பெண்களுக்கு எதிராக ஆண்களிடம் வக்கிர புத்தி ஏன் ஏற்படுகிறது?
மனிதரை தவிர மற்ற மிருகங்கள் காம இச்சை ஏற்படும் பொழுது நேரம், இடம், சுற்றியுள்ள மற்ற உயிரினம் போன்றவற்றை சிந்திக்காமல் இச்சையை தடுக்காமல் பூர்த்தி செய்து கொள்கிறது. மனிதர்களாகிய நம்மால் அப்படி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மனிதர்களுக்கும் பொது இடத்தில் காம இச்சை ஏற்பட்டால் கூச்சம், பயம், மானம் போன்ற சில வியாதி காமத்தை அடக்குகிறது. சாதி, மதம், இனம், மொழி, நாடு, கூட்டம் போன்ற காரணங்களும் சேர்ந்து இந்த காமத்தை அடக்கி ஆள்கிறது. ஒவ்வொரு பிள்ளைகளுக்கும்/மனிதர்களுக்கும் சிறு வயதில் மாற்று பால் உடலின் அளவுகளை பற்றி ஆசை வரும். நாம் தான் இயற்கை அளித்த இந்த உடலை மறைப்பதற்க்கு ஆடைகளை அணிகிறோம். அதுவும் குழந்தை பிறந்ததவுடன் இந்த ஆடை பழக்கங்களை நடைமுறை படுத்துகிறோம். செத்த பின்பும் அந்த ஆடையுடனே புதைக்கிறோம். இந்த ஆடைகள் மாற்று பால் மீது உள்ள சின்ன ஆசைகளை தடுக்கிறது.
பூ மூக்கிற்க்கு இன்பம். இசை காதுக்கு இன்பம். தோலுக்கு இன்பம் தரக்கூடிய ஸ்பரிசம் ஏற்பட்டால் தோலுக்கு இன்பம், அழகான ஒன்றை பார்த்தால் கண்ணுக்கு இன்பம், சுவை நாக்கிற்க்கு இன்பம். உணவில் வரும் வாசனை மூக்கிற்க்கும் இன்பம் கொடுக்கும். சிலது மூன்று உணர்வுக்கும் இன்பம் அளிக்கும். ஐந்து புலணுக்கும் இன்பம் அளிக்க கூடிய ஒன்று என்றால் அது காமம். இந்த ஐந்து புலனுக்கும் இன்பம் அளிக்க கூடிய சிற்றின்பத்தை தடுத்தால் கடவுளை பார்க்க கூடிய பேரின்பத்தை எப்படி அடைவது. உடல் பசிக்கு எப்படி உணவு அவசியமோ அப்படிதான் உணர்வுப்பசிக்கு காமம் அவசியம்.
இந்த காம ஆசை என்பது மீண்டும் மீண்டும் தோன்ற கூடிய எண்ணம். அப்படி தோன்றக்கூடிய எண்ணங்களை தடுத்துகொண்டேருப்பதால் பேராசையாக மாறி பின்பு வக்கிரபுத்தியாக மாறி அதை எப்படியும் அடைய துடிக்கிறது. தனிமையான சூழ்நிலையிலோ அல்லது கூட்டாளிகள் சேரும் பொழுதோ மாற்று பாலின் மீது ஆண் தன்மை உள்ள ஆண்களோ அல்லது பெண்களோ அந்த வக்கிர புத்தி தோன்றி அடைந்தும் விடுகிறது. இது ஆண்களுக்கு சில நேரங்களில் நடந்தாலும் பாதிப்பும் மிகவும் குறைவு. ஆண்களுக்கு பெண்கள் மீது ஏற்படும் வக்கிரபுத்தி பெண்களை மிகவும் பாதிப்புகுள்ளாகிறது. இது போன்று நடக்காமல் இருக்கவேண்டுமென்றால் மனிதர்களாகிய நாம் இயற்கையோடு இயற்கையாக இருக்க வேண்டும்.
மானம் என்ற போர்வையில் வாழ்வதால் ஆடை பழக்கத்துக்கும் வந்தோம். அப்படி அனியும் ஆடைகள் எல்லோரும் ஒரே சீராக இருந்தால் ஒன்றும் ஆகாது. அதுவே 90 சதவிகித மக்கள் சீராகவும் 10 சதவிகித மக்கள் அரைகுறை ஆடைவுடன் இருந்தால் நிச்சியமாக கவர்ச்சி ஏற்பட்டு பார்க்கதான் தோன்றும். அழகாக மற்றும் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் கண்ணாடி முன் பல மணி நேரம் முயற்ச்சி செய்து வீட்டை விட்டு வெளியில் வருகிறோம். அது போன்ற கவர்ச்சியினால் ஈர்க்கப்பட்டு துன்பம் வந்தால் அது சகஜமாக ஏற்று கொள்ள வேண்டும். அப்படியில்லை என்றால் இயற்கையோடு இயற்கையாக மிருகங்கள் போன்று ஆடையில்லாமல் வாழ்ந்தாலும் ஒன்றும் ஆகாது. அணியும் ஆடைகளை குறைத்து நிர்வான நிலைவரை முயற்ச்சி செய்ய வேண்டும். அப்படி செய்யும் பொழுது முதலில் தோன்றும் ஆசையிலே வக்கிரமான குணங்கள் மறைந்து இன்பமாக வாழலாம். மிருகங்கள் போன்று நிர்வான நிலையில் வாழ்ந்தால் பல ஆபத்துகளை தடுக்கலாம். ஆபத்து என்பது ஆடைகளால் சுற்றுசூழல் மாசடைவதை தடுக்கலாம். ஆடைக்காக பஞ்சு மற்றும் பட்டுப்பூச்சி வளர்ப்பால் உணவு உற்பத்தி குறைவதை தடுக்கலாம். ஆடைகள் அணிவதால் மானம், வெட்கம் போன்ற சூழ்நிலையால் கழிவுகளை அடக்கி உடலுக்கு வியாதி வராமல் தடுக்கலாம். பெண்கள் சுதந்திரமாக வாழலாம்.யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு
மிருகங்களிடம் உடலுறவிற்கு தாய் தந்தை மனைவி குழந்தை என்ற பாகுபாடு கிடையாது, அதுபோல நாமும் வாழலாமென்கிறீர்களா ?
கட்டுப்படுத்த முடியாத பசி வந்துவிட்டால் மனிதன் இயற்றிய எல்லாச்சட்டங்களும் பறந்துவிடும். மனித மனம் ஒடுங்கி மீண்டும் ஓங்கும் பொழுது விசலாமான பார்வை வரும். அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில் உங்களிடமிருந்தே கிடைக்கும். சாதரன மன நிலையில் பதில் தரமுடியாது.