வணக்கம் தோழர்களே.
நாம் வாழும் நிலத்திலும் ஆறுகளிலும் தண்ணீர் ஏன் குறைந்துகொண்டே போகிறது குறித்து என்னால் முடிந்த அளவு பார்வையை முன்வைக்கிறேன்.
பெப்சி கொகோ கோலா போன்ற குளிர்பான நிறுவனங்கள் ஆற்றுப்படுக்கையில் உள்ள நீரை உறிஞ்சிவிட்டது என்றால் கடைக்கோடியில் உள்ள கிராமத்தின் நிலத்தடி நீர் எங்கே சென்றது? சொன்னால் நம்ப மறுக்கும் நம் உள்ளம், நாம் தான் நம் தண்ணீரை விற்றுக்கொண்டிருக்கிறோம். முக்கியமாக தண்ணீர் பொதிந்துள்ள உணவு பொருட்களை விற்பது மூலம். அரசியல் சூழ்ச்சி காரணமாக பெரும்பாலான விவசாய நிலத்திலுள்ள நீர் சுரண்டபட்டுவிட்டது. தண்ணீர் எப்படி சுரண்டபடுகிறது அதை எப்படி தடுப்பது குறித்தான பார்வையை வைக்கிறேன்.
தாங்கள் வாழும் பகுதியில் நெல், கரும்பு, தக்காளி, வெள்ளரிக்காய், பழம் வகைகளான மாம்பழம், வாழைப்பழம், திராட்சை, தென்னை போன்ற தண்ணீர் வகையான உணவுகளை தோட்டம் முழுவதும் மொத்தமாக விவசாயம் செய்திருந்தாலோ அல்லது செய்தாலோ தண்ணீர் வறண்டுகொண்டே போகும். குறிப்பிட்ட காலம் ஒரு 10 வருடம் செய்தால் தங்கள் பகுதி வறட்சியை சந்திக்கும். அதுதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் பல உயிர்கள் மடிவதற்க்கான நேரம் வந்துகொண்டிருக்கிறது.
ஒரே நாளில் அல்லது குறைந்த நாட்களில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற சிந்தனை, குலுக்கல் பரிசு/ லாபச் சீட்டு( லாட்டரி ) டிக்கட்களை வாங்க தூண்டுகிறது. எத்தனை நாட்கள் நஷ்டம் ஏற்பட்டாலும் ஒரு நாள் பணம் அதிகமாக வரும் என்ற சிந்தனை அவர்களை வாங்க தூண்டிக்கொண்டே இருக்கும். அதே நுட்பம் தான் தக்காளி போன்ற பயிர் வகையிலும். வருடத்தில் 25 முதல் 35 நாட்கள் மிக அதிகமான லாபத்தை ஏற்படுத்தி மீதிருக்கும் 330 நாட்கள் மிககுறைந்த விலையை நிர்நயம் செய்து தண்ணீரை தக்காளி மூலம் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்க்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நுட்பம் மூலம் மிகக்குறைந்த செலவில் தண்ணீர் திருடப்படுகிறது. இது தக்காளி செடியில் மட்டும் கிடையாது. பல வகையான உணவுப்பயிர்களிலும் நடக்கிறது.
தண்ணீர் அதிகமுள்ள பொருட்களை விவசாயம் செய்தால் இன்னும் இரண்டே வருடங்களில் பல உயிரினங்கள் சாவதை பார்க்கலாம். மனித இனம் மட்டும் அழிவை சந்தித்தால் பிரச்சனை வராது. இயற்கையில் வாழும் அனைத்து உயிர்களும் அழிவை நோக்கி பயனம் செய்கிறது. ஒரு நாட்டையே அழிப்பதற்க்கான திட்டம் தீட்டப்பட்டருக்கு. மிகப்பெரிய சூழ்ச்சி உள்ளது போல் எண்ணம் எழுகிறது. ஒவ்வொரு பகுதியாக ஆராயிச்சி செய்யபட்டு அந்த நிலப்பரப்பின் நுனுக்கங்களை தெரிந்து கொண்டு தேர்வு செய்து அழிவை ஏற்படுத்தியுள்ளனர். காலம் செல்லும் போது தண்ணீரீன் ஆழம் அதிகமாகிறதா குறைகிறதா தாங்களே யோசனை செய்யுங்கள். வறட்சி வந்துவிட்டால் உணவுகளை வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டும். நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவுகளை இறக்குமதி செய்யமுடியுமா. அப்படியே இறக்குமதி செய்தாலும் தண்ணீரை இறக்குமதி செய்ய முடியுமா. தண்ணீரை இறக்குமதி செய்தாலும் மிக குறைந்த அளவில் தான் குளிர்பானம் / திரவ உணவுகளின் மூலம் இறக்குமதி செய்யப்படும். தாங்களே சிந்தனை செய்யுங்கள்.
மாட்டுப்பால் குடித்தால் மிகவும் நல்லது என்று செய்தியை பரப்பி பாலை வணிகமாக மாற்றிவிட்டனர். பல அன்பர்களுக்கு மாட்டு பாலை பழக்கபடுத்தியதால் தேவைக்காக ஜெர்சி மாடு உருவாக்கப்பட்டு அது இன்று எமனாக உருவெடுத்துள்ளது. கறக்கும் மாட்டுப்பால் ஒரெடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்க்கு கொண்டு செல்வதால் திரவப்பொருளான தண்ணீர் மறைமுகமாக விற்க்கப்படுகிறது. நீர் நிறைந்த ஆற்றுப்பகுதியில் ஜெர்சி மாட்டை வளர்க்கலாம் அதுவே மற்ற பகுதிகளில் வளர்த்தால் வறட்சி ஏற்படுவதை தடுக்க முடியாது. பாலுக்காக மட்டும் பல லிட்டர் பால் கறக்கும் மாடுகளை இனிமேல் வளர்க்காதிர்கள், வைத்திருந்தால் தங்கள் பகுதிக்கு ஆபத்து நிச்சயமாக வரும், விற்றுவிடுங்கள். பல பகுதிக்கு ஆபத்து ஏற்க்கனவே வந்துவிட்டது. எறுமையின் மீது எமன் வருவான் என்ற கதை கேள்வி பட்டதுண்டு அனால் இன்று பல லிட்டர் பால் கறக்கும் ஜெர்சி மாட்டின் மீதும் வருகிறான். ஜெர்சி வகையை சார்ந்த மாட்டுப்பாலை குடிப்பதால் தங்களுக்கும் ஆபத்து தங்கள் பகுதிக்கும் ஆபத்தே.
நகரத்தில இருக்கிற மக்களுக்கு எப்பொழுதும் எப்படி தண்ணீர் அவர்கள் பகுதிக்கு வருகிறதோ அது வந்துகொண்டே இருக்கிறது. அதனால் தண்ணீரின் வறட்சியை உணர்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு அல்லது உணர்வதற்க்கு தாமதமாகலாம். கிராமத்தில் இருப்பவர்கள் நிச்சயமாக உணர்ந்திருக்க வேண்டும், ஆனால் அதை பற்றி சிந்திக்க நெரமில்லை அல்லது சிந்திக்க முடியவில்லை. வேலை இருந்தால் உழைப்பு, தொலைக்காட்சி, கல்யாணம், காதுகுத்து, வயசுக்கு வந்த சடங்கு, சாவு, காரியம், புதுமனை புகுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கு. மக்கள் சிலர் புகழிலும் குடிபோதையில் தள்ளாடுகின்றனர். ஒரு விவசாய குடுபத்திற்க்கு பணம் அதிகம் செலவானால் வேறு எதோ ஒரு வழியில் ஈடுகட்டியாக வேண்டும். பாரம்பரிய விவசாயி எளிமையான வாழ்கையை விரும்புவான் என்றும் பணத்திற்க்காக தன்னை விற்க மாட்டான் என்றும் கேள்விபட்டிறுக்கிறேன். ஆனால் இன்று பணமென்ற மாயையில் சிக்கி தனிமனிதனின் தன்மானத்திற்க்காகவும் புகழுக்காகவும் இயற்கையை வேகமாக அழிக்கிறார்கள்.
நிலங்களை பொதுவாக மாற்றாமல் விவசாயம் செய்தாலும் பல பிரச்சனைகள் வரும். இதையும் கருத்தில் வையுங்கள். நிலங்கள் சாதியின் ஆதிக்கத்தில் உள்ளதால் சாதிக்கிடையே மோதல்கள் ஏற்பட்டும் வறட்சி அதிகமாகிறது. எல்லோரும் தங்களை உயர்ந்தவர்களாக சித்தரிக்கவேண்டும் என்ற சிந்தனை உள்ளதால் பொருள் துறைகளில் பந்தா செய்து தங்கள் பகுதிக்குள்ளே அழித்துக்கொண்டு வாழ்கிறார்கள். விவசாய நிலம் அரசாங்க கட்டுபாட்டிற்க்கு எதிராக உள்ளதால் அரசாங்கத்தில் வேலை செய்யும் பெரும்பாலான அதிகாரிகள் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டனர். அதிகாரிகளுக்கு லாபம் வர வேண்டும் என்ற சிந்தனையில் பணத்திற்க்காக மருந்து தொழிலதிபர்களிடமும் வெளிநாட்டு விதை விற்பனர்களிடமும் நாட்டை விற்று விட்டனர். அரசாங்கம் மூலமாக பல விவசாயிகளுக்கு மா மரங்களும் தென்னை மரங்களும் மானியமாக கொடுக்கப்பட்டுள்ளது. வறட்சியை ஏற்படுத்துவதற்க்கு முன்பே போட்ட திட்டம் தான் இது. அவர்களால் தான் மிகபெரிய அளவில் வறட்சி வந்துள்ளது.
தங்கள் பகுதியில் உள்ள மக்களை ஒன்றுதிரட்டி தண்ணீர் பொதிந்துள்ள காய் கனிகளை விளைய வேண்டாம் என்று முடிவை மேற்கொள்ளுங்கள். தங்கள் குடும்பம் அல்லது சுற்றுவட்டாரப்பகுதிக்கு மிகுந்த மாமரங்கள், தென்னை மரங்கள், வாழை மரங்கள், பழ வகையான எல்லா மரங்களையும் வெட்டி வீழ்த்துங்கள். அதற்க்கு பதில் அரச மரம், ஆலம் மரம், வேப்பம், புங்கை, துரிஞ்சா மரம் போன்ற வகைகளை தேர்ந்தெடுங்கள். இனிமேலும் தண்ணீர் பொதிந்துள்ள காய்களையும்/கனிகளையும் வைத்திருந்தால் தண்ணீர் வறண்டு பாலைவனமாக உருவெடுக்கும் என்பது 100 சதவிகிதம் தங்களுக்கு உறுதி அளிக்கிறேன். கருவேல மரத்தினால் தான் வறட்சி வருகிறது என்ற தவறான செய்தியை பரப்பி கருவேல மரத்தையெல்லாம் வெட்டி வீழ்த்துகின்றனர். தோழர்களே சிந்தித்து செயலாற்றுங்கள்.
தங்கள் ஊர் / பகுதி மக்களிடம் தண்ணீர் குறைவான பயிராகிய சோளம், கம்பு, ராகி, தினை போன்ற பயிர் வகைகள் மற்றும் அதிகமான உன்னும் அரிசி உணவுகளில் தண்ணீர் குறைவான நெல் ரகங்களை செய்ய தூண்டுங்கள். ஒருவேளை தாங்கள் விவசாயியாக இல்லையென்றால் சோளம், கம்பு, இராகி, தினை, சாமை போன்ற உணவுகளை பயன்படுத்துங்கள். இந்த வகை உணவுகளிலும் சாதம், தோசை, இட்லி, வடை, பிரட், பிஸ்கட், சத்துணவு மாவு, எண்ணை பலகாரங்கள், இனிப்பு வகைகள், சப்பாத்தி மற்றும் ரொட்டிகளை சமைக்கலாம். ஏன் இன்பமயக்கத்தை ஏற்படுத்துகிற பீர் தங்கள் வீட்டீலே தயாரிக்க முடியும். நாம் அதிகமாக பயன்படுத்தினால் விவசாயிகள் நிச்சயமாக விளைவார்கள். நம்மால் என்ன செய்ய முடியும் என்ற சிந்தனையை மேற்கொள்ளுங்கள். கடைக்கு சென்றால் நாட்டு சோளம், கம்பு, இராகி, தினை, வரகு போன்ற குறைந்த தண்ணீர் உணவு வகைகளை கேளுங்கள், உங்கள் தேவை அதிகமாகும் பொழுது கடைக்காரர் ஒட்டுமொத்த விற்பனையாளரிடம் தனது தேவையை கூறுவார், பின்பு அவர் உற்பத்தியாளரிடம் கூறுவார், இப்படி சென்றால் கூடிய விரைவில் மாற்றம் வந்துவிடும். இப்படி தண்ணீர் அதிகமுள்ள உணவு பொருட்கள் விளைவது தடுக்கப்படும். தயவு செய்து தண்ணீர் குறைவான உணவு பொருட்களை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி செய்து அதை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள்.
மாட்டுப்பாலால் வறட்சி ஏற்படுகிறது என்றால் பாலை தவிற்பது நலம். கரும்பு தொழிற்சாலை, பால் தொழிற்சாலை, தக்காளி போன்ற பழ தொழிற்சாலை, தக்காளி மார்க்கெட் எல்லாம் மூடினால் மட்டுமே தண்ணீரை பாதுகாக்க முடியும். அப்படியே வைத்திருந்தாலும் வெளிநாட்டிற்க்கு ஏற்றுமதியாமல் உள்நாட்டு மக்கள் பாதுகாப்பிற்க்காக தண்ணீர் நிறைந்த பகுதியில் தான் பயன்படுத்த வேண்டும். முடிந்தளவு தேங்காய்தூள், மாங்காய்தூள் (அமச்சூர்), தக்காளி தூள் போன்ற உணவு பொருட்களை தேவையான அளவு வீட்டில் செய்து வைத்துகொள்வது தங்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும்.
தண்ணீர் அதிகமுள்ள காய்களும் கனிகளும் தண்ணீர் மிகுந்த பகுதியில் தான் விளைய வேண்டும். நன்செய் / புன்செய் நிலமாக இருந்தால் அதற்கேற்றவாறு விவசாயம் செய்ய வேண்டும். ஆள்துனை கிணறு அல்லது கிணறு இருப்பதற்க்காக புன்செய் நிலங்களில் தண்ணீர் அதிகமுள்ள உணவுப்பொருட்களை விளைந்தால் வறட்சி வராமல் என்ன செய்யும்.
குளிர்பாணங்களுக்கும் மற்றும் தண்ணீர் பாட்டில் விற்பனையை தடை செய்ய வேண்டும். சுத்தமான தண்ணீரை இலவசமாக மக்களுக்கு வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தால் விற்பதற்க்காக தண்ணீரை பயன்படுத்தமாட்டார்கள்.
நீரை பாதுகாக்கும் விதமாக வெளிமாநிலத்திற்க்கும், வெளிநாட்டிற்க்கும் தண்ணீர் பொதிந்துள்ள காய் கனிகளை ஏற்றுமதி செய்வதை தடை செய்தே ஆகவேண்டும். நம் நாட்டில் உள்ள மக்களுக்கு குடிப்பதற்க்கு கூட தண்ணீர் கொடுக்காமல் வெளிநாட்டிற்க்கு எதற்க்கு ஏற்றுமதி?
மேற்கு தொடர்ச்சி மலை பொன்ற இடங்களில் இயற்கையை அழிக்கும் விதமாக தேயிலை தோட்டம், உருளை கிழங்கு தோட்டம் அமைப்பதை தடை விதிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நம் நாட்டிற்க்கு மழை நன்றாக பொழியும்.
எந்த பகுதியிலிருந்து தண்ணீர் நம் நிலத்திற்க்கு வருகிறதோ அந்த பகுதிக்கு நம் நிலத்தில் விளைந்த உணவுகளை ஏற்றுமதி செய்யலாம். அதை விட்டு தண்ணீர் பாய்ச்சில்லாத பகுதியிலிருந்து விளைந்த உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய கூடாது. கேரளாவிலிருந்து தேனி, மதுரை மாவட்டங்களுக்கு தண்ணீர் வருகிறது என்றால் தேனி, மதுரை மாவட்ட பகுதியிலிருந்து கேராளவிற்க்கு திரவ உணவுகள் செல்ல வேண்டுமே தவிர சேலம், தர்மபுரி, கிருஷ்னகிரி பகுதியிருந்து கிடையாது. அதே போன்று சீனா நாட்டிலிருந்து இந்தியாவிற்க்கு தண்ணீர் வருகிறதென்றால் சீனா தேசத்திற்க்கு உணவுகளை ஏற்றுமதி செய்யனுமே தவிர அமெரிக்க/ ஐரோப்பாவிற்க்கு கிடையாது. குறிப்பிட்ட அளவு தானியங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அப்பகுதி மக்கள் மகிழ்ந்து தண்ணீருக்கான எந்த தடையும் விதிக்க மாட்டார்கள்.
அதிக தென்னை, மா மரங்கள் வறட்சிக்கு காரணம் என்று ஒரு தென்னை மரத்தையாவது வெட்ட விவசாயிக்கு மனம் வருமா. நிச்சயமாக வராது தோழர்களே. அதனால் இதனை சூழ்ச்சி செய்து தான் நிறைவேற்ற முடியும். ஒரு ஏக்கருக்கு ஐந்து தென்னை மரங்களுக்கு மேல் இருந்தால் வரி விதிக்க வேண்டும். இளநீர், தேங்காயின் விளையை மிகவும் குறைத்து, தண்ணீர் பொதிந்துள்ள பயிர்/ மரம் வகைகளுக்கு விளைந்தால் நஷ்டம் ஏற்படுகிற மாதிரி அதிகமான வரி வசூல் செய்ய வேண்டும். இப்படியும் தண்ணீரை பாதுகாக்கலாம்.
சும்மா இருப்பவர்களால் தான் இந்த பூமி பாதுகாப்பாக உள்ளது என்று பெரியோர் ஒருவர் வீடியோ பதிவில் கூறியிருந்தார், நம்பவில்லை அப்பொழுது, அனால் இன்று அது தான் உண்மை. அதிகமாக உழைப்பவர்களால் தான் இயற்கை சுரண்டப்பட்டு உயிரினமே தகுதியில்லாத இடமாக மாறியுள்ளது. நிற்காதே ஓடு, ஓடுவது முள்ளல்ல உன் வாழ்கை போன்ற வாசகங்களை சொல்லி நிற்காமல் ஓடி என்ன சாதித்தோம். சுடுகாடு தான் மிஞ்சிருக்கிறது. அதையும் சுரண்டிவிடலாமா! ஓடுவது முள்ளல்ல உன் வாழ்கை போன்ற வாசகம் ஆன்மீக பயனத்துக்கு சொல்லப்பட்டது போல் தெரிகிறது அதை புறப்பொருளை நோக்கி சென்றதால் இயற்கை பாதிப்படைந்துள்ளது.
எதற்க்காக எட்டு மணி நேரத்திற்க்கு மேல் வேலை வாங்கி மன அழுத்தத்தை உருவாக்குகின்றனர். தங்கள் மூலம் வருமானம் ஈட்டுவது தான் அவர்களின் கனவு. எப்படி என்றால் மன அழுத்தம் உருவான பின் உங்களுடைய சிந்தனை நன்றாக வேலை செய்யாது. மன அழுத்தம் வந்தவுடம் கெட்ட குணங்களும் வருகிறது. பல விதமான வியாதி வந்தால் மருத்துவ உலகத்திற்க்கு லாபம் வரும், அதன் மூலம் பல விதமான பொறியியல் தொழிற்நுட்பங்கள், பல விதமான தொழிற்சாலைகள், புது புது வியாதிக்கான கல்விப்பாடப்பிரிவுகள் உருவாகும். ஒரு மாயை ஆன தோற்றத்தை உருவாக்கி லாபத்தை பல வழிகளில் ஈட்டுகின்றனர். அதிகமான வேலை செய்வோர்க்கு அதிகமான பணம் கொடுக்கபடுகிறது, இதனால் அவர்கள் பணத்தை கொண்டு பொருளும் பொன்னும் வாங்குகின்றனர். அதை பார்த்து மயங்கி மற்றவர்களுக்கும் ஆசையால் உந்தப்பட்டு நாமும் அதிகமாக உழைக்க ஆரம்பித்து மாயையில் மாட்டிகொள்கிறோம். அந்த மாயையில் விளைந்தது அறிவின்மை, நோய், துக்கம், தூக்கமின்மை, பொறாமை, மிக முக்கியமானது வறட்சி போன்றவையே. நாம் அதிகமாக உழைப்பதால் தானே இப்படி மாயையில் மாட்டி கொள்கிறோம். அதனால் அதிகமாக உழைக்காமல் ஒற்றுமையோடு எளிமையான வாழ்கையை வாழ்வதன் மூலம் வறட்சியிலிருந்து மீட்டு விடலாம்.
வறட்சிக்கு வஞ்சம், பொறாமை, பொய், கோபம் போன்ற குணங்களும் ஒற்றுமையின்மையும் ஒரு காரனம். இந்த குணங்களை வளரவிடாமல் செய்வது மிகவும் சிறந்தது. ஒவ்வொரு பகுதி / ஊர் / கிராமத்திலும் ஒற்றுமையை வளர்க்ககூடிய விளையாட்டுகளை ஊக்குவித்தால் அதாவது கால்பந்து, கூடைபந்து கபடி, கோகோ, கயிறு இழுக்குதல், கூட்டாக சேர்ந்து பொறுமையாக இலக்கை அடையக்கூடிய வேவ் ஸ்டரிச்சிங்( wave stretching ) போன்று விளையாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டம் போன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்கவேண்டும். தொலைக்காட்சியில் இது போன்ற விளையாட்டுகளை பார்த்தால் நாம் தனிமைபடுத்தபட்டு ஒற்றுமை குறையும். நாமாகவே விளையாடினால் ஒற்றுமை வரும். அதேபோல் சத்சங்கம், கூட்டு பஜனை, கூட்டு தியானம் போன்ற பக்தியையும் ஊக்குவிக்கவேண்டும். விளிப்போடு மாற்றத்திற்க்கான பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும்.
தற்பொழுது அரசாங்க பள்ளியில் கட்டணம் வசூலலிப்பது கிடையாது, ஒரு மாணவன் எந்த விதமான குருதட்சனையும் கொடுக்காமல் கல்வியை கற்றால் குருவுக்கும் துரோகம், கற்கும் கல்வியும் சரியாக அமையாது. அதனால் தனியார் பள்ளி அளவில் இல்லாமல் குறைந்த அளவில் பணத்தை வசூல் செய்ய வேண்டும். அதை வைத்துக்கொண்டு பள்ளியின் கல்வி தரத்தை உயர்த்தி தனியார் பள்ளியின் மீதுள்ள மோகத்தை குறைத்து பெற்றோர்களின் சுமையையும் குறைத்தால் அதிகமாக உழைக்கவேண்டிய நிர்பந்தமில்லாமல் இயற்கை பாதுகாக்கப்படும். மற்றும் ஐந்து வயதுக்கு குறைவான மாணவர்களை சேர்க்கும் சிறுவர் பள்ளிகளை மூட வேண்டும். மனிதர்கள் செய்ய வேண்டிய வேலையை இயந்திரங்கள் செய்வதால் 80 சதவிகித மக்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகும். பாடத்திட்டங்கள் பெரும்பாலும் இயந்திரங்களாக இருக்கும்பொழுது இயற்கையை எப்படி பாதுகாக்க முடியும். தேவையில்லாத பாட திட்டங்களை இனிமேல் குறைப்பது மிகவும் நல்லது.
நாம் நன்றாக உழைத்தும் மூன்று வேலை சத்தான உணவுகளை எடுத்தும் பல வியாதிகள் வர காரணம் என்ன. கல்வி கற்கும் பள்ளி / கல்லூரிகளிலும், வேலை செய்யும் இடத்திலும் மூன்று வேலை உணவு சாப்பிட வேண்டும் என்ற சிந்தனையை ஊட்டுகின்றனர். ஆனால் எப்படி சாப்பிட வேண்டும் என்ற சிந்தனை மட்டும் சொல்லித்தருவதில்லை. காலை 8 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி என்ற பட்டியலை தயாரிக்கின்றனர். மூன்று வேலை உணவை பசிக்காமல் சாப்பிடுவதாலும் அவசரமாக விழுங்குவதாலும் உடலில் சக்தி சேராமல் வியாதி உருவாகிறது. இந்த உணவு விசயத்திலிருந்து தான் அரசியல் ஆரம்பம் ஆகிறது போல. உணவுகளை பசி எடுத்த பின் 40 தடவை நன்றாக மென்று அரைத்து சாப்பிட்டால் உடலுக்கு சக்தியும் சேரும் வியாதிருந்தாலும் தானாகவே குறையும். சக்தி உடலுக்கு சேருவதால் அடுத்தவேளை பசி எடுக்கும் நேரம் அதிகமாகி, மூன்று வேளை உணவு பழக்கத்திலிருந்து இரண்டு வேளை பழக்கமாக்கபடும். சரியான முறையில் சாப்பிடுவதால் எல்லா விதத்திலும் செலவுகள் குறைக்கபட்டு இயற்கையை பாதுகாக்கலாம்.
நாம் அதிகமாக உழைக்காமலும் இயற்கையை பாதுகாக்கும் விதமாக நம் தொழில்முறையை மாற்றி அமைக்க வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்திற்க்கும் பொதுவான பெரிய அளவில் விசேசத்திற்க்கு தேவையான சில மண்டபங்களை கட்டினால் தேவையில்லாத உழைப்பு தடுக்கப்படும். பல மக்கள் தங்கும் வன்னம் ஆடம்பரமான பெரிய வீடுகளை கட்ட ஏற்பாடு செய்தால் தனக்காக யாரும் வீடு கட்ட முன்வரமாட்டார்கள். பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் போல் அதிகமான கட்டணம் வசூல் செய்யாமல் உயர்ந்த தரமான கல்வியை குறைந்த கட்டணம் வசூல் செய்து அரசாங்கமே நடத்த வேண்டும். இதையெல்லாம் செய்தால் தனக்காக எதும் செய்யாமல் பொதுப்பணிக்களுக்கு தங்கள் வாழ்க்கையை செம்மையாக்கலாம். தேவையில்லாத மிகப்பெரிய உழைப்பு தடுக்கபடும். வறட்சியிலிருந்து மீட்டு விடலாம்.
நான்கு வீடு தனித்தனியே கட்டாமல் ஒரே வீட்டில் நான்கு வீட்டிற்க்கும் தேவையான வசதிகளை அதாவது ஒரு நீச்சல் குளம், சிறிய பூந்தோட்டம், தியான மண்டபம் கட்டினால் தனிகுடும்பத்திற்க்கான செலவு குறைக்கப்படும். இரண்டு அல்லது மூன்று ஊருக்கு மேல் சேர்ந்து பள்ளி, கல்லூரியை கட்டுங்கள். யாரெல்லாம் பணத்தை முதலீடு செய்தார்களோ அவர்களின் பணம் இரண்டு மடங்கோ அல்லது மூன்று மடங்கு லாபம் வந்தவுடன் முதலீட்டார்களை வெளியேற்றி பொதுத்துறையாக மாற்றுங்கள். அப்படி ஆரம்பித்த பள்ளி கல்லூரிகளில் தரமான கல்வி முறையை அமல்படுத்தவேண்டும்.தாங்கள் வாழும் பகுதிக்கு பொதுக்கல்விக்கூடங்களாக மாறியுள்ளதால் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களுக்கு செலவு குறைக்கப்பட்டால் இயற்கையை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.
ஒரு 500 குடும்பம் சேர்ந்து ஐந்து கோடி மதிப்பிலான ஒரு பள்ளியை கட்டினால் ஒவ்வொரு குடுப்பத்திற்க்கும் ரு.40,000 வரும். இது வாழ்வில் ஒரு முறை செய்யும் முதலீடு. தங்கள் பிள்ளைகள், பெயரன்கள், கொள்ளுப்பெயரன்கள் முதற்கொண்டு எல்லாமே படிக்கிலாம். ஒரு பள்ளியில் 20 ஆசிரியர்களை மாதம் 20,000 சம்பளத்திற்க்கு வேலையில் நியமிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வருடத்திற்க்கு 10 மாதம் என்றால், பள்ளியின் ஆசிரியர்களின் செலவு மாதத்திற்க்கு 4 லட்சம் என்றால் கூட40 லட்சம் வரும். இன்னும் 10 லட்சம் மற்ற செலவுகளுக்கு என்றால் கூட மொத்தம் 50 லட்சம். ஒரு 500 மாணவர்கள் உள்ளனர் என்றால் ஒருவருக்கு வருடத்திற்க்கு ரு.10,000 தான் வரும். இது போன்ற திட்டங்கள் தீட்டுவதன் மூலம் இயற்கை பாதுகாக்கபடும். இன்று பல பள்ளிகள் வருடத்திற்க்கு லட்சக்கணக்கில் மாணவர்களிடம் வாங்குகின்றன். இதனால் குடும்பத்தின் பாரம் அதிகமாகி ஏதொ ஒரு விதத்தில் இயற்கையை அழிக்கிறார்கள். இதற்க்கு சரியான விகிதத்தில் தீர்வு காண வேண்டும்.
நாம் இன்று கல்வித்துறைகளில் அதிகமான பட்டங்கள் பெற்றும் தேவைக்கு மிகுந்த பொருள் இருந்தும் நிம்மதியான வாழ்கை இல்லை. எல்லா வசதிகளும் இருந்தும் நிம்மதி இல்லை என்றால் ஏதோ ஒரு கல்வி முறையை நாம் கற்காமலும் இருக்கிறோம் என்று அர்த்தம். அது யோகாவை தவிர எதுமில்லை. யோகாவை பயிற்ச்சி செய்வதன் மூலம் கடவுளின் காட்சி கிடைக்குமோ இல்லையோ நிச்சயமாக எளிமையாகவும் நிம்மதியாகவும் வாழலாம்.
தங்கள் பகுதி மக்கள் ஒற்றுமையுடன் சேர்ந்து பல வியாபாரங்களில் அதாவது அதானி போன்றோர் முதலீடு செய்த சூரிய ஒளியின் மூலம் பெறப்படும் மின்னாற்றல், சூரிய சமையல், காற்றாலை, சான எரிவாயு ( Bio Gas) போன்ற அதிக மாசில்லாத துறைகளில் முதலீடு செய்தால் இயற்கையை அழிக்கும் மீத்தேன், நிலக்கறி பொன்ற திட்டங்களை அப்புறப்படித்திவிடலாம். கல்வித்துறைகளில், அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் போன்ற வியாபாரங்களில் முதலீடு செய்தால் தனிப்பட்ட மனிதனின் செலவுகள் குறைக்கப்பட்டு இயற்கையை பாதுகாக்கலாம்.
ஒற்றுமையுடம் வியாபாரம் தொடங்கி புது இனத்தை அல்லது சாதியை வளர்த்திட போரிங்க. ஏற்கனவே இருக்கிற சாதியாலே நிறையை பிரச்சனை வருகிறது. வியாபாரக்கூட்டங்களுக்குள்ளும் ஒற்றுமை இருப்பதே இந்த நாட்டிற்க்கு நலம்.
பரிசு பொருட்கள் / மொகி வைப்பதும் வாங்குவதும் தவிற்பது மிகவும் நல்லது. இல்லையென்றால் வறட்சி அதிகமாகும். மொகி வாங்கவில்லை அல்லது வைக்கவில்லை என்றால் மிக குறைந்த நபர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு குறைந்த செலவில் நிகழ்ச்சியை நடத்திவிடலாம். ஒரு வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தால் பிரச்சனையை எளிதில் சமாளித்து விடலாம். ஆனால் ஒன்பதில்ல நடக்கிறது. பிறந்த குழந்தை பார்பதற்க்கு, காதுகுத்தி மொட்டை அடித்து பெயர் வைப்பது, வருடம் வருடம் பிறந்த நாள் கொண்டாடுவது, பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் பூப்பெய்து விழா, கல்யாண கச்சேரி, பெண்களுக்கு ஏழு மாதம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு வீட்டீல் ஒருவருக்கே இவ்வளவு நிகழ்ச்சி என்றால் மற்ற நபர்களுக்கும் நடக்கும். மொகி அல்லது பரிசுபொருட்களை வைத்தால் கூட்டம் சேர்ந்துகொண்டே இருக்கும். அழைப்பு விடுத்தால் விருப்பமிருந்தாலும் இல்லையானலும் தங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். இது போன்ற நிகழ்சிகளால் தனிக்குடும்பத்தின் செலவு அதிகமாகி இயற்கை சுரண்டப்படுகிறது.
பெண்களுக்கு ஆண்களுக்கு என்று தணித்துவமான உடைகளை தயாரிக்கமால் எல்லோருக்கும் ஒரே விதமான ஆடைகளை தயாரித்தால் ஆடைமீதான மோகம் குறைந்து விடும். பெண்களுக்கும் ஆண்களுக்கும் தங்களுடைய உடல் பாகங்களால் கூச்சம் வருவதை சிறுவயதிலே நிர்வானப்படுத்தி கூச்சத்தை கிள்ளி எறிய வேண்டும். ஆண்களானாலும் பெண்களானாலும் குற்றம் புரிந்தால் நிர்வாணத்தை தண்டனையாக கொடுக்க வேண்டும். இதனாலும் கூச்சம் குறைக்கப்பட்டு தேவையில்லாத உடை அணியும் பழக்கம் குறைந்து விடும். ஆடைகளை விளம்பரபடுத்தும் நடிகை நடிகர்கள் வீட்டீலும் நாட்டிலும் கூச்சமே இல்லாமல் நிர்வானமாக உளா வருகிறார்கள். ஆனால் அந்த விளம்பரத்தை பார்க்கும் நாம் குளிக்கும் பொழுது கூட ஆடையை துறப்பதில்லை. வெப்ப சூழ்நிலையான நாடுகளில் ஆடை பழக்கம் மிகவும் குறைவு. ஆனால் நம் நாட்டிலோ தூங்கும் பொழுதும், குளிக்கும் பொழுதும் உடை அணிகிறோம். மற்ற நாடுகளில் உள்ளது போல் கடற்கரை, பூங்கா போன்ற இடங்களில் நிர்வானத்தை ஊக்கப்படுத்த வேண்டும். காசியில் நிர்வாணமாக அகோரிகள் நடந்து செல்வதை போல் ஒவ்வொரு ஏறியாவுக்கும் சென்றால் ஆடை பழக்கம் குறைந்து விடுமோ! சில நேரங்களில் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் ஆண்களும் பெண்களும் நிர்வான போரட்டம் நடத்துகிறார்கள் என்று சொல்வதுண்டு. அப்ப அது தவறு என்று சிந்தித்தேன். ஆனால் வறட்சியை பார்க்கும் பொழுது அது சரி என்று தோன்றுகிறது. சிறு குழந்தைகளுக்கு ஆடை மோகத்தை ஏற்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. ஐம்பது வயதை தாண்டியவர்கள் தங்கள் ஆடைகளை கொஞ்சம் கொஞ்சமாக துறப்பது மிகவும் நல்லது என்று தோன்றுகிறது. ஆடைகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து வாழத்தகுதில்லாத இடமாக மாறிவிட்டது.
தமிழ்நாட்டில் நிலத்தடியில் நிலக்கறி போன்ற கனிமவளங்கள் அதிகமாக உள்ளதென்றும் அதைவைத்துக்கொண்டு இந்தியாவிற்க்கே மின்சாரம் கொடுக்கலாம் என்ற செய்தியை படித்தேன். நிலக்கறி எடுக்கவேணுமென்றால் நிலங்களில் தண்ணீர் வறட்சி செய்து மக்களை அப்புறப்படுத்தவேண்டும். யாருக்கு தெரியும் இதுவும் நடக்கலாம், அதற்க்கேற்றவாறு தான் அமைகிறது எல்லா நிகழ்வுகளும். தவறான கல்வி முறைகளை போதித்து, சாதி மத வேற்றுமைகள் ஏற்படுத்தி மனித ஒற்றுமையை குலைத்து நம் எண்ணங்களை தவறான பாதையில் திசை திருப்பி அறிவை மழுங்கடித்து நம் நிலங்களையும் வளங்களையும் சுரண்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியாக பிரிக்கப்பட்டு ஆராயிச்சி செய்து சூழ்ச்சி நடந்துள்ளது. நம் எண்ணங்கள் அமைதியான நிலையில் இருந்தால் மட்டும் நல்ல பழக்கம் ஏற்படும். அப்படி நம் மனம் அமைதி ஏற்பட யோகா/ கடவுள் பக்தியை தவிர வேறுவழியில்லை. எந்த மதமாக/ சாதியாக இருந்தாலும் தினமும் காலையிலும் மாலையிலும் அரை மணி நேரத்திற்க்கு மேல் கடவுள் வழிபாடு செய்யுங்கள். சரியான முறையில் கடவுளை வழிபட்டால் உடல்பலம், மனபலம், தைரியம், தன்நம்பிக்கை, அமைதி, இயற்கை அறிவு நமக்கு கிட்டும். அதை வைத்துகொண்டு வஞ்சகர்களையும்/ சூழ்ச்சிசெய்பவர்களையும் தடுக்கலாம்.
ரத்தன் டாடா, அம்பானி சகோதரர்கள், பில்கேட்ஷ் போன்ற பணக்காரர்களை தொலைக்காட்சியிலும் பாடபுத்தகத்திலும் சொல்லக்கூடாது. அப்படியே சொன்னாலும் அவர்கள் கண்டுபிடித்த விசயங்களை தான் கூற வேண்டும். பணத்தை முன்னிலை படுத்தி மக்களை ஊக்குவிக்ககூடாது. இத்தனை நாட்கள் சொன்னது வேறு. பணம் வைத்தவர்களை பற்றி இனிமேல் பேசுவதையோ அல்லது பிரபலப்படுத்துவதையோ தவிர்க்கவேண்டும். இனி எழிமையான வாழ்க்கையும், அமைதியையும் ஊக்குவிப்பவர்களை தான் அதிகாரத்தில் அமர்த்த வேண்டும்.
குறைந்தது ஐந்து வருடத்திற்க்காவது தக்காளி சந்தை, கரும்பு ஆலை அது சிறியதாக இருந்தாலும், பழச்சாறு தொழிற்சாலை, குளிர்பான நிறுவனங்களை, பால் தொழிற்ச்சாலை எல்லாம் மூடினால் தான் நம் மாநிலத்தை வறட்சியிலிருந்து மீட்டெடுக்க முடியும். இல்லையென்றால் பல விதமான உயிர் பலியாவதை தடுக்கமுடியாது. திரவமான எந்த பொருளும் ஒரு மாநிலத்தை விட்டு தாண்ட கூடாது. 2016ம் வருடம் வந்த படம் பெரும்பாலும் மனிதனை மனிதன் அடித்து கொல்லும் கதையாக இருந்தது. விரைவில் நடப்பதற்க்கான வாய்ப்பு 100 சதவிகிதம் உள்ளது.
ஒரு நகரத்திலிருந்து முதலில் ஐந்து கிமீ சுற்றளவில் தான் வறட்சி ஏற்படுகிறது, பின்பு 10 கிமீ, பின்பு 15 கிமீ என்று மலை பிரதேங்கள் வரையில் செல்கிறது. சாலை வசதிகள் உருவாக உருவாக தான் வறட்சி ஏற்படுகிறதா!. சிந்தனை செய்வது மிகவும் நல்லது.
குளங்கள், ஏரிகள், அனைகள் புதுபிக்க படவேண்டும். குளங்கள், ஏரிகளில் விவசாயிகள் மண் எடுத்துக்கொள்வதை அனுமதி தரவேண்டும். ஆற்றுமணலை தவிர மற்ற எல்லா இடங்களிலும் மண் விவசாயத்திற்க்காக பயன்படுத்த அனுமதி தர வேண்டும். எங்கு முடியுமோ அங்கெல்லாம் தண்ணீர் தேங்குவதற்க்கு குளிகளை தோண்ட ஊக்குவிக்க வேண்டும்.
எல்லா மக்களுக்கும் எப்படி உணவை சாப்பிட வேண்டும் என்ற விளிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளிலும் மற்றும் வேலை செய்யும் இடத்தில் ஒரு மணி நேரத்திற்க்கு யோகாவை கட்டாயமாக்க வேண்டும். அவர்கள் தூங்கினாலும் பரவாயில்லை. இங்கு அறிவும் அன்பும் வளர்ந்தால் தான் வறட்சியை தாங்கிகொள்ள சக்தி வரும்.
ஒவ்வொருவருக்கும் பின்னடி அரசியல் இருக்கிறது. நாம் தினமும் மகிழ்ச்சியாகவும் உடல்நலத்துடனும் வாழவேண்டும் என்ற ஆசை இருந்தால் அதற்க்கான சிந்தனையை மேற்கொள்ளுங்கள். அரசியலில் மாற்றம் வேண்டுமென்றால் முதலில் நம்மிடம் மாற்றத்தை உருவாக்குவோம்.
நாம் பொருள் ஈட்டுவதில் ஆர்வமுள்ளதால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் இயற்கை அழிவுக்கு உடைந்தையாக இருந்திருப்போம். மற்றவர் தான் தவறு செய்து விட்டார் என்று ஒவ்வொருவரும் புலம்புவதற்க்கு பதில் மாற்றத்திற்க்கான பாதையை தேர்ந்தெடுப்பது அவசியமாக உள்ளது. எல்லோரும் இயற்கையை நேசிக்கும் விதமாக எழிமையான வாழ்கை முறைகளை தேர்ந்தெடுத்தால் மீண்டும் தண்ணீர் நிறைந்த புன்னிய பூமியாக மாறிவிடும். நம்மாள் முடிந்த அளவு முயற்சி செய்வோம். நாம் ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவே இப்பூமிக்கான கட்டளையாகும்.
வறட்சி வந்துகொண்டிருக்கிறது. நாம் அதை எதிர்கொள்ள தேவை உள்ளது. எம்மனதிற்க்கு வந்த கருத்துகளை பதிவு செய்துள்ளேன். பிடித்திருந்தால் கருத்துகளை ஆழமாக சிந்தியுங்கள். அதை மற்றவருடன் பகிருங்கள். இதுபோன்று மாற்றங்களை செய்தாலே இமயம் முதல் குமரி வரை எங்கும் பசுமை ஓங்கும். மாற்றங்களுக்கான தங்கள் கருத்துகளும் வரவேற்க்கபடுகின்றன. மாற்றம் தேவைப்படுகிறது. யோசிப்போம். செயல்படுவோம். உயருவோம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு
விவசாயம் செய்தால் வரட்சி வரும் என்றால் நூறு வருடங்களுக்கு முன்பே வறட்சி வந்திருக்கும். நீ எல்லாம் ஆராய்ச்சி பன்ற.மழை தான் நம் நீர் தேவையை பூர்த்தி செய்யும்.அதை சேமிக்கப்படவில்லை என்றால் தான் வறட்சி வரும்.மழை வரவேண்டும் என்றால் மரங்கள் வளர்க்க வேண்டும்.
Vivasayam pana kudathunu solra ne lam enna thingara…yarukita kasu vanguna.
water is removed from bore well but not recharged the earth
ஆம் ஐயா. இயற்கையை மதித்தால் தானாகவே சரியாகும். நுன்னுயிர் கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லியை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். தண்ணீர் குறைவாக தேவைப்படும் உணவு இரகங்களை விளைந்தால் மீண்டும் பூமியில் நீர் சேமிக்கப்படும்.