பொங்கல் என்பது நாம் வருடந்தோரும் சூரியனை வணங்கி அரிசியில் இனிப்பு சேர்த்து பொங்கல் வைத்து கொண்டாடுவது என்றும், விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவதற்க்காக என்று நினைத்து கொண்டாடுகிறோம்.
தேவையில்லாத குப்பைகளை எரிப்பது அல்லது அப்புறப்படுத்துவதற்க்கான நாளை போகி பண்டிகையாக கொண்டாடுகிறோம். இதுபோல உண்மை இருக்கும்.
இந்த பொங்கல் பண்டிகைக்கும் யோகா அல்லது கடவுள் வழிபாட்டுக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது. நம் உடலில் உயிர் இருக்கிறது அல்லவா. உயிர் இல்லாத உடலை பிணம் என்று சொல்வோம். இந்த உயிரைத்தான் ஜீவன், சூரியன் என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். உயிர், உடல் மற்றும் இல்லாமல் மனமும் நமக்கு இருக்கிறது. எண்ணங்களின் தொகுப்பு தான் மனம் என்று சொல்கிறோம். உயிரை சுற்றி எண்ணங்கள் இருக்கிறது. அந்த எண்ணங்களால் நம் உயிரை பற்றி அறிய முடியாமல் வாழ்கிறோம்.
எண்ணங்களை சுத்தபடுத்துவதற்க்கு யோக முறைகள் உள்ளன. பழைய குப்பைகளை எரிப்பது போல் நம் எண்ணங்களை எரித்து சாம்பல் ஆக்க வேண்டும். அதன் காரணமாக போகி பண்டிகை கொண்டாடுகிறோம்.
பொங்கல் என்றால் பொங்குவது என்று சொல்லலாம். அதாவது நம் எண்ணங்களை சுத்தபடுத்திவிட்டால் உயிரை பற்றி அறிய முடியும். அந்த உயிர் மகிழ்ச்சியை பொங்கும். பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியை அனுபவிக்க ஏதோ ஒரு பொருளோ அல்லது மற்ற அன்பரின் துணை நமக்கு தேவை. ஆனால் மனங்களை சுத்தம் செய்யும் பொழுது உயிர் எந்த துணையுமில்லாமல் பல மடங்கு இன்பங்களை நமக்கு கொடுக்கும். இன்பங்களை பொங்குவதன் காரணமாக இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறோம். உயிரை சூரியன் என்றும் சொல்லலாம், அதனால் சூரிய பொங்கல் என்றும் கூறுகிறோம்.
கரும்பு போல் கடவுளிடம் இணைவது இனிப்பாக இருக்கும் என்று சொல்ல கரும்பு. மார்கழி மாதம் அதிகாலையில் பெண்கள் எழுந்து புள்ளியை நோக்கி கோலம் வரையும் பொழுது மனம் கூர்மை அடைகிறது. கூர்மை அடைந்த மனம் ஒரு நாள் புள்ளி இணைவது போல இறைவனிடம் இணைந்து விடுவார்கள். மார்கழி மாதம் முழுவதும் வரைந்த கோலத்தினால் ‘தை’ யில் பொங்கலை சுவைக்கிறோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்ல காரணம் இதுவாக இருக்கலாம்.
மாட்டு பொங்கலுக்கு மாடுகளை குளிப்பாட்டி மாலை அணிவித்து சலங்கைகள் கட்டுவார்கள். அன்று ஏர் உழுதும் மாடுகளுக்கு எந்த வேலையும் கொடுக்கமாட்டார்கள். பூஜை செய்யும் பொழுது மாட்டின் பின் பகுதியில் இருக்கும் வாலினை தூக்கி பூஜை செய்வார்கள். இதற்க்கும் நமக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது. மாட்டு பொங்கலுக்கும் காம தேவனுக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது. காமம் வேறு சிவகாமம் வேறு. சிவகாமத்தை காமதேவன் என்றும் சொல்லலாம். அதன் பொருட்டு மாட்டு பொங்கல் கொண்டாடுகிறோம்.
காணும் பொங்கல் என்றும் கன்னி பொங்கல் என்றும் நான்காவது நாளாக கொண்டாடுகிறோம். இது சிறுவர்களை நெறிப்படுத்துவதற்க்காக நடத்தப்படுகிறது. சிறு தீயை ஏற்படுத்தி பறை ஓசை கேட்கும்பொழுது சிறுவர்கள் தாங்கள் வைத்திருக்கும் கன்றுகளுடன் தீயை தாண்டுவார்கள். வயதுக்கு வந்த கன்னிப்பெண்ணை பார்த்தால் மிகவும் பொழிவாக தெரிவாள். அதுபோல கடவுளை புரிந்து கொண்டவர்கள் இருப்பார்கள். இந்த கன்னி பொங்கல் அன்று பெரியோர்களிடம் ஆசி பெறுவது. கன்னிப்பூஜை அல்லது வாலைப்பூஜையை செய்பவர்களை அந்தனர்கள், பெரியோர்கள் என்று சொல்கிறோம். இவர்களிடம் ஆசி பெற்று பூஜையை முயற்ச்சி செய்வதால் கன்னிப்பொங்கல் என்று அழைக்கிறோம்.
இந்த விழாவில் கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், கூளி விளையாட்டு, பானை உடைத்தல், கும்மி பாட்டு நடக்கும். இதற்க்கு பின்னாடி சிறப்பான காரணம் உள்ளது. கட்டுக்கடங்காத மனதை தன்வசப்படுத்துவது போல கூளி விளையாட்டு இருக்கும். ஜெல்லி கட்டும் இந்த தன்மையில் ஏற்படுத்த பட்ட ஒன்றாகும். பல ஜென்மங்களாக அல்லது பல ஆண்டுகளாக வழுக்கும் தன்மையுள்ள ஒன்றில் முயற்ச்சி செய்து பொங்கும் தன்மை கொண்ட பரிசை அடைவது போல இருக்கும் வழுக்கு மரம். அசுரர்களும் தேவர்களும் அமிர்தத்தை கடைவது போல கையிறு இழுத்தல் விளையாட்டு இருக்கும். தாங்கள் கற்று கொண்ட வித்தையின் பெருமையை சொல்லி மற்றவரை கூப்பிடும் முறை போல கும்மிப்பாட்டு இருக்கும். கண்ணை கட்டிக்கொண்டு திசை தெரியாமல் செல்லும் நபர் போல் இல்லாமல் திசை தெரிந்து சக்தியை கம்பில் வளப்படுத்தி அடையும் மகிழ்ச்சி போல பானை உடைத்தல் இருக்கும். பாரம்பரிய விளையாட்டுக்கு பின்னாடி அர்த்தம் பொதிந்துள்ளது.
உலகத்தில் கடவுளை புரிந்து கொண்டவர்கள் சிலரே. பெரும்பாலான மக்கள் கடவுளை பற்றி அறிய முயற்ச்சி செய்வதில்லை. அப்படியே முயற்ச்சி செய்தாலும் பல விதமான தடங்களால் வெற்றி பெறாமல் இருப்போம். இந்த யோக முறைகளை பற்றி மக்களுக்கு ஏதாவது ஒரு முறையில் சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்க்காக பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறோம்.
இந்த பொங்கல் பண்டிகை விவசாயிகளுக்காக மட்டும் என்று நினைத்து கொண்டாடாமல் மறந்து விடாதிர்கள். தங்களில் யாரோ ஒருவருக்கு எதற்க்கு இந்த பண்டிகை என்று கேள்வி எழும். தேடுதலின் விளைவாக பொங்கலின் சுவை அறிந்து விடுவார்கள். பொங்கல் வைத்த பிறகு நாய் நக்கி விட்டதாக சொல்லி ஊரே இப்பொங்கல் திருவிழாவை கொண்டாடாமல் இருப்பதாக செய்தி படித்தேன். யாரேனும் இத்தகவலை தெரிந்து அம்மக்களுக்கு எடுத்து சொல்லி பொங்கலை கொண்டாடசொல்லுங்கள். பெரியோர்கள் நம்மை வழிநடத்துவதற்க்காக ஏற்படுத்தப்பட்ட விழாவை நாம் வருடந்தோரும் மறக்காமல் கொண்டாடுவது மிகவும் நல்லது.
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு