கார்த்திகை மாதம் பௌவர்னமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் சேரும் பொழுது மக்கள் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி கொண்டாடுகின்றனர். பிரமனும் விஷ்னுவும் யார் பெரியவர் என்று போர் செய்யும் பொழுது சிவன் ருத்ரனாக மாறி சோதிப்பிழம்பாக தோண்றினார். அதை பார்த்து இருவருக்கும் அகங்காரம் குறைந்து சோதியை வணங்கினர். இச்சோதியின் மகிமையை தெரிந்து கார்த்திகை தீபத்தை கொண்டாடுகிறோம். பஞ்ச பூதங்களில் அக்னி அல்லது நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை. சிவனின் அக்னி வடிவத்தை திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நெற்றியில் உற்று நோக்கும் பொழுது எழுந்த சிறு தீ பிழம்பு நேராக வழிந்து நெஞ்சுனுள் புகுந்து பிண்டம் முழுவதும் பரவுகிறது. பிண்டமும் கரைந்து சிவத்தில் லயிக்கிறது. பரவசத்தால் நீரூற்று ஏற்படுகிறது. உண்ணாமலையிலிருந்து அமிர்தம் சுரக்கும். சிவமும் அன்பும் ஒன்று தான் என்ற சிந்தனை மலருகிறது. அதன் அழகை உணர்த்தும் வகையில் கார்த்திகை தீபத்தை கொண்டாடுகிறோம்.
அள்ள அள்ள குறையாது,
அறியாதவருக்கு புரியாது.
அன்பு கொண்ட நெஞ்சங்களை,
அணைக்கும் இந்த தீ.
கட்டி அணைக்க வந்தா,
முத்தம் கொடுத்து அனுப்புவான்.
சென்ற பிறகு ஏக்கம்,
என்றுமே இருக்கும்.
பெரியோர்கள் நம்மை வழிநடத்துவதற்க்காக ஏற்படுத்தபட்ட கார்த்திகை தீபத்தை நாம் வருடந்தோரும் மறக்காமல் கொண்டாடுவது மிகவும் நல்லது. யாரவது ஒருவர் இத்தீபத்தை ஒருநாள் உணருவார்கள்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு