பல் விளக்க வேண்டுமா?

மாடு ஆடு கோழி நாய் பறப்பன ஊர்வன எல்லாம் பல் துலக்கிட்டா சாப்பிடுகிறது. மனிதர்கள் மட்டும் ஏன் பல் துலக்க வேண்டும். மனிதரை தவிர மற்ற உயிரினங்கள் ஏன் பல் துலக்கவில்லை என்று சற்று அலசுவோம். பசித்த பின் தான் மற்ற உயிரினங்கள் உணவை உண்ணும். பசி அடங்கிவிட்டால் உணவை மறந்துவிடும். கழிவு வருகிற சமையத்தில் வீடு வழிப்பாதை என்றெல்லாம் பார்க்காமல் கழிவை வெளியேற்றி விடும். குடலில் கழிவு தேக்கமில்லாதால் வாய்பகுதியில் அழுக்கு படியாது அதனால் வாய் துர்நாற்றம் வீசாது. குடலில் தேக்கமிருந்தால் வாயில் மட்டும் அழுக்கு படியும் என்று நினைக்கவேண்டாம், உடல் முழுவதும் அதன் பாதிப்பு இருக்கும். கண் காது மூக்கு போன்ற ஒன்பது ஓட்டைகளில் அதன் பாதிப்பு மெல்ல தெரிய ஆரம்பிக்கும். மிருகங்கள் பெரும்பாலும் பசி வந்த பிறகு தான் சாப்பிடும், எல்லா உயிர்களுக்கும் வயிற்றில் காலியாக உள்ள சமைத்தில் ஒரு வகையான நெருப்பு சுரக்க ஆரம்பிக்கும். அது பசி உணர்வை தூண்டப்பட்டால் மனிதர்களை தவிர மற்ற உயிரினங்கள் இரையைத்தேடி சாப்பிடும். பசி அடங்கிவிட்டால் சாப்பிடுவதை நிறுத்திவிடும்.

பெரும்பாலான மனிதர்களை பொறுத்த வரையில் பசிக்காவிட்டாலும் சாப்பிடுவோம், பசித்தாலும் சாப்பிடுவோம், பசி அடங்கிவிட்டாலும் சாப்பிடுவோம். பசிக்காமலும் பசி அடங்கிவிட்டாலும் சாப்பிடும் பழக்கமுள்ள நமக்கு குடலில் உணவு சீரணம் செய்ய முடியாமல் தேக்கமாகும். உடலுக்கும் உடல் உழைப்புக்கும் தகுந்தார் போல் சாப்பிட வேண்டும். நிறையா சாப்பிட்டால் தான் உடல் வலிமை பெறும் என்ற மனமுள்ளதால் நிறையா பாதிப்பு நிகழும். மற்றும் சாப்பிடும் உணவு உடலுக்கு தகுந்ததா என்று சிந்திக்காமல் சாப்பிடுவது. அதிகமாக உடல் உழைப்பு உள்ளவர்கள் சாப்பிடும் இறைச்சிகளை எல்லோரும் எடுத்துகொள்ளக்கூடாது. அப்படியே எடுத்துகொண்டாலும் சாப்பிட தெரியாது. இறைச்சியில் ருசிக்கேற்ற வகையில் மாற்றிஉண்பதாலும் ருசிக்கு அடிமை ஆனதால் வாயில் வைத்த உடன் குடலுக்கு சென்று விடுகிறது. இப்படி சென்ற உணவு குடல் சீரணம் செய்ய முடியுமா. இறைச்சியை நன்றாக மென்று அதன் ருசியை எடுத்து சக்கையை துப்பி விடவேண்டும். ஆனால் இதை செய்கிறமா? சக்கையை துப்பவில்லை என்றால் அந்த இறைச்சியை பொடி பொடியாக மாற்றி தண்ணீர் போன்று மற்றி உள்ளே அனுப்ப வேண்டும். இறைச்சியை சீரணம் செய்ய இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும். இப்படி சாப்பிடுவதால் குடலில் வாய்வு உண்டாகும். மற்ற எந்த உயிரினமும் செய்யாத நாம் குடல் கழிவுகளை அடக்குவதால் உடலில் நிறையா பாதிப்பு நிகழும். குடலில் தேக்கமானால் வாய்வு உண்டாகும். அந்த வாய்வு வெளியேறுகிற சமயத்தில் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்பதற்க்காக வாய்வையும் அடக்குவோம். பின்பு உணவுக்குழாய்க்கும் வாய்ப்பகுதிக்கும் இடையில் உள்ள குழாய் வழியாக கெட்ட வாய்வு தலை பகுதியிலுள்ள எல்லா ஓட்டைகளிலும் அதன் தாக்கம் இருக்கும். முக்கியமாக வாய் பகுதிலும் நாக்கு மூக்கு பகுதிகளில் அதன் பாதிப்பாக வெள்ளை மஞ்சள் படலங்கள் தோன்றும். நிச்சியமாக உமிழ்நீர் சுரக்கும் பகுதிகளிலிருந்து அமிலம் சுரக்கும். அதன் பாதிப்பால் பல் சொத்தையாகவும் மற்றும் கரைய ஆரம்பிக்கும்.

நமக்கு உணவை சாப்பிட தெரியாமலும் மனம் கேட்கும் உணவெல்லாம் சாப்பிடுவதாலும் பாதிப்பு நிறைய ஏற்படுகிறது. நாம் தொலைக்காட்சி மற்றும் இன்டர்நெட்டில் கவனம் செலுத்துவதால் பல நிறுவணங்கள் சொல்வதையெல்லாம் நம் மனம் உண்மை என்று நம்பும். பின்பு நம்பும் உண்மையை மனம் அடைய ஆரம்பிக்கும். தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தும் உணவெல்லம் நல்ல உணவு என்று நம்பி நாம் நாளைடைவில் அதனை விரும்பி உணவை எடுக்கிறோம். பெரும்பாலும் பதப்படுத்தபட்ட உணவை குடலால் சீரணம் செய்ய முடியாது. பதப்படுத்தபட்ட உணவை நீண்ட நாள் எடுத்துகொண்டால் உடல் சீக்கிறம் கெட்டு விடும். உடலால் சீரனம் செய்ய முடியாது என்று உணர்ந்தாலும் மனம் விரும்புவதால் உணவு உள்ளே செல்ல ஆரம்பிக்கும். சீரனம் செய்ய முடியாமல் குடலில் வாய்வு உண்டாகி பின் வாயில் நாற்றம் எடுக்க ஆரம்பிக்கும். பல் விலக்க தோன்றும், அப்படியே பல் விலக்கினாலும் இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் நாற்றம் அடிக்கும். மருத்துவரிடம் சென்றால் தரமான பல் விளக்கப்பசை எழுதிகொடுத்து காலை இரவு இரண்டு வேளை பல் விலக்க வேண்டும் என்று கூறுவார். நாமும் செய்வோம் ஆனால் அப்படியும் வாய் துர்நாற்றம் வீசும். அதை தடுக்க வெற்றிலை பாக்கு புகையிலை, பீடி, சுருட்டு போன்ற போதையை பயன்படுத்தி மேலும் உடலுக்கு துன்பத்தை கொடுப்போம். இதனால் பல் மீண்டும் கறையாகி மேலும் பல் விலக்குவோம். காலப்போக்கில் இரத்தம் கெட்டுபோகி உடல் கெட்டுப்போகும். உணவு என்ற தலைப்பில் நமக்காக பெரியோர்கள் கூறியுள்ள கருத்துகளை படித்து சாப்பிட தெரிந்தால் பல் விளக்க வேண்டிய அவசியமில்லாமல் போகலாம். சாப்பிட தெரிந்தால் பல்லை எந்த பசையும் இல்லாமல் விரலில் தேயித்து விட்டாலே போதும் வாய்யை துர்நாற்றத்திலிருந்து மீட்டு விடலாம்.

பல்லை எதில் விலக்கலாம்?
தற்போது நாம் பெரும்பாலும் கடைகளில் விற்கும் பற்பசையை பயன்படுத்துகிறோம். பல நிறுவனங்கள் நாம் பயன்படுத்தும் கறியையும் உப்பும் குறைகூறி அவர்கள் தயாரிக்கும் பற்பசையை ஊக்குவித்தனர். பின்பு அவர்களே உப்பு மற்றும் கறி இல்லாத பற்பசையை வாங்காதிர்கள் என்று விளம்பரப்படுத்தி அவர்கள் தயாரிக்கும் பற்பசை உப்யோகப்படுத்த சொல்கின்றனர். தயாரிக்கும் பற்பசையை கருப்பு, சிவப்பு, நீலம், பச்சை என நாண்கு விதமான வண்ணக்கோடுகளாக பிரிக்கிறார்கள். கருப்பு சுத்தமான ரசாயன கலவை, சிவப்பு இயற்கை மற்றும் ரசாயனம், நீலம் இயற்கை மற்றும் மருத்துவம், பச்சை சுத்தமான இயற்கை. பற்பசையை வாங்கும் பொழுது கேட்டு வாங்குங்கள். இதில் எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது.

பாரம்பரியமாக நாம் பல் விளக்க வேப்பங்குச்சியை பயன்படுத்தினோம். வேப்பம் மரத்திலிருந்து குச்சியை ஒடித்து நுனிப்பகுதியை நன்கு மென்று அதை தூரிகை(பிரஸ்) போல் செய்து பல் துலக்கினோம். இந்த வேப்பமரத்தின் மருத்துவ பயண்களை நாம் காலம்காலமாக பயன்படுத்தி வருகிறோம். வேப்பம் மரத்தில் மருத்துவபயன் உள்ளது என்று சொல்லி வெளி நாட்டு காரன் காப்புரிமை வாங்கிய பொழுது நம் நாட்டிருந்து நம்மாழ்வார் போன்ற நற்குணம் படைத்த பெரியோர்கள் ஒரு குழு அமைத்து வெளிநாட்டிற்க்கு சென்று அந்த காப்புரிமையை இரத்து செய்தனர். அங்கு வேப்பமரக் குச்சியை எப்படி பயன் படுத்தி பல் விலக்குவது என்று எடுத்து கூறியுள்ளதாக செய்தி படித்துள்ளேன். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்கிற வரி ஆழமரத்தின் விழுதுகளையும் கருவேலாமரத்தின் குச்சிகளையும் அக்காலத்தில் பல் விலக்க பயன்படுத்தியதாக புரிகிறது. நாயுருவி வேரையும் நாம் பல் விலக்க பயன்படுத்தலாம். லண்டன் குச்சியும் பயன்படுத்தலாம். கொஞ்ச வேப்பமர இலைகளை மென்று கைவிரலாலே பல் விலக்கலாம். வேப்பமர இலைகளோடு துளசி இலையும் சேர்த்துகொள்ளலாம். கொய்யா இலைகளும் துளசி இலைகளும் பல்லுக்கு உறுதி.

எனக்கு தீவிர தேடல் பல்லை பற்றி உள்ளதால் பல விதமான ஆராயிச்சியை மேற்கொண்டேன். அதில் கல் உப்பை தூள் செய்து பயன்படுத்தினேன். உப்போடு மஞ்சள் சேர்த்தேன். இலவங்கமும் பட்டையும் தனித்தனியாக தூள் செய்து உப்பும் இதனோடு சேர்த்து பல் துலக்கி உள்ளேன்.

கடுக்காயை மேல் உள்ள தோல் மட்டும் எடுத்து தூள் செய்து சோற்றுக்கற்றாழையில் இருக்கும் சோறை எடுத்து தூளோடு சேர்த்து கலக்கி வெயிலில் காலையிலிருந்து மாலை வரை ஒரு நாள் முழுவதும் வைத்து பின் பிட்டவியல் செய்து காயவைத்து தூள் செய்தால் தான் மருத்துவகுணம் கடுக்காய்க்கு வரும். கடுக்காயை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அதனை முன் சொல்லிய வழியில் சுத்தி செய்து பயன்படுத்த வேண்டும். கடுக்காய்த்தூள் மற்றும் உப்பும் சேர்த்து பல் துலக்கலாம். கடுக்காய்த்தூள் மற்றும் இலவங்க தூள் கலக்கி பல் துலக்கலாம். கடுக்காய்த்தூளில் பல் விலக்கும் பொழுது விரலுக்கும் பல்லுகும் ஒரு பிடிப்பு வருகிறது. அதனால் நன்றாக பல் துலக்கலாம்.

மண்ணையும் பயன்படுத்தலாம். மண்ணை துணியில் சளித்து அதனால் பல் துலக்கலாம். கறியை கொண்டு பயன்படுத்தலாம். வேப்பமரப்பட்டை, மாமரப்பட்டை, கொய்யாமரப்பட்டை சேகரித்து தூள் செய்து துணியில் சளித்து பயன்படுத்தலாம். எந்த பாதிப்பும் இல்லாத இயற்கை மர செடி கொடிகளை நீங்களே ஆராயிச்சியை மேற்கொள்ளுங்கள். என்ன ஆகப்போகிறது. பயத்திலிருந்து வெளியே வாருங்கள்.

இயற்கையோடு இயற்கையாக வாழும் எந்த உயிரினமும் பல் விலக்குவதில்லை. நாமும் அப்படி வாழ வேண்டும் என்ற எண்ணம் உதிக்கவில்லையா! உணவை சாப்பிடத்தெரிந்தால் காலப்போக்கில் நாக்கிலும், பல்லிலும், மூக்கு துவாரத்திலும் அழுக்கு படியாது. பின்பு வாயை கொப்பளித்தாலே போதும். பணம் மிச்சம். நேரம் மிச்சம். உடலில் எந்த பாதிப்பும் வராமல் பாதுகாத்துகொள்ளலாம். யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.

மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.

–சசிகுமார் சின்னராஜு

Share

sasikumar

i am sasikumar graduated as an Electrical and Electronics Engineer. Now i am working as software web developer. Since my college first year onwards my thoughts move towards peace and still i collecting information related to simple and happy living style. Here i share Information related to health, simple life style and yoga.

One thought to “பல் விளக்க வேண்டுமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *