தண்ணீர் நம் பூமியில் 71 சதவிகிதம் இருக்கு. அது போல தான் நம் உடலிலும் 71 சதவிகிதம் தண்ணீர். இதில் சந்தேகம் அதிகமாக உள்ளது என்ன செய்வது அப்படிதானே படிக்கிறோம்.நமது உடல் எப்போதுமே 71 சதவிகிதம் இருக்குமா! அப்படியில்லை தண்ணீர் உடலிலே குறையவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வயதாக வயதாக நம் உடலில் தண்ணீரின் அளவு குறையும். எவர் ஒருவர் தண்ணீரை உடலில் தேவையான அளவு வைத்துக்கொள்கிறாரோ அவர் நீண்ட நாள் உயிருடன் வாழ்வார். காலத்துக்கு காலம் தண்ணீரின் தேவை மாறும். வெயில் காலத்தில் நம் உடலின் உஷ்ணம் அதிகமாக உள்ளதால் ஆவி(வியர்வை) மூலம் தண்ணீர் அதிகமாக வெளியேறும். அக்காலத்தில் நமக்கு அதிகமாக தாகம் எடுப்பதால் தண்ணீர் அதிகமாக தேவைபடும். குளிர் மற்றும் மழை காலத்தில் நாம் தண்ணீர் அருந்தவில்லை என்றாலும் நம் உடல் தண்ணீரை தோல் மூலம் உறுஞ்சும். அக்காலத்தில் தண்ணீரின் தேவை மிகவும் குறைவாக இருக்கும், தாகமும் எடுக்காது ஆனால் சிறுநீர் வரும். குளிப்பதன் மூலமாகவோ அல்லது குளிர்ந்த காற்று நமது உடலில் பட்டாலோ நமது உடல் தண்ணீரை உறிஞ்சும். வாய் வழியாக மட்டும் தான் உடலுக்கான உணவு செல்கிறது என்று நினைக்க வேண்டாம். பஞ்ச பூதங்களிலிருந்து நமது உடல் உணவை எடுக்கிறது.
குளம், குட்டை, ஏறி, ஊற்று , கிணறு, ஆறு, மழை, கடல் போன்ற பல இடங்களிலிருந்து நீரை பயன்படுத்துகிறோம். மூலிகை செடி கொடி மரங்களில் பட்டு வரும் தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது. பல நாட்கள் சூரியன் படாமல் தேங்கின நீர் விசமாக இருப்பதற்க்கு வாய்ப்பு உண்டு. நீரின் சுவை இடத்திற்க்கு இடம் அதாவது மண்ணீன் வகைக்கு தகுந்தவாறு மாறுகிறது. சில இடங்களில் உப்பின் சுவையும், சில இடங்களில் இனிப்பு கலந்த சுவையும் இருக்கும். தண்ணீர் நாக்கில் பட்டவுடன் அது உடலுக்கு தேவையா இல்லையா என்பதை நாக்கு சொல்லி விடும். அதற்கு தகுந்தார் போல் நாம் தண்ணீரை பயன்படுத்தலாம். தண்ணீர் தட்டுப்பாடு வந்தவுடன் தற்பொழுது ஆழ்துனைகிணறு அமைத்து தண்ணீரை பயன்படுத்துகிறார்கள். ஆழ்துனைகிணறாக இருந்தாலும் 30 அடிக்கு குறைவாக உள்ள இடத்திலிருந்து தண்ணீரை பயன்படுத்தினால் உடலுக்கு மிகவும் நல்லது. அதற்கு மேல் அந்த தண்ணீரில் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பல ரசாயனம் கலந்திருக்கும். அதை பயன்படுத்தினால் உடலால் சீரனம் செய்ய முடியாமல் தீங்கு விழையும்.தண்ணீர் பல இடங்களில் இருந்தாலும் குடிக்க பயன்படுத்த முடியாமல் மாசடைந்துள்ளது.
இன்று அறிவியல் ஆராயிச்சியின் மூலம் தண்ணீரை பல வழிகளில் சுத்தம் செய்கிறார்கள். பெரு நகரங்களில் ஓடும் சாக்கடை தண்ணீரை கூட இப்ப உள்ள அறிவியல் கருவி மூலம் சாக்கடையிலிருந்து தண்ணீர் மட்டும் பிரித்து அதை மீண்டும் சுத்தம் செய்து தண்ணீரை சாப்பிடும் அளவுக்கு அறிவியல் பயன்படுகிறது. பாரம்பரியமாக தண்ணீரை செம்பு பாத்திரத்திலோ அல்லது வெண்கல பாத்திரத்திலோ ஊற்றி வைத்து சில மணி நேரம் கழித்து பயன்படுத்துவார்கள். தண்ணீரை மண்பானையில் ஊற்றி வைத்தால் இரண்டு மணி நேரத்தில் உப்பை எடுத்து சுத்தப்படுத்தும். தண்ணீரின் உப்பை பொறுத்து மண்பானையை 3 மாதம் அல்லது 6 மாதம் கழித்து மண்பானையை மாற்ற வேண்டும். வாழைப்பழத்தை சாப்பிட்ட பின் தோலை தூக்கியெறியாமல் தண்ணீரில் இரண்டு மணி நேரம் வைத்தால் தண்ணீர் சுத்தமாகும். தோல் இரண்டு மணி நேரத்துக்குள் எடுத்துவிட வேண்டும். ஆப்பிள் தோலிலும் தண்ணீரை சுத்த செய்யலாம் என்று படித்துள்ளேன். தண்ணீரில் உடலுக்கு தேவையான ரசயானமும் தேவையில்லாத ரசாயனமும் உள்ளது. தற்பொழுது உள்ள அறிவியல் கருவியின் மூலம் தண்ணீரை சுத்தம் செய்கிறது என்று எல்லா சத்தும் எடுத்துவிடுகிறார்கள். அப்படி சத்தை எடுத்த நீர் தான் பாட்டில் வாட்டர், ஃபில்டர் கேன் என்று விற்பனைக்கு வருகிறது. அந்த சக்தில்லாத தண்ணீரை சாப்பிடுவதால் உடலுக்கு பாதிப்பு தான் வரும். தற்பொழுது பெரும்பாலான வீட்டிலும் சாக்கடை குழி உள்ளது. அதற்கு அருகில் அழ்துணை கிணறும் அமைக்கிறார்கள். பின்பு அந்த சாக்கடை குழியிலிருந்து தண்ணீர் வடிந்து ஆழ்துணைகிணற்றில் கலக்கும். அப்படி கலக்கின தண்ணீரை குடிப்பதற்க்கு பதில் தண்ணீரை சுத்தம் செய்தோ, பாட்டில் வாட்டர், ஃபில்டர் வாட்டரோ சாப்பிடலாம்.
என்ன தான் தண்ணீர் இருந்தாலும் அதை பயன்படுத்த தெரியவில்லை என்றால் நம் வாழ்க்கையை வீணடித்துகொண்டிருக்கிறோம் என்ற அர்த்தம் உள்ளது. தண்ணீரை சுத்தம் செய்து சாப்பிட தெரியவில்லை என்றால் அதன் சக்தியை நம்மால் உணரமுடியாது. தண்ணீரை குடிக்கலாமா அல்லது சாப்பிடலாமா என்ற கேள்விகூட மனதில் எழ மறுக்கிறது. பாரம்பரியமாக வீட்டிற்க்கு வருவோரை தண்ணீரை கொடுத்து சாப்பிடுங்கள் என்று தான் சொல்வோம், குடியுங்கள் என்று சொல்ல மாட்டோம். தண்ணீரை சக்தியாக மாற்றும் பழக்கம் நம் பாரம்பரியத்தில் இருந்துள்ளது. தண்ணீரை தேநீர் போன்று வாயில் வைத்து பத்திலிருந்து பதினைந்து நொடி வரை வாயில் வைத்து சுவைத்து சாப்பிட்டால் தான் அதன் சக்தியை உடலால் உணரமுடியும். அப்படி செய்யாமல் அன்னாந்து கடகட என்று குடித்தால் தண்ணீரில் உள்ள சக்தியை உடல் ஏற்றுகொள்ளாது. எல்லா திரவப்பொருளும் இப்படி சாப்பிட்டால் தான் சக்தியாக மாறும்.
