மது குடிப்பவர்களிடம் கேட்ட போது எனக்கு சந்தோசம் குறைவாக உள்ளது அதனால் குடிக்கிறேன். காலை முதல் மாலை வரை வேலை செய்ததால் உடல் வலி ஏற்படுகிறது, தூக்கம் வரவில்லை அதனால் குடிக்கிறேன். மனம் பாரமாக இருக்கிறது அதனால் குடிக்கிறேன். குடியினால் ஏற்படும் போதை எனக்கு பிடித்திருக்கிறது. ஒவ்வொருவரும் பதிலை சொல்கிறார்கள்.
நமக்கு தேவையான சந்தோசம் கிடைக்கவில்லை என்றால் மயக்கம் தரும் போதை தான் தீர்வு என்று முடிவெடுக்கிறோம். உண்மை என்ன வென்றால் மனம் நிம்மதியை நாடுகிறது. அதற்க்கு நிம்மதி கிடைக்கவில்லை என்றால் ஏதோ ஒரு வழியில் சந்தோசத்தை தேடும். மதுவை குடிக்கும்பொழுது மெதுவாக பொறுமையாக அளவாக குடித்து இரசிக்கவும். ஒரு சிப் குடித்த பிறகு மதுவினால் ஏற்படும் உணர்வுகளை இரசியுங்கள். வேகமாக குடிக்கக்கூடாது. விரைவில் மதுவை விட்டுவிடுவீர்கள்.
வாழ்வில் சந்தோசத்தின் நீளத்தை தேடுங்கள். அது உங்கள் போதையை நிறுத்திவிடும். இறைவனிடமும் போதை இருக்கிறது. மனம் சுத்தமாக மாறும்பொழுது இறைவன் இறங்கி வருவான், தங்களை அணைப்பான். அவன் கொடுக்கும் போதை இந்த உலகில் எந்த பிராண்ட்( Brand ) மதுவுக்கும், வளமான அழகான ஆண் பெண் உறவில் ஏற்படும் இன்பத்திற்க்கும் ஈடாகாது. அதை தான் வாலைப்பெண் என்கிறோம். இந்திரலொகத்திலிருந்து இறங்கி வந்து விசுவாமித்திரரை மயக்கம் கொடுத்த மேனகை அவள். இயேசு கடைசி நாட்களில் தன் சீடர்களுடன் குடித்த மது இதுதான். இந்த இறைவனிடம் போதை கிடைக்கிற வரைக்கும் மனம் தளராது. அது தேடிக்கொண்டே இருக்கும்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு