பௌவுர்ணமியில் பூமியும் சந்திரனும் மற்ற நாட்களை விட நெருக்கம் அதிகம். இந்த நாட்களில் பெரும்பாலும் இயற்கையின் சீற்றம் கொஞ்சம் அதிகம்.கடற்கரைக்கு சென்று பார்த்தால் கடல் அலைகள் அதிகமாக இருக்கும்.இயற்கையில் உள்ள எல்லா உயிர்களுக்கும் மற்ற நாட்களை விட மாற்றம் நிகலும். இதில் மனிதனும் அடக்கம். பௌவுர்ணமியில் விந்து/நாதம் உடலிருந்து செலவு அதிகமாகும். பலவீனமான உயிர்களுக்கு நிச்சயம் சக்தி வெளியேற்றம் நடைபெறும். மனசக்தியும் சேர்ந்தே விரையுமாகும்.காமம்/கோபம்/பொறாமை ஆகிய குணங்கள் தீவிரமாக வெளிப்பட்டு சில நபர்களுக்கு பைத்தியம்/பித்து பிடித்து விடும்.எதுவுமே நடக்கவில்லை என்று நினைத்தால் உங்கள் நம்பிக்கையாவது குறைத்து விடும். இதைத்தெரிந்து கொண்டுதான் பௌவுர்ணமியில் நம் முன்னோர்கள் பூஜைகள் செய்து மனதை சுத்த படுத்துகிறார்கள் போல. கார்த்திகை தீபம் பௌவுர்ணமியில் கொண்டாடவதற்க்கு இதுதான் காரணம் போல. பௌவுர்ணமியை நல்ல நாட்கள் என்று நினைத்து விட வேண்டாம். தியானம் தெரிந்தவர்கள் இந்த நாட்களையொட்டி தியானத்தை தீவரபடுத்துங்கள்.தியானம் தெரியாதவர்கள் ஆலயத்துக்கு/பள்ளிவாசல்/தேவாலயம் சென்று பக்தியை தீவரபடுத்துங்கள்.நல்ல செயல்களில்/வேலைகளில் மனதை குவியுங்கள். மொத்தத்தில் பௌவுர்ணமி அன்று கடவுளை வழிபடுங்கள். சாதி மதம் பார்க்க வேண்டாம். இந்த நாட்களில் மனதை அமைதி படுத்துவதே சிறந்தது. தேவையில்லாமல் மனதை கிளர்ச்சி செய்ய வேண்டாம்.
பௌவுர்ணமி அன்று எளிதில் சீரணம் செய்யகூடிய உணவுகளை கடைப்பிடிப்பது சிறந்தது. சாத்வீகமான உணவும், ரசமுள்ள உணவான பழங்களை உண்ணுவது மிகச்சிறந்தது.எண்ணங்களை அமைதிபடுத்தகூடிய உணவுகளை கடைப்பிடிப்பது சிறந்தது.கடுகு,வெங்காயம்,பூண்டு,காரசாரமான உணவுகள் ராஜச எண்ண அலைகளை ஊக்குவிக்கும். ராஜசம் அதிகமானால் சக்தி செலவாகி தாமசமாகிய சோம்பல்/தூக்கம் ஏற்படும்.எந்த வகை உணவானலும் நன்றாக மென்று அருந்தி எண்ண அலைகளை சாந்தபடுத்துங்கள்.
அம்மாவாசையன்று இரவில் இருட்டா/கருப்பா இருப்பதால் ஒரு விதமான பயம் நம்முள்ளே ஏற்படுகிறது.கருப்பு எனக்கு வெறுப்பு என்று சொல்லி நம்மை ஏமாற்றி கொள்கிறோம். எங்கும் பறந்தும் விரிந்தும் இருப்பது கருப்பு தான்.இரவில் நன்கு கண்ணை திறந்து பாருங்கள். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியன் தான். நட்சத்திரத்துக்குயிடையில் எவ்வளவு இடைவெளி(கருப்பு) என்று பாருங்கள். சந்திரனும் சூரியனும் நம்மை மாயையில் வீழ்துகிறது.சிவலிங்கம் கருப்பா இருப்பதற்க்கு காரணம் இது தான் என்று பெரியவர்களின் கூற்று.
விதையை மூன்று அம்மாவாசை வெயிலில் காய வைத்தால் விதை நேர்த்தி(வீரியம்) ஆகிவிடும்.அதுப்போல விந்து நாதம் வீரியம் அடைவது அம்மாவாசை அருகில் தான் போல.அம்மாவாசையை கெட்ட நாள் என்று நினைத்து விட வேண்டாம்.இதுவே நல்ல நாள். விந்து/நாதம் உடலிருந்து செலவு குறைவு.மனதிற்க்கு பாதிப்பு மிகவும் குறைவு. யோகம் பயில ஆரம்பிப்பவர்க்களுக்கு இதுவே நல்ல நாள். அதனால் யோகம் கைகூடுவற்க்கு வாய்ப்பு அதிகம்.இதனால் தான் தீபாவளியை அம்மாவசையில் கொண்டாடுகிறமோ?இருக்கலாம் சொல்ல முடியாது.
இதையெல்லாம் பார்த்தால் பௌவுர்ணமியில் பேய் பிடிக்குது,அம்மாவாசையில் பேய் ஓட்டினால் சீக்கிரம் போய் விடும் போல.அப்படிதான் நடைமுறையில் இருக்கோ? இதையெல்லாம் தெரிந்துகொண்டு தான் சோதிடர்களும்/மந்திரவாதிகளும் அம்மாவாசையில் பூஜை நடத்துகிறர்களோ?
யோகம் நடைபெறுகிறவர்களுக்கு நல்ல நாள் கெட்ட நாள் என்று கிடையாது.யோகம் நடைபெறாதவர்களுக்கு நல்ல நாள் கெட்ட நாள் உண்டு.அவர்களுக்கு பக்தி அவசியம்.
அக்கால கல்விக்கூடங்களில் பௌவுர்ணமிக்கு மூன்று நாட்கள் விடுமுறை.அம்மாவாசைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. எதுக்கு என்றால் கடவுளை நோக்கி பயணம் செய்வதற்கும்,சக்தியை சேமிப்பதற்க்கும்.சக்தி இருந்தால் தான் அறிவு நன்றாக வேலை செய்யும்.சக்தி இல்லையென்றால் சிவனை நோக்கி செல்ல முடியாது. சக்தி தீவிரமடையும் பொழுது மனிதனுக்கு விடுதலை கிடைப்பதற்க்கு வாய்ப்பு அதிகம்.
ஞாயிறு/சனி கிழமைகளில் விடுமுறை கிடையாதாம். பிரிட்டிஷ் அரசு நம் பாரத நாட்டின் கலச்சாரத்தை சீர்குலைத்து அடிமை படுத்துவதற்காக ஏற்படுத்தின ஒரு மாற்றம்.இன்றும் நடைமுறையில் இருப்பது ஒரு வருத்தம் தான். இதை மாற்றுவதே சிறந்தது. மாற்றலாம் இப்ப எட்டு நாள் விடுமுறை.மாற்றினால் ஐந்து நாள் தான் விடுமுறை வருகிறது.சரி பௌவுர்ணமிக்கு நான்கு நாள், அம்மாவாசைக்கு நான்கு நாள் விடுமுறை என்று கேட்டு வாங்குவோம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு