நமது உடலையும் மனதையும் பக்குவபடுத்தினால் மட்டுமே நாம் நிம்மதியாக வாழமுடியும். அதற்க்காக சில வழிமுறைகளை முயற்ச்சி செய்தால் நலமுடன் வாழலாம். பேதி, எனிமா, வாழை இலை குளியல், மண் குளியல், விரதம் போன்ற முறைகள் இயற்கை மருத்துவத்தில் உள்ளது. அதை தெரிந்து செயல்படுத்தினால் நமது உடலில் இருக்கும் அழுக்குகள் வெளியேற்றப்படும். அழுக்குகள் வெளியேறினால் மட்டுமே எதிர்ப்பு சக்தி அதிகமாகி வியாதியில் இருந்து நம்மை காப்பாற்ற முடியும்.
பேதி:
குடலை விளக்கெண்ணெய் அல்லது மாத்திரை மூலம் சுத்தம் செய்யும் முறை. பேதி எடுப்பதற்க்கு மூன்று நாள் தேவைப்படும். அதுவும் இரண்டாவது நாளில் முழுஓய்வு தேவை. எந்த வேலையும் செய்யக்கூடாது. முதல் நாள் அதாவது பேதி எடுக்கும் முன்நாளில் பழங்கள், காய்கள் அதிகமாக சாப்பிட வேண்டும். மற்ற உணவுகளை குறைக்கவும். எளிதில் சீரனம் நடக்கக்கூடிய உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அன்று இரவு உணவை தவிர்ப்பது நல்லது. இரண்டாவது நாளில் காலையில் எழுந்தவுடன் மலம் கழித்தால் நன்று. கழிக்காவிட்டாலும் பரவாயில்லை. இரண்டு தேக்கரண்டி( 10 மில்லி.லி ) முதல் ஆறு தேக்கரண்டி( 30 மி.லி ) விளக்கெண்ணெயை இளம் சூடான நீரில் கலந்து குடிக்க வேண்டும். அதிகாலையில் குடித்தால் மிகவும் நல்லது. குடலில் இருக்கும் மலக்கழிவுகள் வெளியேறிக்கொண்டே இருக்கும். குறைந்தது ஆறு முறையாவது நடக்கும். கவலை படாதிர்கள். வெளியேறவில்லை என்றால் வெந்நீரை அருந்தலாம். குறிப்பிட்ட முறை வெளியேறினால் உடலில் சோர்வு தென்படும். அந்நேரத்தில் சர்க்கரை உப்பு கலந்த நீரை அருந்தலாம். கைப்பிடி அளவு பனவெல்லம், சிறிது உப்பு இரண்டும் தேவையான தண்ணீரில் கலந்து தேவைப்படும் பொழுது குடித்தால் சோர்வு தெரியாது. வயிற்றில் இருக்கும் அழுக்கு வெளியேறிய பின்பு தானாகவே பேதி நின்று விடும். மதியம் நான்கு மணிக்கு மேல் பழச்சாறுகளை அருந்தலாம். அன்று ஏதும் சாப்பிடக்கூடாது. மூன்றாவது நாளில் திரும்பவும் பழச்சாறு, பழங்கள் அதிகமாக சாப்பிடலாம். மதியம் குறைந்த உணவை மட்டும் சாப்பிட வேண்டும். உணவின் அளவை மெதுவாக எப்பொழுதும் சாப்பிடும் அளவிற்க்கு கொண்டுவரவும். பேதி எடுத்துமுடித்தவுடன் வயிற்றிற்க்கு அதிக பழு தரக்கூடாது. படிப்படியாகத்தான் உணவின் அளவை அதிகரிக்க வேண்டும். ஆறு அல்லது நான்கு மாதத்திற்க்கு ஒரு முறை பேதி எடுத்தல் அவசியம்.
விரதம்:
மாதம் இரண்டு நாள் விரதம். விரதம் இருக்கும் நாட்களில் எந்த வேலையும் செய்யக்கூடாது. விரதம் எடுக்கும் முந்நாளில் எப்பொழுதும் சாப்பிடும் திடமான உணவுகளை குறைத்து பழங்கள், பழச்சாறுகள் அதிகமாக சாப்பிடவேண்டும். அன்று இரவு மனதில் திடமான வைராக்கியத்தோடு நாளை ஏதும் சாப்பிடக்கூடாது என்று தீர்மானம் செய்யவும். காலையில் எழுந்து பல்லை லேசாக விரலினால் தேய்த்து விடவும். மற்ற நாட்கள் போல பல் விலக்கக்கூடாது. அக்கம் பக்கதிலிருந்து உணவின் வாசனை வந்தால் கூட உணவினை சாப்பிடக்கூடாது. உணவின் மீது மனம் நாடக்கூடாது. அப்படி மனம் சென்றால் விரதம் இருக்கமுடியாது. இந்நேரத்தில் அங்கும் இங்கும் செல்லக்கூடாது. முழு ஓய்வு அவசியம். அன்று மாலை பொழுது வரை ஏதும் சாப்பிடாமல் இருப்பது அவசியம். பின்பு பழங்களை ஆகாரமாக கொள்ள வேண்டும். பழம் ஆகாரம் பின்பு பலகாரமாக மாறிவிட்டது. பழச்சாறுகளை சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். உங்களால் முடிந்தால் தண்ணீர் மட்டும் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். தண்ணீர் கூட சாப்பிடாமல் இரண்டு நாட்கள் விரதமிருந்தால் கேன்சர் வளர்ச்சியை தடுக்கும். விரதம் முடித்த பிறகு பழச்சாறுகள், பின்பு பழங்கள், பின்பு கஞ்சி, பின்பு தான் திடமான உணவுகளுக்கு மாறவேண்டும். உணவுகளை படிப்படியாக அதிகரிக்க வேண்டும். இப்படி விரதமிருந்தால் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து விடும். இரத்தம் போகிற பாதையில் அடைப்பிருந்தால் கூட கரைந்து விடும். இரத்தம் போகிற பாதையில் அடைப்பு இருந்தால் நம் இருதயம் அதிக அழுத்தம் கொடுத்து இரத்தினை வேறு பகுதிக்கு செலுத்தும். அதனால் தான் உயர் இரத்த அழுத்தம் என்று பெயர். விரதமிருந்தால் இரத்த அடைப்புகள் குறைந்துவிடும். தங்களால் ஏதும் சாப்பிடாமல் விரதமிருக்க முடியவில்லை என்றால் திட உணவுகள் சாப்பிடாமல் பழச்சாறுகள் மட்டும் அருந்துகள். மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
வாழை இலை குளியல்:
உடலில் வேர்வை சுரபிகளில் அடைப்பிருந்தால் இந்த வாழை இலை குளியல் செய்தால் அடைப்பு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். வாழை இலை குளியல் வெயில் இருக்கும் பொழுது செய்யக்கூடியது. காலை நேரத்தில் ஏதும் சாப்பிடாமல் அரை லிட்டருக்கு மேலாக தண்ணீர் அருந்தவும். நன்கு வெயில் இருக்கும் இடத்தை தேர்வு செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று பெரிய வாழை இலையை கீழே விரித்து பின் அதன் மீது படுக்க வேண்டும். பின்பு உடலின் மீதும் வாழை இலையை வைத்து தலை முதல் கால் வரையும் முழுவதும் கையிறு கொண்டு கட்ட வேண்டும். மூக்கிற்க்கு மட்டும் சிறிது துழையிடல் வேண்டும். ஒரு 20 நிமிடம் அப்படியே படுக்க வேண்டும். இந்நேரத்தில் வேர்வை அதிகமாக சுரக்கும். வேர்வை சுரபியுள்ள அடைப்புகள் எல்லாம் நீங்கும். 20 நிமிடம் முடிந்த பிறகு வாழை இலையை கால் நடைகளுக்கு கொடுக்காமல் குழி தோண்டி புதைத்து விடவேண்டும். பின்பு குளிக்கலாம். இதனால் உடல் மிகவும் புத்துணர்ச்சி அடையும். தோல் நோய்கள் சரியாகும்.
மண் குளியல்:
புற்று மண் இருந்தால் மிகவும் நல்லது. இல்லையென்றால் களிமண் அல்லது செம்மண்ணை ஈரபதமில்லாமல் வெயிலில் காயவைத்து புற்று மண் போல சளித்துக்கொள்ள வேண்டும். தோசை மாவு பதத்தில் தண்ணீர் சேர்கவும். அதில் குப்பைமேனிக்கீரையை அரைத்து கலக்கவும். திரிபலா சூரனத்தையும் கலக்கலாம். பின்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மண்ணை பூசி அரை மணி நேரத்திற்க்கு பிறகு குளிக்கவும். இதனால் தோலில் இருக்கும் அடைப்புகள் நீங்கும். தோல் நோய் இருந்தால் சரியாகும். உடலிற்க்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
எனிமா:
உணவு சீரணமாகாமல் அல்லது உடலின் சூட்டின் காரணமாக பெருங்குடலில் மலம் வெளியேறமால் தங்கி பெருஞ்சுமையை கொடுக்கும். இந்த மலச்சிக்கலால் தலைவலி, உடலில் சூடு, உடலில் சோர்வு வரும். அந்த நேரத்தில் எனிமா பயண்படுத்தலாம். எனிமா பாத்திரம் வாங்கி கொள்ளவும். குழாயின் மீதும் மற்றும் மலத்துவாரத்தின் மீதும் சிறிது விளக்கெண்ணெய் தடவவும். எனிமா பாத்திரத்தில் இளஞ்சூடான நீரை நிரப்பி, வானம் பார்த்து படுத்து இரண்டு காலை தொடையை நோக்கி மடக்கி கொள்ளவும். பின்பு மலம் போகிற பாதையில் சிறிய குழாய் விடவும். நீர் தீர்ந்த பிறகு குழாய்யை வெளியில் எடுத்து பின் ஆசான வாயை சுருக்கிக்கொள்ளவும். வானம் பார்த்து ஒரு ஐந்து நிமிடம் படுக்கவும். பின்பு இடது பக்கம் ஐந்து நிமிடம், வலது பக்கம் ஐந்து நிமிடம் படுத்து பின் கழிவுகளை வெளியேற்றி விடவும். ஓய்வு நாட்களில் மூன்று வேளை செய்தால் குடலில் தங்கிருக்கும் அழுக்குகள் வெளியேறிவிடும். எனிமா எடுத்த பிறகு இளஞ்சூடான நீரில் குளிக்கவும். குளிர்ந்த நீரில் குளிக்க முடிந்தால் ஒன்றுமில்லை. சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. குளித்து அரை மணி நேரம் கழித்த பிறகு பழச்சாறுகள் அருந்த வேண்டும். பின்பு பழம் பின்பு தான் தினமும் சாப்பிடும் உணவுகள் எடுக்க வேண்டும். இந்த எனிமா முறையை தேவையான பொழுது பயண்படுத்தினால் மிகவும் நல்லது. தொடர்ந்து பயண்படுத்துவது தவறு. அப்படி தொடர்ந்து பயண்படுத்தினால் உடலில் பாதிப்பு வரும்.
எண்ணெய் குளியல்:
வெயில் இருக்கும் நேரத்தில் காலைக்கடனை முடித்த பிறகு எள் எண்ணெய்யை உடல் முழுவதும் பூச வேண்டும். காதிற்க்கும் கண்களுக்கும் சிறிது எண்ணெய் விடவும். வாயில் எண்ணெய்யை குளிக்கும் முன்பு வரை கொப்பளித்துக்கொண்டே இருக்கவும். குளிப்பதற்க்கு முன்பு வாயிலிருக்கும் எண்ணெய்யை துப்பி விடுங்கள். உடலில் எண்ணெய் தேய்த்து அரை மணி நேரத்திற்க்கு மேல் இருக்க வேண்டாம். பின்பு இளம் சூடான நீரில் சிகைக்காய், அரப்பு, கடலை மாவு கொண்டு குளிக்கவும். அந்த நாளில் உடலுறவு கொள்ளக்கூடாது. தூக்கம் வந்தாலும் பகலில் படுத்து உறங்கக்கூடாது. வெயிலில் அலைபாயக்கூடாது. இப்படி செய்வதால் உடலிருக்கும் சூடு குறைந்து குளிர்ச்சி தென்படும். சிலருக்கு சூட்டினால் தலையிலும் உடலிலும் கொப்பளம் வரும். அவர்கள் இந்த எண்ணெய் குளியல் செய்தால் சரியாகும். வாரத்திற்க்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால் மிகவும் நல்லது.
விக்கல், தும்மல், இருமல், ஏப்பம், குசு, கழிவு வெளியேற்றம் போன்ற வேகங்களை கட்டுப்படுத்தக்கூடாது. வரும் போதே விட்டு விட வேண்டும்.
பசி எடுக்கும் பொழுது பிடித்த உணவுகளை அமைதியாக ஒரு 30 தடவை மென்று ரசித்து சாப்பிடுங்கள்.அப்பொழுது தான் சக்தி உடலில் நன்றாக சேரும். பழங்கள், காய்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். உணவின் அளவு மிகாமல் இருந்தால் மிகவும் நல்லது. சீரனத்திற்க்கு தகுந்த உணவுகளை மட்டும் சாப்பிடவும். குடலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
பழம், சாப்பிடக்கூடிய பச்சை காய்கறிகள் மற்றும் பழச்சாறுகளை அதிகமாக சாப்பிடுங்கள்.
தேவையில்லாத கோபம், அதிக காமம், வெறுப்பு, பொறாமை போன்ற குணங்களால் சூடு அதிகமாகி உடலை கெடுத்துவிடும். நல்ல நண்பர்களிடம் பழகுங்கள்.
அதிக உடலுழைப்பு, குறைவான தூக்கம், மன மகிழ்ச்சியின்றி வேலை செய்வது பிராண சக்திகளை குறைத்து விடும்.
தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தவும். தேவையில்லாத காட்சிகள் மனதில் தோன்றி தங்கள் மனதை கெடுத்து விடும்.
ஏதேனும் சில உடற்பயிற்ச்சி செய்யுங்கள். யோகா கலையை கற்று தினமும் கடவுளிடம் பக்தி செலுத்துங்கள்.
இந்த மாதிரி வாழ்வியல் முறையை பின்பற்றினால் உடலும் மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கும். அவ்வளவு எளிதில் நோய் அண்டாது.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு