விநாயகன் என்பது விசேசமான ஒருவன் என்றும், வினைகளை கடந்தவன் என்றும் அறிப்படுகிறான்.
விநாயகனுக்கு சித்தி மற்றும் புத்தி என இரண்டு மனைவிகள். மனங்களை சித்தி, புத்தியாகவும் பிரிக்கப்படுகிறது. சித்தி என்பது உணர்ச்சிகள் மூலம் அறிவது. பசி, தாகம், அன்பு போன்ற உணர்வுகளை சித்தி என்று சொல்லப்படுகிறது. புத்தி என்பது ஞாபகத்தில் இருப்பதை பகுத்து பார்ப்பது.
ஒரு தந்தம் உடைந்திருப்பது அகங்காரத்தை வென்றவர் என செய்தி.
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற அளவற்ற ஐந்து பெரிய பூதம். பஞ்சபூதம். மிருகங்களில் பெரியது யானை. யானையின் தலையை வைத்தது பஞ்சபூதத்தையும் ( கணங்கள் ) கட்டுக்குள் வைப்பது. கணங்களுக்கு தலைவன் கணபதி.
தும்பிக்கை என்பது முதுகு தண்டுவடத்தின் வழியாக உயிர் சுவாசம் நடைபெறுவதை உணர்ந்தோர். வாசி சித்தி அடைந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
வாசி நிலையில் ஒருவர் இருந்தால் சனி பிடிக்கமுடியாது. இன்று போய் நாளை வா என்ற கதைக்கு காரணம் இது தான். எமன் அருகில் வந்தாலும் உயிரை எடுக்கமுடியாது.
பெரிய காது என்பது என்றும் நாதத்தை கேட்டுக்கொண்டிருப்பதை குறிப்பது. சங்கும் அதுவே. ஓம் அதுவே.
சக்கரம் என்பது காலச்சக்கரத்தை நிறுத்தியவர் அதாவது பிறப்பு இறப்பு சக்கரத்தை நிறுத்தியவர் என்று கேள்விப்பட்டதுண்டு. பிரம்மத்தை உணர்ந்தோர்.
தாமரை என்பது ஞானம் மலர்வதை குறிப்பது.
மூஞ்சூறு வாகனத்தில் எப்பொழுதும் வலம் வருபவர். நடுநாசியின் மூச்சை குறிப்பது. நடுநாசியை பயன்படுத்துபவர்கள் அனுமன், பீமனை போன்று பலமுடையவர்களாக இருப்பர்.
அங்குசம், கயிறு என்பது மனதை புறத்தே செல்லாமல் இறைவனை நேசிக்க செய்வது.
சிறிய லட்டு என்பது சிற்றின்பம். நிறைய லட்டு, மோதகம், குடம், தீர்த்தம் என்பது பேரின்பத்தை உணர்ந்தவர்.
விநாயகனுக்கும் முருகனுக்கும் ஞானபழத்தை பெறும் போட்டியில், முருகன் மயில் வாகனத்தை எடுத்து உலகை சுற்ற கிழம்பிவிடுவார். விநாயகன் வாகனம் இல்லாதால் சிறிது ஆலொசனை செய்தபின் தன் அப்பா சிவனையும் அம்மா பார்வதி தேவியையும் சுற்றி ஞானபழத்தை பெற்றுவிடுவார். நம்முள் சிவன் உயிராகவும் பார்வதி சக்தி உடலாக உள்ளதால், தினமும் நம் உடலையும் உயிரையும் வணங்கினால் ஞானபழத்தை எல்லோரும் பெறமுடியும் என்பது சூச்சமம்.
இறைவனை உணர்ந்தால் தெய்வமாக வணங்கலாம். கடவுளை உணர்ந்து, அறிவும் புத்தி கூர்மையும் உள்ள ஒருவர் மற்றவர்களை வழி நடத்த இயலும். ஆதலால் குரு என்றும் அழைக்கப்படுகிறார். இப்படி தகுதி உள்ள ஒருவர் நம்மை பார்த்தாலே புண்ணியம். குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்று சொல்ல காரணம் இதுவே.
கோயில்களில் விநாயகனை முதலில் வணங்குவது ஏன் என்றால் இறைவனை உணர குரு( விநாயகர் ) வழிகாட்டுவார் என்று அர்த்தம். இறைவனை உணர்ந்தவர்களை வணங்கி அவர்களிடம் நல்ல விசயங்களை கற்று தொடர்ந்து முயற்ச்சி செய்தால் தங்களுக்கு நல்லது நிச்சயம் நடக்கும்.
விநாயகர் சிலை என்ற வரைப்படத்தை வைத்துக்கொண்டு மனிதர்களாகிய நாம் நம்மை பற்றி அறிவது. சாதி, மதத்திற்க்கு அப்பால் உள்ள ஒன்று. பக்தி அல்லது யோக சாதனை மூலம் அறிவதை குறிப்பது. தினம் கொண்டாட வேண்டிய ஒன்றை ஒரு நாள் அழகுப்படுத்திப்பார்க்கிறோம்.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
~சசிகுமார் சின்னராஜு
THANK YOU SO MUCH FOR SHARING SUCH GREAT POEMS, I WAS SEARCHING FOR THIS SIDHAR SONGS POEMS FOR SO LONG I CANT JUST EXPRESS HOW HAPPY AND CONTENTED AM WRIGHT NOW THANK YOU VERY MUCH