முதலியார் என்று சில பிரிவு இருக்கு. வேளாளர் என்பது விவசாய செய்பவர், அவர்கள் இறைவனை உணர்ந்துவிட்டால் சைவவேளாளர். முதலீடு செய்பவர்கள் இறைவனை உணர்ந்துவிட்டால் சைவ முதலியார்.
வர்னம் நான்கு வகை, அவை சூத்திரன், வைஷ்னவன், சத்ரியன் மற்றும் பிராமனன்.
மனிதர்கள் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, போகத்தை அனுபவிப்பதிலே நின்று விடுவார்கள். சிலர் தான் இறைவன் மீது ஆர்வம் ஏற்பட்டு தேடுவார்கள். அப்படி முதன் முதலில் இறைவனை தேடும் மனநிலை தான் சூத்திரன். தேடுதலின் பயனாக அக்னியின் வழி கிடைத்தால் வைஷ்னவன். அக்னியிலே நிற்பது சத்ரியன். செங்குந்தரை போல வைராக்கியமான மனநிலை வேண்டும், பின்வாங்ககூடாது. அக்னியில் நிற்பது தான் அவர்கள் விருப்பமாகவும் இருக்கும். அக்னியில் நின்றதன் பயனாக பிரம்மத்தினை உணரமுடியும், அவர்களை தான் பிராமனன் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு ஆழமான கிணற்றில் நாம் உள்ளோம். கயிறு ஒன்று உள்ளது. கீழிருக்கும் நிலையில் நாம் சூத்திரன். கொஞ்சம் மேலே வந்தால் நாம் வைஷ்னவன். பாதி வழியை தாண்டி விட்டால் நாம் சத்ரியன். மேலே கடவுளை கண்டு விட்டால் நாம் பிராமனன். பிராமனன் நிலையிலிருந்து நாம் கீழேயும் செல்ல முடியும். தேவையில்லாத சிந்தனை நம்மை ஆட்கொண்டால் நாம் தானாக கீழே இறங்கி விடுவோம். அப்படி மேலே சென்று கீழே வந்தவனுக்கு மேலே செல்ல வழி தெரியும்.
இப்ப தெரிகிறதா ஏன் கீழ் சாதி மக்கள் கடவுளை வணங்ககூடாது என்று. கடவுளை வணங்ககூடாது என்று இல்லை கடவுளை வணங்கமுடியாது. கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்று வழி தெரியாதவன் அல்லது அனுபவம் இல்லாதவன் என்று பொருள். சத்ரியன் நிலை வரை அனுபவமில்லாதவர் என்று பொருள்.
மேலும் இரண்டு சாதிப்பிரிவு இருக்கு, ஆண் சாதி(இட்டார்), பெண் சாதி(இட்டாதார்). ஆண் என்பது இறைவனை உணர்ந்தவர் என்று அர்த்தம். இறைவனை உணர்ந்தால் தான் ஆண்மையுள்ளவன். பெண்ணாக இருந்தாலும் இறைவனை உணர்ந்துவிட்டால் ஆண்மையுள்ளவள் என்று கருதப்படும். பிள்ளைபெற்றவர்களை எல்லாம் ஆண்மையுள்ளவன் என்று நினைப்பது சரியான முறையல்ல. சில கோவில்களில் ஆண்களுக்கு மட்டும் அனுமதி என்று சொல்ல காரணம் இது தான். இறைவனை உணர்ந்துகொண்டவர்களுக்கு மட்டும் புரியும் தத்துவங்கள் அக்கோயிலில் இருக்கலாம்.
இவ்வளவு தான் சாதி. சாதி என்பது ஒத்த வாழ்வை கொண்டவர்களை பிரிப்பது. ஒரே தொழிலோ, ஒத்த குணமோ, ஒரே மாதிரி வாழ்க்கை முறைகளை கையாள்பவர்களை பிரித்து பெயர் வைத்து அடையாளப்படுத்துவது. அப்பனை போல பிள்ளைக்கு உடல் அங்கங்கள் ஒரே மாதிரி இருந்தாலும் மனம் வேறாக இருக்கும். ஒரே வீட்டில் இருந்தாலும் எல்லோரும் ஒரே மனநிலையில் இருக்கமாட்டார்கள். அப்புறம் எப்படி சூத்திரன் பிள்ளை சூத்திரன் என்றோ, தேவரின் பிள்ளை தேவர் என்றோ அழைக்கப்படுகிறது. தவறான அனுகுமுறை. மாற்றம் தேவைப்படுகிறது. விவசாயம் செய்து கொண்டுள்ள வேளாளரின் மகன் பொறியியல் படித்து பட்டம் வாங்கிய பின் பொறியியல் துறையில் வேலை செய்கிறார் என்றாலும் வேளாளர் என்ற பட்டம் கொடுக்கலாமா! சிந்தனை செய்யுங்கள்.
திறமை இல்லாதவர்களுக்கு பட்டம் வழங்கி பதவி கொடுத்தால் எங்கு என்ன நடக்கிறது என்று பதவியில் அமர்ந்திருக்கும் அதிகாரிக்கு தெரியவாய்ப்பில்லை. அப்பொழுது திருடர்கள் நாட்டின் வளங்களை மிக சுலபமாக கொள்ளை அடிக்கமுடியும். திறமை உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு பட்டம் வழங்குவது தான் சரியான முறை. சந்ததியின் அடிப்படையில் சாதி பட்டம் வழங்குவது தவறான முறை. திறமை உள்ளவர்களுக்கு பட்டம் வழங்கி ஊக்குவிக்கும் பொழுது நல்ல தலைவர்கள் நாட்டில் உருவாகுவார்கள். முதல்வர், பிரதமர், ஜனதாதிபதி போன்ற நாட்டின் தலைமை பதவி அல்லது பெரிய பதவி வகிக்கும் தலைவர்கள், அதிகாரிகள் நிச்சயமாக ஒரு பிராமனராக( இறைவனை புரிந்து கொண்டவர் ) இருப்பது தான் நல்லது, அப்பொழுது தான் தன் வீடு, சொந்தங்கள் என்று இல்லாமல் பரந்த மனதுடன் செயல்படுவார்கள். பிராமனராக இல்லை என்றால் குறுகிய வட்டத்தோடு அரசியல் செய்வார்கள்.
ஒரே குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும் ஒவ்வொருவரும் வெவ்வேறு சாதியாக இருக்கலாம். இறைவனை உணர்ந்துகொண்ட பிராமனணின் பிள்ளைக்கு பிராமனன் என்ற பட்டம் வழங்க முடியுமா! மிகப்பெரிய தவறு நடக்கிறது. பெற்றோரின் தொழிலை பிள்ளைகள் கற்றுகொள்ள முடியும். விவசாயம் செய்கிற பிள்ளை விவசாயம் கற்றுக்கொள்ள முடியும். குயவரின் பிள்ளை மண்பாண்டம் செய்ய கற்று கொள்ள முடியும். மீனவரின் பிள்ளை மீன் பிடித்து விற்பதன் தொழிலை கற்றுக்கொள்ள முடியும். ஆனால் தெய்வீக பண்பின் அடிப்படையில் பிரித்த சாதிகளுக்கு அவ்வாறு நடக்காது. அக்னி பூஜையை கற்றுக்கொண்ட ஒருவர் தொடர்ந்து நாள் தவறாமல் அக்னிபூஜையை செய்ய பல தடங்கள் இருக்கும், விருப்பமில்லாமல் போகலாம். அதுவுமில்லாமல் பல வருட காலம் எடுக்கும் பிராமனனாக மாறுவதற்க்கு. எந்த தொழிலை செய்தாலும் தொடர்ந்து இறைவனின் நினைத்து அக்னி பூஜையை செய்பவர் பிராமனராக முடியும் என்பது தான் உண்மை.
ஒரு சில சாதி உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்று எப்படி முடிவு எடுத்தார்கள் என்று புரியவில்லை. தன்னுடைய சாதியை உயர்த்தி காட்ட பணத்தை மட்டும் வைத்து உயர்த்திவிடலாம் என்று பெரும்பாலோனோர் நினைத்து செயல்படுத்துகின்றனர். அவ்வாறு செயல்பட்டு வந்த வினை தான் இயற்கை பேரழிவு. இயற்கை கொடுத்த கொடையை அடியோடு அழித்து பணத்தை நிரப்பிவிடலாம். பின்பு நாம் தான் உயர்ந்தவர் என்று சொல்லிக்கொள்ளலாம் என்று நினைப்புள்ளதா! கோயிலிற்க்கு( கட்டடம் ) சென்று சில பூஜை முறைகளை செய்வதால் நாம் மற்றவர்களை விட பெரிய மனிதர் என்று நினைப்புள்ளதா! தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை கோயிலிற்க்கு( கட்டடம் ) வழங்குவதால் நாம பெரிய மனிதர், புண்ணியம் செய்கிறோம் என்று நினைப்புள்ளதா! அப்படியெல்லாம் நினைத்து வாழ்ந்துகொண்டிருந்தால் சரியான புரிதல் தங்களுக்கு நடைப்பெறவில்லை என்பது தான் உண்மை. கோயில்( கட்டடம் ) கட்டி பூஜை முறைகளை செய்வதெல்லாம் நம் புரிந்துகொள்வதற்க்காக. உண்மையான கோயில் நமக்குள்ளே. விளக்கு, லிங்கம் எல்லாம் நம்முள்ளே இருக்கு.
பிரம்மத்தை உணராமல் இருந்தால் பல மயக்கங்களுக்குள் சிக்கி தவிப்பது என்பது இயல்பானது.
சாதி என்பது ஒரே தொழிலோ அல்லது ஒரே குணம் உள்ளவர்களை பிரிப்பது, அவ்வளவே. தொழில் மாறினால் தொழில் ரீதியான சாதி மாறிடும். அக்னி பூஜை செய்பவராகிய வன்னியர் இறைவனை உணர்ந்து விட்டால் தேவராக, சைவராக முடியும். சாதியை பற்றி தெரியாமல் ஒரு கூட்டத்தை உருவாக்கி அவர்களிடம் பெரியவன் சிறியவன் என்று பாகுப்பாட்டை உருவாக்கி மோதல் ஏற்படுத்தி பிரித்து ஆள்வது என்பது ஆள்வோரின் செயல்.
இறைவனை பற்றி இரகசியங்களை மறந்து போகாமல் இருக்க பல விதமான முறைகளை பெரியோர்கள் கையாண்டுள்ளனர். அதில் ஒன்று சாதி.
சாதி மதத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமென்றால் தங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனியுங்கள். ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகள் மனதில் ஓட ஆரம்பித்தால் சாதியை பற்றி புரிதல்கள் வரலாம். குறைந்த பட்சம் அடிப்படை தேவைகள் என்னவென்றாவது கேள்வி மனதில் எழ வேண்டும். தங்களின் அடிப்படை சந்தோசங்களை கெடுக்கக்கூடிய ஒன்றுக்கு எப்பொழுதும் இடம் தராதிர்கள். அடிப்படை தேவையான உணவு, உறவு கொண்டாடுவது, சந்தோசமாக விளையாடுவது பூர்த்தியான பின்பு தங்களுக்கே சரியான தேடுதல் ஆரம்பமாகும். தேடுதலின் பயனாக இறைவன் அருள் கிடைக்கும். பின்பு சாதி, மதங்களிலிருந்து விடுபடலாம். அடிப்படை தேவைகளுக்கு மேல் உள்ள செல்வந்தர்களுக்கு விடுதலை கிடைத்திருக்கனுமில்லையா! நடக்கவில்லையே! யாரோ ஒரு சிலருக்கு தான் புரிதல்கள் நடக்கிறது. எல்லாம் இறைவன் செயல். தேடும் நல்ல உள்ளங்களுக்கு கண்டிப்பாக சாதியை பற்றி புரிதல் ஏற்பட்டு விடுதலை கிடைக்கும்.
சாதியினால் ஒருவருக்கொருவர் ஒற்றுமையில்லாமல் இயற்கையை அழித்து வாழ்கிறோம். சாதியை பற்றி புரிதலில்லாமல் சாதியை வைத்துக்கொள்வது குற்றவுணர்வை ஏற்படுத்தும். அதனால் எமக்கு தெரிந்த சாதியினை விவரித்து ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்ற காரணத்திற்க்காக இப்பதிவு செய்துள்ளேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் பதிவு செய்யவில்லை.
தாங்களும் கருத்துகளை படித்து சிந்தனை செய்யுங்கள். கருத்துகள் பிடித்திருந்தால் மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சந்தோசமாக வாழுங்கள். மாற்றம் தேவைப்படுகிறது. யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு
Awesome article.
சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி சொல்லல் பாவம்………..எல்லாரும் எல்லா தொழில் செய்யும் போது எதற்கடா உங்கள் சாதி.
கமாண்டர் என்ற வார்த்தை தமிழில் எங்கு உள்ளது , கவுண்டர் என்ற சொல்லின் வேர்ச்சொல் கண்டர் (போர் களம் கண்டவன்)
Nice good article and you wright up bro congrats….
Great … new perspective… this understanding is mostly required today.. thank you