தண்ணீரை சுவைக்கும் பொழுது மனம் தண்ணீரீன் மேல் இருக்க வேண்டும். தண்ணீரை தாகம் எடுக்கும் பொழுது தான் சாப்பிட வேண்டும். காலையில் எழுந்தவுடன் மலம்ஜலம் கழிக்கும் முன் 1 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் பல் விளக்குவதற்க்கு முன் வாய் கொப்பளித்து விட்டு தண்ணீரை குடிக்க வேண்டும். காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லாமல் புதிதாக ஆரம்பம் செய்வோர் தண்ணீரை எடுத்தவுடன் 1 லிட்டர் தண்ணீர் குடிக்ககூடாது. கால் லிட்டர், அரை லிட்டர் என்று நாளுக்கு நாள் தான் அதிக படுத்த வேண்டும். அதுவும் தண்ணீரை குறைத்தாலும் இப்படி தான் குறைக்க வேண்டும். குழிக்கும் முன் எந்தவகையான தண்ணீராக இருந்தாலும் வாயிலே வைத்து மூடி விடவேண்டும். பின்பு குளிர்ந்த நீராக இருந்தால் காலில் ஆரம்பித்து தலைக்கு செல்ல வேண்டும். சூடான தண்ணீராக இருந்தால் தலையில் இருந்து காலுக்கு செல்ல வேண்டும். எப்ப குளித்தாலும் தலைக்கும் சேர்த்தே குளிக்க வேண்டும்.
சாப்பிடும் பொழுது நிச்சயமாக தண்ணீர் குடிக்ககூடாது. சாப்பிடுவதற்க்கு அரை மணி நேரம் முன்பே குடிக்க வேண்டும். சாப்பிட்டவுடனும் தண்ணீர் குடிக்க கூடாது. வயிற்றில் ஒரு வகையான அமிலம் சீரணம் செய்வதற்க்காக சுரக்கிறது. அந்த அமிலம் சாப்பிடும் முன்னும், சாப்பிடும் பொழுதும், சாப்பிட்டவுடனும் தண்ணீர் குடித்தால் நெருப்பு( அமிலம் ) கெட்டு விடும். அப்புறம் சீரணம் நடக்காமல் உடல் கெட்டு விடும். அப்படியே தண்ணீர் குடிப்பதாக இருந்தால் தொண்டை பகுதி ஈரம் ஆகும் அளவுக்கு தான் குடிக்க வேண்டும். அதையும் மீறி தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் சூடான தண்ணீர் தான் சாப்பிடும் பொழுது குடிக்க வேண்டும். அதே போல் மருந்து சாப்பிடும் பொழுதும் வெந்நீருடன் தான் குடிக்க வேண்டும்.
தண்ணீரை மதிக்க தெரியவில்லை என்றால் உடல் நலம் கெடும் பின்பு உங்களை நம்பியுள்ள குடும்பமும் கெடும். அதனால் தண்ணீரீன் அவசியத்தை தெரிந்து அதனை சேமிக்க கற்று கொள்ள வேண்டும். நீருள்ள பகுதியில் தான் பல்யுயிர் பெருகும். நீரில்லாத பகுதி பாலைவனம் போல் தான் காட்சியளிக்கும். திடபொருளான உணவில்லாமல் கூட சில நாட்கள் இருக்கலாம் ஆனால் தண்ணீரில்லாமல் இருக்க முடியாது. குடியிருக்கும் பகுதியில் தண்ணீர் வறண்டு விட்டால் அங்கிருந்து தண்ணீர் இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டுமே தவிர வேறு வழியில்லை. இதன் அவசியத்தை அறிந்து தான் அன்று குளம், குட்டை,ஏரி, கிணறு போன்று வெட்டினார்கள். ஆனால் இன்று அதையெல்லாம் மூடிகொண்டிருக்கிறோம். மீண்டும் தண்ணீரை பாதுகாக்க வேண்டுமென்றால் குளத்தையும் ஏரியையும் புதுபிக்க வேண்டும். இன்று பயன்படுத்தும் அநாவசியமான பொருளினால் ஏற்படும் விஷகழிவுகள் தண்ணீரை மிகவும் பாதிப்புகுள்ளாகிறது. ப்ளாஸ்டிக், அணியும் ஆடைகள் போன்று பொருளை பயன்படுத்துவதை குறைத்தால் தண்ணீர் விஷமாவதை தடுக்கலாம். தண்ணீர் குறைவான பகுதியில் அதிகமாக தண்ணீர் தேவைபடும் விவசாய காய் கனிகள் பயிராகிய தக்காளி, கரும்பு, நெல் போன்றவைகளை பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படியே பயன்படுத்தினாலும் விற்பதற்க்கு 50 முதல் 100 மைலுக்குள்ள தான் எடுத்து செல்ல வேண்டும். வெளிநாட்டிற்க்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ எடுத்து செல்ல கூடாது. பணம் என்ற போர்வையில் எல்லாம் வியாபாரமாக்கபட்டதால் எவ்வளவு இயற்கை அழிவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. தண்ணீரீன் அருமை அறிந்து அதை மதித்து பாதுகாக்கவேண்டும். யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு