ஜையில் தண்டனை எப்படி இருக்க வேண்டும்? ஜையில்ல தண்டனையை அனுபவிக்கும் பொழுது அவனுக்கு குற்ற உணர்ச்சி வரவேண்டும் அளவுக்கு தண்டனை இருக்க வேண்டும். இரண்டாவது இனிமேல் அந்த தவறை செய்ய கூடாது அளவுக்கு தண்டனை இருக்க வேண்டும். எப்படிபட்ட தண்டனையாக இருந்தாலும் உயிரை எடுக்க கூடிய தூக்கு தண்டனை போல் எதுவும் இருக்க கூடாது.தூக்கு தண்டனை யார் கொடுக்க வேண்டும் என்றால் யார் ஒருவர் தண்டனையை அனுபவிக்கும் மனித உருவத்தையும் மனதையும் மீண்டும் உருவாக்கும் தகுதி பெற்ற ஒருவர் தான் கொடுக்க வேண்டும். இது சாத்தியம் இல்லாத விசயம். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு இடையில் உயிரை கொல்ல கூடிய செயல்கள் நடக்கலாமே தவீர ஒரு அரசாங்கத்தில் நடக்ககூடாது. ஒரு உயிரை எடுக்க கூடிய தகுதி அவனுக்கே இல்லாதா பொழுது எப்படி மற்றவர்களுக்கு அந்த உரிமை உண்டு? இந்த உலகத்தில் எவனுக்கும் அந்த அதிகாரம் கிடையாது. அதனால் தூக்கு தண்டனை போன்ற உயிரை கொல்ல கூடிய எந்த தண்டனையும் கூடாது.
தண்டனையை அனுபவிக்கும் கைதிக்கு மூன்று வேளை உணவு கூடாது. அவனுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லி தர வேண்டும். இரண்டு வேளை உணவு தான் கொடுக்க வேண்டும். கடுமையான தண்டனை என்றால் ஒரு வேளை தான் கொடுக்க வேண்டும். எடுத்தவுடன் இந்த ஒரு வேளை உணவை தண்டனையாக கொடுக்க கூடாது. படிபடியாக உணவை நன்றாக மென்று அருந்த வேண்டும் என்றும் சாப்பிடும் பொழுது தண்ணீர் சாப்பிட கூடாது என்ற கடுமையான விதியை ஜையிலில் இருக்க வேண்டும். நாளடைவில் உடலில் சக்தி சேர்ந்தவுடன் இரண்டு வேளை உணவாகவும் பின்பு ஒரு வேளை உணவாகவும் மாற்ற வேண்டும்.
ஜையிலிருந்து வெளியே வரும் ஒரு கைதி மனித சமுதாயத்துக்கு உதவ வேண்டுமே தவிர உபத்திரவம் செய்ய கூடாது. தண்டனை ஒரு கைதியின் மனத்தில் இருக்கும் அழுக்குகளை வேரோடு நீக்கி மனதை சுத்தம் செய்யும் அளவுக்கு தண்டனை இடம் பெற வேண்டும். யோகத்தை தவிர எந்த தண்டனையும் ஒரு மனிதனின் அழுக்குகளை நீக்க முடியாது. விபாசன போன்ற கடுமையான பயிர்ச்சியை கற்று கொடுக்க வேண்டும். பல மணி நேரம் ஆடாமல் அசையாமல் அமர்ந்த நிலையில் இருக்கவாறு பயிர்ச்சி இருக்க வேண்டும். உணவும் அசைவும் இல்லாதவாறு மாற்ற வேண்டும். கடுமையான குற்றம் புரிந்த ஒருவனுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தான் ஒரு வேளை உணவை கொடுக்க வேண்டும். ஒன்று பசியால் உயிரை விட வேண்டும் அல்லது உடலையும் உயிரையும் பாதுகாக்கும் விபாசன போன்ற பயிர்சியை மேற்கொண்டு உடலுக்கு உணவு தேவைபடாத வன்னம் உடலை பக்குவ படுத்த வேண்டும்.
ஜையிலில் இருக்கும் கைதிக்கு உணவு, உடை, யோக பயிர்ச்சி போன்ற செலவுக்கு கைதியே ஏற்றுகொள்ள வேண்டும். அதற்க்காக கைதியிடம் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் உழைப்பை வாங்க வேண்டும். ஒவ்வொரு சமுகமும் முக்தி என்ற பலனை நோக்கி நகர்கிறது. முக்தி என்றால் விறுப்பு வெறுப்பற்ற நிலை அல்லது நிர்வாண நிலை. அப்படி பட்ட நிலையை அடைவதற்க்கான பயிர்ச்சி தான் யோக பயிர்ச்சி. விருப்பு வெறுப்பு இருந்தால் தான் ஒரு மனிதனுக்கு கொலை, கொள்ளை, கோபம், பேராசை போன்ற தீக்குணகள் வருகின்றன. அதிலிருந்து விடுப்பட அதற்கான பயிர்ச்சியை அழித்து கைதிக்களுக்கு விடுதலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எப்பொழுது ஒரு கைதி தீக்குணகளிருந்து விடுபடுகிறானோஅப்பொழுது தான் ஜையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு
A really good answer, full of raltnoaiity!